மழைக் காலத்தில் ஏற்படும் சளித் தொல்லைக்கு விரைவில் தீர்வுக் காண உதவும் பாட்டி வைத்தியங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

தென்னிந்திய பகுதியில் எங்கும் மழைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. சென்னை இந்தியாவின் வெனிஸாக மாறி வருகிறது என்று கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அந்தளவு வாகனங்கள் ரோட்டில் செல்ல முடியவில்லை, மக்கள் கீழ் தளத்தில் தங்க முடியாத அளவு மழை பொழிந்துக் கொண்டிருக்கிறது.

மழை என்றாலே மாற்றான் சகோதரன் போல சளி, இருமல், காய்ச்சல் தொற்றிக் கொள்ளும். உடனே வந்து ஒட்டிக் கொள்வது இந்த சளி தான். இது வந்தது போல உடனே விட்டு போகாது, மிகவும் பாசக்காரன் இவன். இவனை விரட்ட பாட்டி தான் வர வேண்டும்...! ஆம், பாட்டி வைத்தியமும், சமையல் அறை பொருட்களுமே போதும் இந்த மழைக் காலத்தில் ஏற்படும் சளியை சரி செய்ய...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு, தக்காளி, வெங்காயம்

பூண்டு, தக்காளி, வெங்காயம்

தீராத சளி தொல்லையா பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகிய மூன்றையும் நன்றாக நசுக்கு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக வைத்து, சூப்பாக சமைத்து குடித்து வந்தால் சளி குறையும்.

வெற்றிலை சாறு

வெற்றிலை சாறு

வெற்றிலை சாறை கொதிக்க வைத்து, பிறகு இதமாக ஆற வைத்து, நெற்றியில் பற்றுப்போட்டால் தீராத சளியும் குணமாகிவிடும்.

தூதுவளை மற்றும் துளசி

தூதுவளை மற்றும் துளசி

தூதுவளை, துளசியிலைச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து வேளைக்கு ஒரு சிறிய கப் வீதம் பருகி வந்தால் சளித் தொல்லை குறையும்.

சுக்கு, கொத்தமல்லி

சுக்கு, கொத்தமல்லி

சுக்கு, கொத்தமல்லி விதை இரண்டையும் தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த தண்ணீரை இதமான சூட்டில் பருகி வந்தால் சளித் தொல்லைக் குறையும்.

இஞ்சி, துளசி

இஞ்சி, துளசி

துளசி விதை மற்றும் இஞ்சியை எடுத்து தனித் தனியாக உலர்த்தி பொடி செய்து ஒன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால் சளித் தொல்லைக்கு விரைவில் தீர்வுக் காணலாம்.

பால், இஞ்சி, செம்பருத்தி இதழ்

பால், இஞ்சி, செம்பருத்தி இதழ்

பாலில் இஞ்சியை நசுக்கிப் போட்டு, அதில் செம்பருத்தி பூவின் ஓர் இதழை சேர்த்து, கொஞ்சம் பனக்கற்ண்டு கலந்து நன்றாக காய்ச்சி வடிகட்டி இதமான சூட்டில் பருகி வந்தால் சளித் தொல்லைகள் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Granny Treatment For Rainy Season Cold Problems

Some Granny Treatment For Rainy Season Cold Problems.
Story first published: Saturday, November 14, 2015, 15:48 [IST]
Subscribe Newsletter