For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயிற்றுப் பிடிப்புக்கு இதெல்லாம் காரணமா? ஆச்சரியமா இல்லை?!

வயிற்றுப் பிடிப்பை குணப்படுத்தவும், அதற்கான காரணங்களையும் இங்கே தரப்பட்டுள்ளது

By Gnaana
|

இன்றைய இளைஞர் இளைஞிகளை அச்சுறுத்தும் ஒரு நோயாக வருவது, வயிற்று தசைப் பிடிப்பு நோய்களே!, இது எல்லா வயதினரையும் அச்சுறுத்தும் நோயாக இருப்பினும், இதனால் அதிகம் பாதிக்கப்படுவது, தற்கால இளந்தலைமுறைதான்.

மேற்கத்திய உணவுகளால் மற்றும் மிகவும் தாமதமாக நேரந்தவறி, உணவு உண்பதால் வயிற்றுப்பிடிப்புகள் ஏற்படுகின்றன என்பவையே முக்கிய காரணங்களாக இதுவரை அறியப்பட்டாலும், இப்போது வேறு காரணமும் கண்டறிந்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

Causes and Remedies for Irritable bowel syndrome

நவீன மருத்துவ ஆய்வுகள், வயிற்றுப்பிடிப்புகளுக்கு சொல்லும் எதிர்பாராத மிக வியப்புக்குரிய காரணம் என்ன தெரியுமா?

மன அழுத்தம்! ஆமாம், ஸ்ட்ரெஸ்.

தசைப் பிடிப்புக்கு வீட்டிலேயே நிவாரணம் பெற வேண்டுமா? இதோ சில டிப்ஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம் :

மன அழுத்தம் :

மன அழுத்தத்தால் மிகையாக சுரக்கும் அட்ரினலின் காரணமாக, உடல் சோர்வு, உறவுகளில் அல்லது நட்புகளில் எளிதில் கோபப்படுதல், பணிகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு தசைகளில் இறுக்கம் ஏற்படும், இந்த தசை இறுக்கமே, வயிற்றில் வலியை உண்டாக்கும், இதுவே வயிற்றுப்பிடிப்புக்கு மூல காரணமாகிறது என்கிறது, இன்றைய மருத்துவம்!

வேறு காரணங்கள் :

வேறு காரணங்கள் :

குடல் வால் அழற்சி நோய் எனப்படும் அப்பெண்டிசைடிஸ் காரணமாகவும், வயிற்றுப் பிடிப்பு நோய் வரலாம். பெண்களின் மாதவிடாய் காலங்களிலும் வயிற்றுப்பிடிப்பு வரலாம் அல்லது மாதவிடாய்ப் பருவம் கடக்கும் மெனோபாஸ் நேரத்தில், பெண்மணிகளுக்கு வயிற்றுப் பிடிப்பு வரலாம்.

சிரிக்கும்போது?

சிரிக்கும்போது?

பெண்கள் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளைப்பற்றி பேசிக்கொள்ளும்போது, அவர்களையறியாமல் வாய்விட்டு சிரிக்கும்போதோ அல்லது மிக்க மனவேதனையால் அழும்போதோ, வயிற்றுப்பிடிப்பு ஏற்படும் என்பது மற்றொரு ஆச்சரியமான காரணமாக, அமைகிறது. மேலும் ஒரு சுவாரஸ்யமான காரணம், தவறான நிலைகளில் உடல்உறவு கொள்ளும் தன்மைகளினாலோகூட, வயிற்றுப் பிடிப்பு ஏற்படலாம்.

எப்படி வயிற்றுப் பிடிப்பு உண்டாகிறது?

எப்படி வயிற்றுப் பிடிப்பு உண்டாகிறது?

அட்ரினலின் அதிகச் சுரப்பால் விளைவதுதான் மனச்சோர்வு, சுருங்கச்சொன்னால், தினசரி செயல்கள் யாவுமே அட்ரினலின் சுரப்பால் விளைவதுதான்.

