பெரும்பாலான மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யானவைகள்!

Posted By:
Subscribe to Boldsky

மனிதன் உணவுகளை உட்கொள்ள ஆரம்பித்ததில் இருந்து, உணவுகள் குறித்த சில கட்டுக்கதைகள் மக்களிடையே உள்ளன. உங்களுக்கு உணவுகள் குறித்த கட்டுக்கதைகள் பற்றி தெரியுமா? தெரிந்திருந்தாலும், அந்த கட்டுக்கதைகள் உண்மையா அல்லது பொய்யா என தெரியாமல் பலரும் இருப்போம்.

Biggest Food Myths Busted By Science

ஆனால் நம் ஆராய்ச்சியாளர்கள், இப்படி மக்களிடையே இருக்கும் சில உணவுகள் குறித்த கட்டுக்கதைகளுக்கு அறிவியல் மூலமாக உண்மையை கண்டறிந்துள்ளனர். இங்கு உணவுகள் குறித்த சில கட்டுக்கதைகளும், உண்மைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து இனிமேலாவது புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுக்கதை #1

கட்டுக்கதை #1

காய்கறிகளை வெட்டும் மரப்பலகையில் எப்போதும் பாக்டீரியாக்கள் இருக்கும்.

உண்மை:

இது குறித்து எந்த ஒரு அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை. இருந்தாலும், ஒவ்வொரு முறை காய்கறி பலகையைப் பயன்படுத்திய பின்பும், அதை நீரில் சுத்தமாக கழுவிடுங்கள்.

கட்டுக்கதை #2

கட்டுக்கதை #2

உப்பு நீர் வேகமாக கொதிக்கும்.

உண்மை:

நீரில் எவ்வளவு உப்பு சேர்த்தாலும், நீரின் கொதிநிலையில் மட்டும் எவ்வித மாற்றமும் இருக்காது.

கட்டுக்கதை #3

கட்டுக்கதை #3

முட்டை இரத்த கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.

உண்மை:

இது முற்றிலும் தவறான ஒன்று. சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் தான் இரத்த கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். முட்டையில் ட்ரான்ஸ் கொழுப்புக்களே இல்லை. ஆய்வாளர்கள் முட்டையில் அரிய வகை ஆன்டி-ஆக்ஸின்ட்டுகள் தான் உள்ளது என கண்டறிந்துள்ளனர்.

கட்டுக்கதை #4

கட்டுக்கதை #4

அலுமினிய பாத்திரம் அல்சைமர் என்னும் ஞாபக மறதியை உண்டாக்கும்.

உண்மை:

பொதுவாக மனித சிறுநீரகம் எப்பேற்பட்ட அலுமினியத்தையும் கரைத்து விடும் தன்மை கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். எனவே அலுமினியம் பாத்திரம் அல்சைமர் நோயை உண்டாக்காது.

கட்டுக்கதை #5

கட்டுக்கதை #5

எனர்ஜி பானங்கள் ஆற்றலை வழங்கும்.

உண்மை:

எனர்ஜி பானங்கள் தூக்கமின்மை மற்றும் உடல் பருமனைத் தான் உண்டாக்கும். இதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை மற்றும் காப்ஃபைன் உட்பொருள் வேண்டுமானால், தற்காலிக ஆற்றலை வழங்கும்.

கட்டுக்கதை #6

கட்டுக்கதை #6

வறுத்த உணவுகள் மாரடைப்பை உண்டாக்கும்.

உண்மை:

எண்ணெயில் வறுத்த உணவுகளுக்கும், மாரடைப்பிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கட்டுக்கதை #7

கட்டுக்கதை #7

வைட்டமின் சி சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராடும்.

உண்மை:

இதுக்குறித்து எந்த ஒரு அறிவியல்பூர்வ நிரூபணமும் இல்லை.

கட்டுக்கதை #8

கட்டுக்கதை #8

காபி இதயத்திற்கு நல்லதல்ல.

உண்மை:

காபி குடிக்காதவர்களை விட, காபி குடிப்பவர்களுக்கு 25 சதவீதம் இதய நோய் வருவதற்கான அபாயம் குறைவு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கட்டுக்கதை #9

கட்டுக்கதை #9

கேரட்டை பச்சையாக சாப்பிடுவதே நல்லது. அதை சமைத்தால், அதில் உள்ள சத்துக்கள் வெளியேறிவிடும்.

உண்மை:

வேக வைத்த கேரட்டில் தான் வேக வைக்காததை விட அதிக அளவில் சத்துக்கள் இருக்கும். கேரட்டை வேக வைக்கும் போது, அதில் உள்ள செல் சுவர்களை உடைக்கப்பட்டு, பீட்டா-கரோட்டீன்கள் முழுமையாக கிடைக்கும்.

கட்டுக்கதை #10

கட்டுக்கதை #10

கோழியின் தோலை நீக்கினால் கலோரியின் அளவு குறையும்.

உண்மை:

கோழியின் தோலை நீக்கினால், அதன் சுவை தான் குறையுமே தவிர, கலோரியின் அளவு குறையாது.

கட்டுக்கதை #11

கட்டுக்கதை #11

அளவுக்கு அதிகமாக மசாலா பொருட்களை உட்கொண்டால் அல்சர் வரும்.

உண்மை:

மசாலா பொருட்களை உட்கொண்ட பின் அசௌகரியமாக உணர்ந்தால், அது அல்சருக்கான அறிகுறி அல்ல.

கட்டுக்கதை #12

கட்டுக்கதை #12

மது மூளைச் செல்களை அழிக்கும்.

உண்மை:

ஆய்வுகளில் மது குடிப்பதால் மூளை செல்கள் அழிக்கப்படுவதில்லை. சொல்லப்போனால் மது அருந்தியவருக்கு, மது அருந்தாதவருக்கும் ஒரே அளவில் தான் மூளைச் செல்கள் உள்ளன என ஆய்வுகள் கூறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Biggest Food Myths Busted By Science

Here are some of the biggest food myths busted by science. Read on to know more...