உயர் இரத்த அழுத்தம் இருக்கா? இந்த உணவை மட்டும் மறந்தும் தொடாதீங்க!

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

உயர் இரத்த அழுத்தம் ஒரு அமைதியான உயிர்க்கொல்லியாகும். இது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு காரணமாகிறது. உங்களது மூதாதையர்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால், அதிலிருந்து உங்களை காத்துக்கொள்ள உங்கள் வாழ்க்கை முறையில் சில மாறுதல்களை செய்ய வேண்டியது அவசியம்.

நீங்கள் விரும்பி சாப்பிடும் சில உணவுகள் உங்களது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாக இருக்கலாம். உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள நீங்கள் சாப்பிடக்கூடாத சில உணவுகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊறுகாய்

ஊறுகாய்

சிறு வயதிலேயே உயர் இரத்த அழுத்தம் வர ஊறுகாய் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இதில் அதிக அளவு உப்பு அடங்கியுள்ளதால், ஊறுகாயை தவிர்க்கலாம் அல்லது குறைந்த அளவு சாப்பிடலாம்.

பேக்டு (Baked) உணவுகள்

பேக்டு (Baked) உணவுகள்

இந்த உணவுகளில் அதிகமாக உப்பு அல்லது சோடியம் சேர்க்கப்பட்டிருக்கும். இவை அவற்றின் சுவையை அதிகப்படுத்துவதற்காக சேர்க்கப்படுகின்றன. நீங்கள் உயர் இரத்த அளவை குறைக்க விரும்பினால் இதை கைவிடுவது நல்லது.

கேக்

கேக்

கேக்குகள் மிக அதிக அளவு சக்கரையை கொண்டுள்ளன. கேக்குகள் மற்றும் குக்கீஸ்களில் உப்பு மற்றும் சக்கரை சுவைக்காக அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. எனவே இது உயர் இரத்த அழுத்ததிற்கு காரணமாகிறது.

ஆல்கஹால்

ஆல்கஹால்

உங்களது மகிழ்ச்சியான தருணங்களில் மது அருந்துகிறீர்கள். ஆனால் இது உங்களை சோகமானது தருணத்தை நோக்கி இழுத்து செல்ல வல்லது. ஆல்கஹால் உங்களது இரத்த குழாய்களை வெகுவாக பாதிக்கும். மேலும் ஆல்கஹாலுக்கு சைட் டிஸ் ஆக உண்ணும் பிரைடு உணவுகள் உங்களை இன்னும் ஆபத்தான நிலையை நோக்கி இழுத்து செல்லும். எனவே ஆல்கஹாலை விட்டு விலகியே இருங்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு அதிகமாக உள்ளது. உப்பு ஒரு மிகச்சிறந்த பதப்படுத்தும் காரணி. பதப்படுத்த உப்பு உபயோகிக்கப்படுகிறது. எனவே இந்த உணவுகளை தவிர்க்கவும்.

பிரஞ்சு ஃப்ரைஸ்

பிரஞ்சு ஃப்ரைஸ்

இது ஒரு பிரபலமான துரித உணவு ஆகும். இதில் அதிக அளவு சோடியம் மற்றும் கொழுப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவை இரண்டும் சேர்ந்து உங்களது உயர் இரத்த அழுத்ததை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு கூட இவற்றை கொடுப்பதை தவிர்க வேண்டும்.

உப்பு கலந்த உணவுகள்

உப்பு கலந்த உணவுகள்

உப்பு கலந்த உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும். உப்பு உங்களது தாகத்தை அதிகரிக்கும். எனவே நீங்கள் அதிகமாக தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும். இதனால் உங்கள் இரத்த குழாயினுள் இரத்ததின் வேகம் அதிகரிக்கும். எனவே அனைத்து உப்பு கலந்த உணவு பண்டங்களையும் தவிர்ப்பது நல்லது.

பதப்படுத்தப்பட்ட சூப்கள்

பதப்படுத்தப்பட்ட சூப்கள்

சத்தான காய்கறிகள் உள்ளது என்று பதப்படுத்தப்பட்ட சூப்களை குடிக்காதீர்கள். இதில் அதிக அளவு உப்பு மற்றும் ஃபிரசர்வேட்டிவ்ஸ் கலந்திருக்கும். பதப்படுத்தப்பட்ட சூப்களை குடிப்பது உங்கள் சமையல் நேரத்தை மிச்சப்படுத்தலாம். அதேசமயம் உங்களது உயர் இரத்த அழுத்ததை அதிகரிக்கும். ஜாக்கிரதை..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

foods you wants to avoid to prevent from Pressure

here are the some foods you wants to avoid to prevent from Pressure
Please Wait while comments are loading...
Subscribe Newsletter