உதாரணமாக தினசரி வாகனத்தில் செல்லுவது, போனில் பேசுவது, வங்கிக்கு கடன் தவணை கட்டுவது போன்றவை, அச்சமயத்தில் சுரக்கும் அட்ரினலின், அந்த வேலைகள் முடிந்தவுடன் நின்றுவிடும்.

ஆனால், நெடுநாள் அல்லது தற்போது சரிசெய்ய வழி புலப்படாத குடும்பப் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காமல், அதே சிந்தனையில் இருக்கும்போது, சுரக்கும் அட்ரினலின் ஆனது நிற்காமல் மிகையாகி அதனால், உடலில் சுருங்கி விரியும் தன்மையுடைய தசைகள் அத்தன்மை மாறி சுருங்கியே இருக்கும்போதுதான், வயிற்றுப்பிடிப்பு ஏற்படுகிறது.

வயிற்றுப் பிடிப்பை குணப்படுத்த :

வயிற்றுப் பிடிப்பை குணப்படுத்த :

சீரகத்தை காய்ச்சி வடிகட்டி சீரகத் தண்ணீர் வருகி வரலாம் இதே முறையில் சுக்குநீர், ஊறவைத்த வெந்தய நீர் பருகலாம், வெந்நீர் கூட அவ்வப்போது அருந்தி வரலாம்.

கடுக்காய் மற்றும் இலவங்கப்பட்டை நீரில் ஊறவைத்து அவ்வப்போது பருகிவரலாம், இதனால் வயிற்றுப்பிடிப்பு வேதனைகள் சிறுகச்சிறுக மறையும். கீரை, காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிக அளவில் சாப்பிடனும்.

 ஒத்தடம் :

ஒத்தடம் :

நல்லெண்ணை அல்லது விளக்கெண்ணை வயிற்றில் தடவி, வெந்நீர் உத்தடம் கொடுத்தாலும், வயிற்றுப் பிடிப்பு தீரும்.

தயிர் மற்றும் மோர் :

தயிர் மற்றும் மோர் :

எல்லாத்துக்கும் மேலே, உணவில் தினமும் தயிர் அல்லது மோர் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும், இன்றைய நாகரீக உணவுமுறைகளில், தயிருக்கும் மோருக்கும் இடம் இல்லை, அதன் விளைவுகள்தான், இத்தகைய வியாதிகள். வீடுகளில் கண்டிருக்கலாம், தாத்தா பாட்டி அல்லது மூத்தோர் காலை சிற்றுண்டியில் தயிர், மதிய உணவில் கெட்டிமோர் இல்லாமல், சாப்பிடவே மாட்டார்கள்.

எப்படி சாப்பிட வேண்டும்?

எப்படி சாப்பிட வேண்டும்?

எதனால்? நாம் சாப்பிடும் சராசரி உணவைக்கூட, சரியாக செரிமானமாக்கக்கூடியது, இந்த மோர். இன்று உடல் செரிமானத்துக்கு தீங்கு தரும் துரித உணவுகள் மட்டும் உண்கிறோம், அதுவும் எப்படி? நின்றுகொண்டு.

அப்படி சாப்பிடுவது உடல் செரிமானத்துக்கு இன்னும் மிகப்பெரிய தீங்கு, அதேபோல, டைனிங் டேபிளில் அமர்ந்தும் சாப்பிடக் கூடாது. தரையில் அமர்ந்து, கால்களை மடித்து சம்மணம் போட்டு கொண்டு சாப்பிடனும்.

இதனால், உடலின் மற்ற உறுப்புகள் ஒய்வாகும், உண்ணுகின்ற உணவு சரியாக, செரிமானமாகும். வயிற்றுப்பிடிப்பும் ஏற்படாமல் நலமுடன் வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes and Remedies for Irritable bowel syndrome

Causes and Remedies for Irritable bowel syndrome
Desktop Bottom Promotion