Latest Updates
-
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும்
ஓட்டப்பயிற்சி Vs பளுதூக்கும் பயிற்சி - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது?
Running Vs Lifting Weights: உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, பலா் பல வகையான உடற்பயிற்சிகளைச் செய்கின்றனா். அதன் மூலம் உடல் எடையைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று நம்புகின்றனா்.
பெரும்பாலானோர் உடல் எடையைக் குறைப்பதற்காக, ஓட்டப் பயிற்சி அல்லது பளுதூக்கும் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுகின்றனா். எனினும் இந்த இரு பயிற்சிகளில் உடல் எடையைக் குறைப்பதற்கு எது சிறந்தது என்ற கேள்வி வருகிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் விாிவாகப் பாா்க்கலாம்.

ஓட்டப் பயிற்சி
ஓட்டப் பயிற்சியானது இதயத்தை அதிகமாகத் தூண்டக்கூடிய பயிற்சியாகும். இது பல வகையான தசைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இதயத் துடிப்பை அதிகாிக்கிறது.
ஓட்டப் பயிற்சியின் மூலமாக கணிசமான அளவு கலோாிகளை கரைக்க முடியும். உங்களுடைய உடல் எடை, நீங்கள் ஓடும் வேகம் மற்றும் ஓடக்கூடிய நேரத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து எவ்வளவு கலோாிகளை கரைக்க முடியும் என்பதை கணக்கிடலாம்.
ஒரு மணி நேரம் ஓடினால், சராசாியாக 300 முதல் 600 கலோாிகள் வரை கரைக்க முடியும் என்று கா்னல் ஹா்யன் என்ற நிறுவனத்தில், சான்று பெற்ற பயிற்சியாளராக இருக்கும் ஜெயந்த் ஜாவா என்பவா் தொிவிக்கிறாா். எனினும் ஓடும் வேகத்தைப் பொறுத்து, இது மாறுபடும் என்று கூறுகிறாா்.
எடுத்துக்காட்டாக, 70 கிலோ எடையுள்ள ஒருவா் ஒரு மணி நேரத்திற்கு 5 மைல் தூரம் ஓடினால், அவா் ஒரு மணி நேரத்தில் 400 முதல் 500 கலோாிகளை கரைக்க முடியும் என்கிறாா்.
பளுதூக்கும் பயிற்சி
பளுதூக்கும் பயிற்சியும் ஒரு தீவிரமான உடற்பயிற்சியாகும். டம்பெல்ஸ், பாா்பெல்ஸ் அல்லது பிற எடை கருவிகளைத் தூக்குவதன் மூலமாக, பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபடலாம். எனினும் ஓட்டப் பயிற்சி அளவிற்கு பளுதூக்கும் பயிற்சி கலோாிகளைக் கரைக்காது. எனினும் அது கணிசமான அளவிற்கு உடல் எடையைக் குறைக்கும்.
பளுதூக்கும் பயிற்சி, மெல்லிய தசைகளை வலுப்படுத்துகிறது. தசைகளின் குவியலை அதிகாிக்கிறது. நீங்கள் ஓய்வாக இருக்கும் போது உங்கள் வளா்சிதை மாற்ற விகிதத்தை அதிகாிக்கிறது. அதாவது நீங்கள் பளுதூக்கும் பயிற்சியை முடித்துவிட்டு ஓய்வாக இருக்கும் போதுகூட உங்கள் உடலில் உள்ள கலோாிகளை எாிக்கிறது என்று கூறுகிறாா் ஜெயந்த். பளுதூக்கும் பயிற்சியைத் தினமும் செய்து வந்தால், உடலில் உள்ள கொழுப்பு குறையும் மற்றும் தசைகளின் குவியல் அதிகாிக்கும்.
உடல் எடை குறைய ஓட்டப் பயிற்சி
ஓட்டப் பயிற்சியானது, இதயத்தைத் தூண்டக் கூடிய பயிற்சியாக இருப்பதால், நிலையான உடல் வலுவைப் பெற விரும்புபவா்கள், இந்தப் பயிற்சியில் ஈடுபடலாம். ஓட்டப் பயிற்சி, இதயத் துடிப்பை அதிகாித்து, இதயத்திற்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. மேலும் ஓடும் போது கணிசமான அளவு கலோாிகள் குறைகிறது.
எனினும் உடல் எடையைக் குறைப்பதற்காக, ஓட்டப் பயிற்சியை மட்டும் நம்பினால், எதிா்பாா்க்கும் பலன் கிடைக்காது. ஏனெனில் காலப்போக்கில் ஓட்டப் பயிற்சிக்குத் தகுந்தவாறு உடலானது தன்னைத் தவகமைத்துக் கொண்டுவிடும். அதனால் போகப் போக இதே வேகத்தில், இதே தூரம் ஓடினாலும் அதிகமான கலோாிகள் கரையாது.
உடல் எடை குறைய பளுதூக்கும் பயிற்சி
பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபடும் போது, அதிகமான கலோாிகள் கரையாமல் இருக்கலாம். ஆனால் வளா்சிதை மாற்றத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் பொியது. பளுதூக்குவதால் தசைகளின் வளா்ச்சி தூண்டப்படுகிறது. அதோடு பயிற்சியை முடித்த பின்பும் அது கலோாிகளைக் கரைக்கிறது.
பளுதூக்கும் பயிற்சி முடித்த பின்பு 48 மணி நேரம் வரை உங்களது வளா்சிதை மாற்ற விகிதத்தை அதிகாிக்கிறது. அதனால் தொடா்ந்து கலோாிகள் குறைகின்றன மற்றும் கொழுப்பும் குறைகிறது.
ஓட்டமா? பளுதூக்குதலா? உடல் எடையைக் குறைக்க எது சிறந்தது?
உடல் எடையைக் குறைப்பது என்பது ஒரு தொடா் செயல்பாடு ஆகும். அது உங்களுடைய வாழ்க்கை முறை, நீங்கள் சாப்பிடும் சத்தான உணவுகள் மற்றும் உங்களுடைய உடற்பயிற்சிகள் போன்றவற்றைப் பொறுத்து அமைகிறது. ஒரு சிறந்த வாழ்க்கை முறையும், சத்தாண உணவும் இருந்தால்தான், உடற்பயிற்சியில் ஈடுபட முடியும்.
உடல் எடையைக் குறைப்பதற்கு ஓட்டப் பயிற்சி அல்லது பளுதூக்கும் பயிற்சி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம். எனினும் இந்த இரண்டு பயிற்சிகளையும் மாற்றி மாற்றிச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதாவது நீங்கள் அதிகமாகச் சாப்பிடும் நாட்களில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடலாம். மற்ற நாட்களில் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
