For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி இந்த இடத்துல வலிக்குதா? என்ன காரணம்? எதோட அறிகுறின்னு தெரியுமா?

உட்கார்ந்தபடி வேலை பார்ப்பது முதுகெலும்பு அழற்சிக்கு வழி வகுக்கும், இந்த அற்புத தீர்வுகளைப் பின்பற்றி முதுகெலும்பு அழற்சியைப் போக்கலாம்.

|

முதுகெலும்பு அழற்சிக்கான சில பொதுவான அறிகுறிகள், முதுகு, தோள்பட்டை, பாதம், கழுத்து ஆகிய இடங்களில் தீவிர வலி, சோர்வு, கீழ் முதுகு பகுதியில் நாட்பட்ட அழற்சி, எடை அதிகரிப்பு, குடல் தொடர்பான தொந்தரவுகள் ஆகியவை ஆகும்.

முதுகு தண்டை பாதிக்கக்கூடிய தீவிர வலி மிகுந்த நிலை முதுகெலும்பு அழற்சி எனப்படுவது. பொதுவாக வயது முதிர்ந்தவர்களை இந்த அழற்சி பாதிக்கலாம். ஆனால் இன்றைய நாட்களில் இளம் வயதினரும் இந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதற்குக் காரணம், தவறான நிலையில் அமருவது மற்றும் நீண்ட நேரம் வேலை பார்ப்பது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதுகெலும்பு வலி

முதுகெலும்பு வலி

நாட்பட்ட முதுகு வலி உங்கள் அனுதின செயல்பாடுகளில் பாதிப்பை உண்டாக்குகிறது, மேலும் உங்கள் உற்பத்தியைக் குறைக்கிறது. முதுகெலும்பு அழற்சிக்கான பொதுவான அறிகுறிகள், முதுகு வலி, கழுத்து வலி, எடை அதிகரிப்பு போன்றவை என்றாலும், இந்த அழற்சி உண்டாவதற்கான காரணிகள், மன அழுத்தம், மரபணு, உடல் செயல்பாடுகள் அற்ற வாழ்க்கைமுறை, மோசமான செரிமான செயல்பாடு, நீண்ட நேரம் வேலை பார்ப்பது மற்றும் உடல் பருமன் ஆகியவை ஆகும்.

முதுகெலும்பு அழற்சியைப் போக்க சில எளிய குறிப்புகள் உள்ளன. இவற்றைப் பின்பற்றி முதுகெலும்பு அழற்சியைப் போக்க முடியும்.

MOST READ: இன்னைக்கு அஷ்டலட்சுமிகள் எட்டு பேரும் வந்து ஒன்னா உட்காரப்போற ராசிகள் எதுனு தெரியுமா?

யோகா

யோகா

முதுகெலும்பு அழற்சியைப் போக்கவும் தடுக்கவும் ஒரு சிறந்த சிகிச்சை யோகா. முதுகெலும்பு அழற்சியை நிர்வகிப்பதில் யோகா ஒரு முக்கிய பங்காற்றுகிறது. முதுகு தண்டு இறுக்கமாக இருப்பதை குறைத்து, ஒரு நெகிழ்வுத் தன்மையை யோகா தருகிறது. ஷலபாசனா, வக்ராசனா, அர்த சக்ராசனா, தனுராசனா, சவாசனா போன்ற யோகா நிலைகள் முதுகெலும்பு அழற்சிக்கான சிறந்த சிகிச்சை தரும் நிலைகளாகும். இந்த யோகா நிலைகள் முதுகு தண்டு தசைகளை வலிமையாக்க உதவுகிறது. ஆனால் இந்த பயிற்சிகளை பின்பற்றுவதற்கு முன்னர், மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

உடல் தோற்ற நிலை

உடல் தோற்ற நிலை

சீரான அமரும் நிலை மற்றும் உடல் தோற்ற நிலை, முதுகெலும்பு அழற்சியைப் போக்க அல்லது தடுக்க மிகவும் முக்கியம். தூங்கும்போதும், அமரும் போதும், அலுவலகத்தில் வேலை புரியும் போதும் உங்கள் உடல் வடிவத்தை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். உங்கள் உடல் வடிவம் சீராக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

நீண்ட நேரம் வேலை செய்யும்போது, ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்காமல், சில மென்மையான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் முதுகு தண்டு இறுக்கமாக அல்லது வளைந்து இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஆகவே நேரான மற்றும் நெடிய உடல் வடிவ நிலைகளுக்கு முயற்சியுங்கள்.

