For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தமாதிரி இருந்தா சும்மா விட்றாதீங்க... இது அந்த நோயா கூட இருக்கலாம்...

லைம் நோய் அறிகுறிகள், காரணங்கள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றி இந்த கட்டுரையில் மிக விளக்கமாக விவரித்திருக்கிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

|

பொரெலியா பர்க்டோர்பெரி பாக்டீரியாவால் லைம் நோய் ஏற்படுகிறது. கருப்பு கால் (Deer ticks) உண்ணிகள் கடிப்பதன் மூலம் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுகிறது. லைம் ஒரு "கிரேட் இமிட்டேட்டர்" என்று அழைக்கப்படுகிறது.

Lyme Disease

னெனில் அதன் pattern வெவ்வேறு நோய்களை ஒத்திருக்கிறது. இது மூளை மற்றும் நரம்பு மண்டலம், தசைகள் மற்றும் மூட்டுகள் மற்றும் இதயம் உட்பட உடலின் எந்த உறுப்புக்கும் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லைம் நோய்

லைம் நோய்

இந்த நோய் யாரையும் பாதிக்கலாம். ஆனால் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களில் (Senior Citizens) இது அதிகளவில் காணப்படுகிறது. லைம் ஒரு 'சிறந்த இமிட்டேட்டர்' என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அதன் pattern வெவ்வேறு நோய்களை ஒத்திருக்கிறது. நினைவாற்றல் பாதிப்பு, கவன பாதிப்பு மற்றும் சொற்களை கண்டுபிடிக்கும் சிக்கல்களை கூட இந்த லைம் நோய் ஏற்படுத்துகிறது.

சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப் படாவிட்டால் அல்லது தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டால், இது இதய சிக்கல்கள், மூளைக்காய்ச்சல், மூளை வீக்கம், மண்டை நரம்பு நோய், drooping eyelids, முக பலவீனம், உணர்வின்மை, வலி, தோள்பட்டை வீழ்ச்சி, பிற நரம்பியல் அறிகுறிகள் மற்றும் உணர்ச்சித் தொந்தரவுகள் போன்ற பிரச்சனைகளை உங்களுக்கு ஏற்படுத்தக் கூடும். இந்த நோய் மனதைப் பாதிக்கும் போது அது லைம் நியூரோபோரெலியோசிஸ் என்று குறிப்பிடப்படுகிறது.

MOST READ: உங்க மூக்கு இப்படிதான் இருக்கா? உங்களுக்கு என்னமாதிரி பிரச்சினை வரும் தெரியுமா?

லைம் நோயின் அறிகுறிகள்

லைம் நோயின் அறிகுறிகள்

இந்த நோயின் அறிகுறிகள், ஆரம்ப அறிகுறிகளாகவும் பிந்தைய அறிகுறிகளாகவும் வகைப்படுத்தப்படுகின்றன. லைம் நோயின் ஆரம்ப அறிகுறிகள் பின்வருமாறு:

1. தடிப்புகள்

2. காய்ச்சல்

3. குளிர்

4. களைப்பு

5. உடல் வலிகள்

6. தலைவலி

7. கழுத்து விறைப்பு

8. வீங்கிய நிணநீர் முனை

பிந்தைய அறிகுறிகள்

பிந்தைய அறிகுறிகள்

1.மூட்டு வலி

2.நரம்பியல் பிரச்சினைகள்

3.உடல் முழுவதும் பரவிய தடிப்புகள்

இதய பிரச்சினைகள் (ஒழுங்கற்ற இதய துடிப்பு), கண் அழற்சி, கல்லீரல் அழற்சி (ஹெபடைடிஸ்) மற்றும் கடுமையான சோர்வு ஆகியவை நோய்களின் இன்னும் சில அறிகுறிகள்.

காரணங்கள்

காரணங்கள்

லைம் நோய் ஆரம்பத்தில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது, அங்கு இது பொரெலியா பர்க்டோர்பெரி மற்றும் பொரெலியா மயோனி என்ற பாக்டீரியாவால் ஏற்பட்டது.

இது முதன்மையாக கருப்பு கால் (Deer ticks)உண்ணிகள் மூலமாக ஏற்பட்டதாக அறியப்பட்டது. ஒருவரின் உடலில் 36 முதல் 48 மணி நேரம் இந்த பாக்டீரியா இணைந்திருக்க நேரிட்டால் மட்டுமே இந்த நோய் அவருக்குத் தோன்ற வாய்ப்புள்ளது.

