உங்களுக்கு தலைவலி ரொம்ப இருக்கா? அதை உடனடியாக சரிசெய்ய இதோ சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

தலைவலியை அனுபவிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். தலைவலி ஒருவருக்கு வந்தால், எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. அந்த அளவில் தலைவலி இருக்கும். சிலருக்கு தலைவலி இன்னும் பயங்கரமாக இருக்கும். இப்படிப்பட்ட தலைவலிக்கு பலரும் மாத்திரையை எடுப்பார்கள்.

Granny Remedies For Headache

ஆனால் மாத்திரையை அடிக்கடி சாப்பிட்டால், அதனால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க, கண்ட கண்ட மாத்திரையைப் போடுவதைத் தவிர்த்து, நம் பாட்டிமார்கள் பின்பற்றிய வைத்தியங்களை மேற்கொள்ளுங்கள்.

சரி, இப்போது தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் சில பாட்டி வைத்தியங்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெற்றிலை

வெற்றிலை

வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினைப் பயன்படுத்தி கிராம்பை பேஸ்ட் செய்து, நெற்றியில் தடவினால், தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையில் தலைவலியைப் போக்கத் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது. ஆகவே தலைவலி இருக்கும் போது பசலைக்கீரையை அரைத்து நெற்றியில் தடவினால், தலைவலி நீங்கும்.

சாமந்தி இலைகள்

சாமந்தி இலைகள்

சாமந்தி இலைகளை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை தலை வலிக்கும் போது நெற்றியில் தடவினால், தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

துளசி

துளசி

துளசி இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து குடித்தால், தலைவலி குணமாகும்.

ஆப்பிள்

ஆப்பிள்

தலைவலி இருக்கும் போது, ஆப்பிளை உப்பு தொட்டு சாப்பிட, தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Granny Remedies For Headache

Here are some granny remedies for headache. Read on to know more...
Story first published: Friday, January 13, 2017, 17:51 [IST]
Subscribe Newsletter