MOST READ: பிரா அணியாமல் சிவப்பு சட்டையோடு காலண்டருக்கு போஸ் கொடுத்த ஹாட் சன்னி லியோன்...

வெப்ப அல்லது குளிர் ஒத்தடம்

வெப்ப அல்லது குளிர் ஒத்தடம்

கழுத்து தசைகள், மிகவும் சோர்வாக இருந்தால், வெந்நீர் அல்லது குளிர் ஒத்தடம் தருவதால் தற்காலிக நிவாரணம் பெற்று அசௌகரியம் சற்று விலகலாம். வலி தாங்க முடியாத உடல் பகுதியில் ஐஸ் பேக் அல்லது வெந்நீர் ஒத்தடம் தரலாம். சில நேரங்களில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதும் ஒரு வித நிவாரணத்தை வழங்கலாம்.

இதனால் மூட்டுகளில் உள்ள இறுக்கம் சற்று தளர்ந்து வலி குறையலாம். பூண்டு பற்கள் சிலவற்றை எடுத்து நசுக்கிக் கொள்ளவும். இந்த பூண்டில் ஒரு ஸ்பூன் வெஜிடபிள் எண்ணெய் சேர்க்கவும். இந்த கலவையை சுட வைத்து, பின்பு ஆற விடவும். இந்த எண்ணெய்யை கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்யவும். இதனை செய்வதால் இறுக்கம் மற்றும் வலி குறையும்.

மசாஜ்

மசாஜ்

முதுகெலும்பு அழற்சி குறைய மசாஜ் சிகிச்சை நல்ல பலன் தருகிறது. மசாஜ் செய்வதால் முதுகெலும்பு அழற்சியால் ஏற்பட்ட வலி மற்றும் இறுக்கம் குறைவதோடு மட்டுமில்லாமல், இத்தகைய வலி உணர்வால் உண்டாகும் மன அழுத்தம் குறையவும் வாய்ப்பு உள்ளது. வெதுவெதுப்பான கடுகு எண்ணெய் அல்லது கிராம்பு எண்ணெய் கொண்டு வலி உள்ள இடத்தில் மென்மையாக மசாஜ் செய்யலாம்.

MOST READ: பிணத்தை எரித்து அதை வாழைப்பழத்தில் தொட்டு சாப்பிடும் விநோத பழக்கம்... எங்க நடக்குது தெரியுமா?

கழுத்து பயிற்சி

கழுத்து பயிற்சி

கழுத்து பகுதிக்கான உடற்பயிற்சி செய்வதால், வலி குறைய உதவும். இந்த பயிற்சியால் அழுத்தம் குறைந்து, தினசரி செயல்பாடுகள் சாத்தியமாகிறது. ஒரு பக்கம் திரும்பி பார்த்து, மெதுவாக உங்கள் தாடையை மார்பு பகுதி நோக்கி இறக்கவும். இதே பயிற்சியை அடுத்த பக்கத்திலும் பின்பற்றுங்கள். ஐந்து முதல் பத்து தடவை இந்த பயிற்சியை செய்து வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Home Remedies To Get Rid Of Spondylitis

Some common symptoms of spondylitis are sever pain the back, shoulder, heel and neck, fatigue, chronic inflammation in the lower back, weight gain and bowel problems.
Story first published: Saturday, February 2, 2019, 16:18 [IST]
Desktop Bottom Promotion