For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்? என்ன செய்தால் சரியாகும்?

காலை எழும்போதே முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்

By Mahibala
|

காலையில அடிச்சுப் புடிச்சு ஆபீஸ்க்கு போய் சேர்ந்தவுடன், சிஸ்டடை ஆன் செய்ய கீழே குனியும்போதே பக்கத்தில் உள்ளவரைப் பார்த்து மூஞ்சியை கோணலாக வைத்துக் கொண்டு லேசாக சிரிப்பது. உடனே பக்கத்துல இருக்கிறவரு என்னன்னு கேட்கிறது தான் தாமதம் அதுக்குள்ள, நைட்டு நல்லாதான் படுத்து தூங்கினேன். ஆனாலும் ரொம்ப டயர்டாவே இருக்கு. முதுகு வேற ரொம்ப வலிக்குத்துங்க என்று தினமும் புலம்புவர்கள் தான் அதிகம்.

Are You Trouble From Back Pain After Wakeup

எனக்குக் கூட அப்படிதான்ப்பா இருக்கு. இப்படித்தான் பக்கத்தில் இருப்பவரிடம் இருந்தும் பதில் வரும். சரி. இப்படி எழுந்ததும் இடுப்பு வலிக்க காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எழுந்ததும் இடுப்பு வலிக்க காரணம்

எழுந்ததும் இடுப்பு வலிக்க காரணம்

இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் கடும் சோர்வும் முதுகுவலியும் உண்டாகிறது. அதற்குக் காரணம் தான் என்ன?

நன்றாகத் தூங்கி எழுந்த பின்பு கடுமையான இடுப்பு வலி நம்மை விடாமல் துரத்துவதற்கு என்ன காரணம் தெரியுமா? நாம் தூங்குகின்ற முறைதான் அதற்கு மிக முக்கியக் காரணம். நாம் சரியாகத் தூங்காமல் இருப்பதும் சரியான இடத்தில் தலையயணையை வைத்துத் தூங்காமல் இருப்பதும் தான் இதற்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது.

அதனால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தூங்குகின்ற முறையும் தலையணை வைத்துக் கொள்ளும் முறையும் மிக மிக முக்கியம்.

கழுத்து மற்றும் முதுகுவலி

கழுத்து மற்றும் முதுகுவலி

உங்களுடைய தோள்பட்டை, கழுத்து மற்றும் மேல்புறத்தில் முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு புறமாக (side lying) அல்லது நேராக மல்லாக்க படுத்திருந்தால் வலி குறையும். இப்படி படுக்கிற பொழுது, முதுகுத்தண்டுவடத்துக்குக் குறைவான அழுத்தம் செல்லும். அப்படி செல்லுகின்ற பொழுது, உங்களுடைய கழுத்துப் பகுதி கொஞ்சம் தளர்வடையும். அதனால் வலி குறையவும் ஆரம்பிக்கும்.

தலையணை

தலையணை

பொதுவாக தலையணை மிக முக்கியம். வட்ட வடிவிலான தலையணையை கழுத்துக்குக்கும் தலைக்கும் இடையில் வைத்து தான் தூங்க வேண்டும். பொதுவாக எல்லோரும் தலைப்பகுதியில் மட்டும் தலையை வைத்துத் தூங்குவார்கள். அது மிகத் தவறு. அது கழுத்து மற்றும் தோள்பட்டை வலியை ஏற்படுத்தும். அதனால் எப்போதும தலைக்கும் கழுத்துக்கும் இடையில் தான் தலையணையை வைத்துத் தூங்க வேண்டும்.

MOST READ: எல்லா கோவிலுக்கு போயும் கல்யாணமாகலையா? ஒரு வியாழக்கிழமை இந்த

பரிகாரத்த மட்டும் பண்ணுங்க...

முதுகின் கீழ்ப்பகுதி வலி?

முதுகின் கீழ்ப்பகுதி வலி?

ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்தால் முதுகின் கீழ்ப்பகுதி மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்படுகின்ற வலிகள் குறையும். நான் நேராகப் படுத்தே பழகிவிட்டேன்.ஒரு பக்கமாகப் படுத்தால் தூக்கம் வராது என்று சொல்பவர்கள் ஒரு தலையணையை முழங்காலுக்குக் கீழ்ப்புறத்தில் வைத்துக் கொண்டு தூங்குங்கள். இது முற்றிலுமு் பலன் தராது. ஓரளவு பலனைத் தான் இதில் எதிர்பார்க்க முடியும். அதனால் ஒரு பக்கமாகப் படுத்துப் பழகிக் கொள்வது நல்லது.

குப்புறப்படுத்தல்

குப்புறப்படுத்தல்

அதேபோல் மிக முக்கியமான விஷயம் ஒன்றிருக்கிறது. முதுகின் கீழ்ப் பகுதியில் வலி உள்ளவர்கள் கட்டாயமாகக் குப்புறப்படுத்துத் தூங்கக் கூடாது. அப்படி தூங்கினால் வலி தான் அதிகமாகும். தவிர கழுத்தில் உள்ள தசைகள் மற்றும் நரம்புகளை இறுக்கி வலியை அதிகரிக்கச் செய்யும்.

முதுகின் நடுப்பகுதி

முதுகின் நடுப்பகுதி

நாற்காலியில் உட்காரும்பொழுது முன்புறமாகக் குனிந்து உட்காருவது, வலதுபுறமாகவோ அல்லது இடது புறத்திலோ சாய்ந்து உட்காருவது, நடக்கின்ற பொழுது குனிந்தபடியே நடப்பது போன்ற செயல்பாடுகளால் உங்களுடைய முதுகின் நடுப்பகுதியில் வலி ஏற்படும். அதனால் நேராகவோ அல்லது ஒரு பக்கம் சாய்ந்தபடியோ தூங்கப் பழகிக் கொண்டால் இந்த பிரச்சினையைத் தவிர்க்க முடியும்.

MOST READ: இந்த ஆறு அறிகுறி இருந்தா கட்டாயம் உங்களுக்குப் பெண் குழந்தை

தான் பிறக்குமாம்... நிஜமாதாங்க

 உட்காரும் நிலை

உட்காரும் நிலை

நீங்கள் உட்காருகின்ற நிலையை மாற்றினால் மட்டும் தான் இதுபோன்ற வலிகளைக் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் உட்காரும்போது நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தால் இந்த பாதிப்பைத் தவிர்க்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Are You Trouble From Back Pain After Wakeup

Morning back pain is rarely serious and most of it is probably caused by low-grade inflammation which ramps up with age and is notoriously worse at the start of the day.
Story first published: Saturday, March 23, 2019, 16:15 [IST]
Desktop Bottom Promotion