உங்கள் குடலை சுத்தம் செய்து புத்துயிர் பெற வைக்கும் 4 ஸ்டெப் ஃபார்முலா!

Posted By:
Subscribe to Boldsky

ஒரு வண்டிக்கு எப்படி என்ஜின்னி இயக்கம் மிக முக்கியமோ அதே மாதிரி, மனிதனுக்கு குடலியக்கமும், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். உங்கள் குடல் இயக்கம் தான் உடலில் உள்ள அழுக்கு, நச்சுக்கள் போன்றவற்றை நீக்கும் வேலை செய்கிறது.

உடலில் உள்ள குப்பைகளை வெளியேற்றும் குடலையே குப்பையாக வைத்திருந்தால் ஆரோக்கியம் எவ்வளவு சீர்கெடும் என்பதை நீங்கள் முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும்.

A Four Step Formula to Cleanse Your Digestion!

குடலை சுத்தமாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவில்லை எனில், நாள்பட பிற உடல் உறுப்புகளின் செயற்திறன் மற்றும் ஆரோக்கியமும் சீர்கெட துவங்கும். எனவே, குடல் ஆரோக்யத்தில் நீங்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
4 ஸ்டெப் ஃபார்முலா!

4 ஸ்டெப் ஃபார்முலா!

ரிமூவ் - நீக்கு: முதலில் உடலில் உள்ள நச்சுக்கள், ஒவ்வாமை போன்ற செரிமானத்திற்கு தடையாக இருப்பவையை நீக்க வேண்டும்.

ரீப்ளேஸ் - மாற்று: பிறகு, ஆரோக்கியமான டயட், செரிமானத்திற்கு பலனளிக்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்து உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக நல்ல கொழுப்பு எனப்படும் எச்.டி.எல், நார்ச்சத்து, விட்டமின்கள், புரதம் போன்றவை.

ரீ-இனோகுலேட் - நோய் தடுப்பு மருந்து: மீண்டும் குடல் மற்றும் செரிமான மண்டலம் பாதிப்படையாமல் இருக்க மருந்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வயிற்றை சுத்தம் செய்ய மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை, குடலை புத்துயில் பெற வைக்கும்.

ரிப்பேர் - சரி செய்தல்: முதல் மூன்று ஸ்டெப் முடிந்த பிறகு, இனிமேல் குடல், செரிமான ஆரோக்கியத்தை பதம் பார்க்கும் உணவுகள், பழக்கங்களை கைவிட வேண்டும். இல்லேயேல் மீண்டும் குடல் குப்பைத்தொட்டி ஆகிவிடும்.

குடல் ஆரோக்கிய அவசியம்!

குடல் ஆரோக்கிய அவசியம்!

குடல் ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியம். உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பனி செய்யும் குடல் சரியாக இல்லை எனில், உடலில் நச்சுக்கள் அதிகரிக்கும், இதனால் உடல் உறுப்புகள் பாதிப்படைய துவங்கும்.

எப்படி வீட்டில் குப்பை நிறைந்திருந்தால், உடல்நலம் பாதிக்குமோ, அதே மாதிரி தான், உடலுக்குள் குப்பைகள் நிறைந்திருந்தாலும் உடல்நலம் பன்மடங்கு பாதிப்படையும்.

எனவே, எக்காரணம் கொண்டும் குடல் மற்றும் செரிமான மண்டலம் ஆரோக்கியத்தில் கவனக்குறைவாக இருந்துவிட வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கையுடன் அறிவுரைக்கிறார்கள்.

நல்லதா? கேட்டதா?

நல்லதா? கேட்டதா?

ஓர் உணவை உட்கொள்ளும் முன்னர், கண்ணால் / நாவால் தேர்வு செய்யாமல், மனதால் தேர்வு செய்யுங்கள். இது உங்கள் உடலின் ஆரோக்கியத்தில் எப்படி எல்லாம் தாக்கம் உண்டாக்கும், அது உங்களுக்கு நல்லதா? கேட்டதா? என ஆராய்ந்து உணவுண்ணும் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

உணவை ஒரே வேளையில் அதிகளவு உட்கொள்வதற்கு பதிலாக, உட்கொள்ளும் வேலைகளை அதிகரித்து கொண்டு கொஞ்சம், கொஞ்சமாக உண்ணுங்கள். வயிறு ஒன்றும் கிரைண்டர் அல்ல, கிலோ கணக்கில் அரைக்க.

காம்போ!

காம்போ!

நாம் செய்யும் பெரிய தவறே காம்போ உணவுகள் உண்பது தான். கொஞ்சம் பணத்தில் அதிக உணவு என்ற போதையில் அவசியமற்ற, அளவுக்கு அதிகமாக உணவு உண்கிறோம்.

அதே போல, ஒருசில உணவுகளை ஒன்றாக சேர்த்து உண்ணக் கூடாது, இதையும் நாம் பின்பற்றுவதில்லை. எனவே, இதை எல்லாம் அறிந்து உணவு உண்ணும் பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

தவிர்க்க வேண்டியது!

தவிர்க்க வேண்டியது!

ஆல்கஹால், காபி, வெள்ளை சர்க்கரை... இந்த மூன்று உணவுகளையும் தவிர்க்க துவங்குங்கள். முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள். இவை தான் உங்கள் குடல் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் முதல் மூன்று கருவிகள்.

முடிந்தால் டயட்டில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி சேர்த்துக் கொள்ளுங்கள். பாக்கெட் பானங்கள் தவிர்த்து, இயற்கை பானங்கள் குடிக்க துவங்குங்கள்.

தேங்காய் தண்ணீர், இளநீர், தயிர், மோர், கஞ்சி, வாழைப்பழம் போன்றவை குடல் இயக்கத்தை மேம்படுத்தும் உணவுகள். இதை அந்தந்த காலத்திற்கு ஏற்ப டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Four Step Formula to Cleanse Your Digestion!

A Four Step Formula to Cleanse Your Digestion!
Story first published: Thursday, September 14, 2017, 16:18 [IST]
Subscribe Newsletter