முகத்திற்கு கீழே அசிங்கமாக தொங்கும் கொழுப்பை எப்படி கரைப்பது???

Posted By:
Subscribe to Boldsky

கொழுப்பு பெரும்பாலும் வயிறு, கை, தொடை பகுதிகளில் அதிகம் சேர்ந்வது இயல்பு. ஆனால், சிலருக்கு உடல் அவ்வளவு பெரிதாக இல்லை எனிலும் கூட, முகத்தில் சதை தொங்கும். முக்கியமாக தாடைக்கு கீழ் பகுதியிலும், கழுத்திலும் கொழுப்பு சேர்ந்திருக்கும். இவர்களது கழுத்து எங்கு இருக்கிறது என்று பார்ப்பதே கடினம்.

உடலில் இருந்து கொழுப்பு எப்படி கரைந்து வெளியேறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா???

இந்த பிரச்சனை உங்களுக்கும் இருக்கிறதா? இதைப் போக்குவது என்பது மிகவும் கடினமான விஷயம் அல்ல. சில எளிய பயிற்சிகள் மூலமாக கழுத்திலும், தாடையின் கீழ் பகுதியிலும் சேரும் இந்த கொழுப்பை அகற்றிவிட முடியும். சிலருக்கு இது மரபணு காரணமாகவும் இவ்வாறு உருவாகலாம் என்று கூறப்படுகிறது....

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலோரிகளை குறைக்க தொடங்குங்கள்

கலோரிகளை குறைக்க தொடங்குங்கள்

முகத்தின் வடிவத்தில் மரபணுவின் விளையாட்டு பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, உடல் எடையை குறைப்பது தான் இதற்கான முதல் தீர்வு, அதற்கு நீங்கள் முதலில் உணவில் சேர்க்கும் அதிகப்படியான கலோரிகளை குறைக்க வேண்டும். இதை சரியாக பின்பற்றினால் கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கொழுப்பை குறைத்து விடலாம்.

சூயிங்கம்

சூயிங்கம்

அதிக நேரம் சூயிங்கம் மெல்லுவது தவறான அணுகுமுறை மற்றும் உடல்நலத்தை பாதிக்கும் செயல். ஆனால், சிறிது நேரம் சூயிங்கம் மெல்லுவது என்பது உங்கள் தாடைக்கும், வாயிக்கும் ஓர் பயிற்சியாக இருக்கிறது. இதனால், தாடையின் கீழ் பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் கொழுப்பை குறைக்க இது உதவும். மேலும் இது தாடை தசையின் வலுவை அதிகரிக்கும். (குறிப்பு: நீண்ட நேரம் சூயிங்கம் மெல்லுவது உடல்நலனை பலவகையில் பாதிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.)

முகப் பயிற்சி

முகப் பயிற்சி

முகத்தில் சேரும் கொழுப்பை குறைக்க மற்றும் முகத் தசைகளை வலுமையாக்க நிறைய பயிற்சிகள் இருக்கின்றன. இவை கழுத்து மற்றும் தாடையின் கீழ் பகுதியில் சேரும் கொழுப்பை குறைக்க பெருமளவு உதவுகிறது.

நீரேற்றம்

நீரேற்றம்

உடலின் நீரளவை தான் நீரேற்றம் என்று கூறுகிறோம். உடலில் நீர்வறட்சி ஏற்பட்டால் பல உடல்நல பிரச்சனைகள்ஏற்படும் அபயம் இருக்கிறது. நீங்கள் உங்கள் உடலில் நீர் அளவை சரியாக சமநிலையில் பாதுகாப்பது, உங்கள் சருமத்தில் சுருக்கம், மாற்றம் தொங்குதல் / தொய்வுற்றல் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. எனவே, தினமும் சீரான இடைவேளையில் மூன்று லிட்டர் நீர் பருகுவதை பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தலையணை இல்லாமல் தூங்குங்கள்

தலையணை இல்லாமல் தூங்குங்கள்

இரவு உறங்கும் போது பெரிய அளவிலான தலையணையை பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் அதை தவிர்த்துவிடுங்கள். இது கழுத்து மற்றும் தண்டுவடம் போன்ற பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்து தீயத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உறங்கும் போது தலையணை இன்றி உறங்குவது பல உடலநல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும். முக்கியமாக முதுகு, கழுத்து, இடுப்பு வலையை போக்கும்.

யோகா

யோகா

யோகாவால் முடியாது என்பது எதுவுமே இல்லை. இது உங்கள் மனம், உடல் என இரண்டையும் பேணிக்காக்க உதவும் சிறந்த பயிற்சியாகும். சில ஆசனங்கள் கழுத்து, கண்ணம், தாடை போன்ற பகுதிகளில் இருக்கும் கொழுப்பை குறைக்க பயனளிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Healthy Tips To Redefine Your Jawline

Do you want your jawline to look perfect? Here are some of the healthy tips to follow to get that chiseled look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter