For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியம் என்ற பெயரில் நாம் அன்றாடம் செய்யும் தவறுகள்!!!

|

நாம் அனைவருமே ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்பவர்கள் தான், ஏதேனும் உடல்நல குறைபாடு வரும் போது மட்டும். பிறகு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல மறந்து விடுவோம். நம்மில் பலரும் தினமும் சிலவற்றை ஆரோக்கியமான விஷயம் என்ற பெயரில் சில தவறுகளை செய்து வருகிறோம்.

சுத்தமாக இருக்கிறேன் என்று தினமும் பல முறை குளிப்பது, கையை நாள் தோறும் கழுவிக் கொண்டே இருப்பது அல்லது கழுவாமல் இருப்பது. வியர்வையை துடைப்பதில் இருந்து உள்ளாடைகளை துவைப்பதை வரை நாம் பல தவறுகளை செய்து வருகிறோம். அவற்றை பற்றி இனிக் காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உள்ளாடைகளை துவைக்கும் முறை

உள்ளாடைகளை துவைக்கும் முறை

உள்ளாடைகளை வாஷின் மெஷினில் துவைக்க வேண்டாம். முக்கியமாக மற்ற ஆடைகளுடன் சேர்த்து துவைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும்இதமான நீரில் தான் உள்ளாடைகளை துவைக்க வேண்டும் எனவும் ஆரோக்கிய வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

மற்றவரது பொருட்கள்

மற்றவரது பொருட்கள்

உள்ளாடை மட்டுமின்றி டவல் நெய்ல் கட்டர் போன்ற பொருட்களை கூட மற்றவருடையதை பயன்படுத்தக் கூடாது. இதன் மூலமாகவும் கூட நிறைய பாக்டீரியாக்கள் பரவுகின்றன.

வியர்வை துடைப்பது

வியர்வை துடைப்பது

வியர்வையை துடைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். கைகளை கொண்டு வெறுமென துடைப்பதை தவிர்த்துவிடுங்கள். சுத்தமான டவல் அல்லது கர்சீப் கொண்டு துடைக்க பழகுங்கள். ஏனெனில், வியர்வையில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் இருக்கின்றன.

ஒருமுறைக்கு மேல் குளிப்பது

ஒருமுறைக்கு மேல் குளிப்பது

நாம் தினமும் குளிப்பதே சருமத்தில் இருக்கும் அழுக்களை போக்க தான். இரவு குளிர்ந்த நீரில் குளிப்பது நல்ல உறக்கத்தை தரும். ஆனால், சிலர் ஓர் நாளுக்கு இரண்டு மொன்று முறை எல்லாம் குளிப்பார்கள். காலை, மாலை, இரவு என, இது உங்கள் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தி எரிச்சலை உண்டாக்கும். எனவே, இதை தவிர்த்துவிடுங்கள்.

பல் துலக்குவது

பல் துலக்குவது

தினமும் ஒருமுறை மட்டும் பல் துலக்குவது போதாது. காலை, இரவு என இரண்டு முறை பல் துலக்குவது அவசியம். ஏனெனில், இரவு சாப்பிட்ட உணவின் மூலமாக தான் நிறைய பாக்டீரியாக்கள் உண்டாகின்றன.

கை கழுவும் திரவம்

கை கழுவும் திரவம்

அளவுக்கு அதிகமாக கை கழுவும் திரவத்தை பயன்படுத்த வேண்டாம். இது உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதிகமாக பயன்படுத்துவது சரும வறட்சி மற்றும் சரும பாதிப்புகள் ஏற்பட காரணமாக இருக்கிறது.

எப்போது கை கழுவ வேண்டும்

எப்போது கை கழுவ வேண்டும்

சாப்பிடுவதற்கு முன்பு, பிறகு மட்டுமின்றி, கழிவறை சென்று வந்த பிறகு, அழுக்கான பொருட்களை கையாண்ட பிறகு, என் வீட்டில் இருந்து வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பிய பிறகும் கூட கை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தாலே பாக்டீரியா தாக்கத்தை பெருமளவு குறைக்க முடியும்.

கார்பெட் சுத்தம் செய்வது

கார்பெட் சுத்தம் செய்வது

தரையில் விரிக்கப்பட்டிருக்கும் கார்பெட், பாய்கள் போன்றவற்றை மாதத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்து வைக்க மறக்க வேண்டாம். இதன் மூலமாக தான் நிறைய சுவாச பிரச்சனைகள் வருகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hygiene Mistakes That May Affect Your Health

Yes, most of us commit certain common hygiene mistakes. Well, cleaning your body on a daily basis is a very important aspect of maintaining good health.
Story first published: Thursday, January 28, 2016, 11:01 [IST]
Desktop Bottom Promotion