ஆபத்துக் காரணிகள் (Risk Factors)

ஆபத்துக் காரணிகள் (Risk Factors)

நீங்கள் சென்று வாழும் இடங்கள் அனைத்தும் லைம் நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும் காரணிகளாகும். தோல் பகுதிகளை திறந்து வைப்பது, கனமான காடுகள் நிறைந்த பகுதிகள் மற்றும் புல்வெளிப் பகுதிகளில் நேரத்தைச் செலவிடுவது இந்த நோய் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

MOST READ: காமாலைக்கு பயப்படறீங்களா? கரும்பு ஜூஸை இப்படி குடிங்க... காமாலை ஓடியே போயிடும்...

லைம் நோயின் சிக்கல்கள்

லைம் நோயின் சிக்கல்கள்

சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நோயாளிக்கு நாள்பட்ட மூட்டு வீக்கம், முக வாதம் மற்றும் நரம்புக் கோளாறு போன்ற நரம்பியல் பிரச்சினைகள், அறிவாற்றல் குறைபாடுகள், பலவீனமான நினைவகம் மற்றும் முறையற்ற இதயத் துடிப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கும் தன்மை கொண்டது இந்த லைம் நோய் .

நோயைக் கண்டறிதல்

நோயைக் கண்டறிதல்

பெரும்பாலான லைம் நோயின் அறிகுறிகள் மற்ற நோய்களின் அறிகுறிகளுடன் ஒத்துப்போவதால் நோயறிதலை கடினமாக்குகிறது. உங்களுக்கு எந்தவிதமான தடிப்புகளும் இல்லையென்றால், அறிகுறிகளைப் பற்றி சில தெளிவைப் பெற மருத்துவர் உங்கள் மருத்துவ வரலாற்றைப் பற்றிக் கேட்பார்.

என்சைம்-லிங்க்டு இம்யூனோசார்பன்ட் அஸே (எலிசா-ELISA) சோதனை மற்றும் வெஸ்டர்ன் பிளட் டெஸ்ட் ஆகியவை இரண்டும் நோயறிதல் முறையாகும். எலிசா சோதனை நேர்மறையாக இருந்தால் நோயறிதலை உறுதிப்படுத்த வெஸ்டர்ன் பிளட் சோதனை மேற்கொள்ளப்படுகிறது .

லைம் நோய்க்கான சிகிச்சை

லைம் நோய்க்கான சிகிச்சை

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) லைம் நோய்க்கான சிகிச்சை முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன. வாய்வழி நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆரம்ப கட்ட லைம் நோய்க்கான நிலையான சிகிச்சையாகும். பெரியவர்கள் மற்றும் 8 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டாக்ஸிசைக்ளின் (Doxycycline), பெரியவர்கள், இளைய குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அமோக்ஸிசிலின் (amoxicillin) அல்லது செஃபுராக்ஸைம் (cefuroxime) வழங்கப்படுகிறது. நோய்த்தாக்கம் மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டால், 14 முதல் 28 நாட்கள் வரையிலான சிகிச்சையின் பரிந்துரைக்கப்பட்ட வடிவமாக நரம்பு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (intravenous antibiotics) இருக்கும்.

MOST READ: ஆரோக்கியம்னு நெனச்சு குழந்தைகளுக்கு தர்ற மோசமான உணவுகள் இவைதான்... இனி தராதீங்க...

தடுக்கக்கூடிய வழிகள்

தடுக்கக்கூடிய வழிகள்

1. உங்கள் புல்வெளி மற்றும் உயரமான புற்களுக்கு இடையில் சரியான உண்ணித் தடையை உருவாக்குங்கள்.

2. மரத்தாலான, அதிகப்படியான புல்வெளிப் பகுதிகளில் வெளிப்படுவதைத் தவிர்க்கவும்.

3. உயரமான புல் மற்றும் வனத் தளத்தின் சுத்தம்செய்யப்படாத பகுதிகளிலிருந்து விலகி இருங்கள்.

4. நீண்ட ஸ்லீவ், சாக்ஸ் மற்றும் ஷூக்களிலின் உள்ளே செலுத்தப்பட்ட நீண்ட பேன்ட் போன்ற பாதுகாப்பு ஆடைகளை அணிய வேண்டும். வெறுங்காலுடன் செல்வதைத் தவிர்க்கவும் அல்லது திறந்த-கால் செருப்பைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கவும்.

5. பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துங்கள்.

6. உங்கள் உடலில் அது இருப்பதை உணர்ந்தவுடன் சரியான உண்ணி அகற்றிகளைக் கொண்டு அவற்றைத் தோலில் இருந்து இழுத்து அகற்றவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lyme Disease: Symptoms, Causes, Diagnosis And Treatment

Lyme disease is caused by Borrelia burgdorferi bacteria. The disease is transmitted to humans through the bite of black-legged deer ticks. Lyme is known as a "Great Imitator," as its pattern resembles different diseases. It can have a damaging effect on any organ of the body, including the brain and nervous system, muscles and joints, and the heart
Story first published: Tuesday, July 2, 2019, 16:39 [IST]
Desktop Bottom Promotion