உங்களுக்கு ஞானப்பல் இருக்கா?... மொதல்ல போய் கண்ணாடியில பாத்துட்டு வாங்க...

By Suganthi Rajalingam
Subscribe to Boldsky

பொதுவாக கடைவாய் பற்கள் 17-21 வயதில் தான் தோன்றும். சில சமயம் அதற்கு மேலான வயதில் கூட தோன்றலாம். இந்த கடைவாய் பற்கள் தான் நாம் எந்தவொரு பொருட்களையும் கடித்து மென்று சாப்பிட உதவும்.

health

இது நமது வாயிற் பகுதியின் நான்கு மூலைகளிலும் தோன்றும். மற்ற எல்லா பற்களை விட கடைசியாக தோன்றுவது இந்த கடைவாய் பற்கள் தான். எனவே உங்கள் சரியான வயதை அடைந்த உடன் 32 பற்களும் முளைத்து முழுமை பெறும். 12 கடைவாய் பற்களில் 4 பற்கள் ஞானப் பற்களாக இறுதியில் தோன்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பற்கள் இல்லாமை

பற்கள் இல்லாமை

சில பேருக்கு இந்த இறுதி கடைவாய் பற்கள் காணப்படாது. குறிப்பாக பெரியவர்களுக்கு இந்த பற்கள் காணப்படாது. பற்களில் ஏற்படும் சொத்தை போன்றவற்றால் நமது பற்களும் ஆரோக்கியமற்று போகிறது. இதற்கு நமது உணவுப் பழக்கமும் ஒரு காரணமாக அமைகிறது.

பற்களை பிடுங்குதல்

பற்களை பிடுங்குதல்

மற்ற பற்களை காட்டிலும் அதிகமாக பாதிக்கப்படுவது இந்த இறுதி கடைவாய் பற்கள் தான். ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 10 மில்லியன் இறுதி கடைவாய் பற்கள் நீக்கப்படுகின்றன என்று அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரணங்கள்

காரணங்கள்

இந்த ஞானப் பற்களில் சில ஆரோக்கியமற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது

தொற்று அல்லது பற் சொத்தை

கட்டிகள்

அருகில் உள்ள பற்களின் பாதிப்பு

பற்களின் வேர்களில் ஏற்படும் எலும்பு பாதிப்பு

ஞானப் பற்கள் தேய்க்க ஏதுவாக இல்லாமல் இருப்பது

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

சில மருத்துவர்கள் இந்த பற்களில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து பிரச்சினை தீவிரமாகுவதை தடுக்க அவற்றை முன்னரே எடுக்க பரிந்துரைக்கின்றனர்.

பல் வரும் வரையில், அதைச் சுற்றியுள்ள திசுக்களின் நீக்கம் ஒரு நீர்க்கட்டியாக வளரலாம், இது உங்கள் தாடைக்குள் ஒரு எலும்பு இழப்பிற்கு வழி வகுக்கும்

இந்த பற்கள் உங்கள் ஈறுகளுக்கு அடியில் அமைந்து இருந்தால் சாப்பிடும் போது அருகில் உள்ள பற்களை பாதிக்கும்.

பாக்டீரியா மற்றும் கிருமிகள் தகடுகள் போன்றவை இதை சுற்றி அதிகமாக உருவாக கூடும். ஆனால் நிறைய ஆராய்ச்சிகள் என்ன சொல்கிறது என்றால் இறுதி கடைவாய் பற்களை பிடுங்காமல் ஆரோக்கியமாக அதை பேணுவதற்கு வழியை பார்க்க வேண்டும் என்கின்றனர். பிடுங்குவதை இரண்டாம் கட்ட நிலையாக வைத்துக் கொள்ளுங்கள். முடியாத சமயத்தில் அந்த தீர்வை எடுங்கள் என்கின்றனர்.

பிரித்தெடுத்தல்

பிரித்தெடுத்தல்

பற்களை பிடுங்குதல் என்பது உங்கள் பற்கள் எவ்வளவு ஆழம் பல் ஈறுகளில் அமைந்துள்ளது என்பதை பொருத்து உள்ளது. முதலில் அந்த இடம் மரத்து போக ஒரு ஊசி மூலம் மருந்தை செலுத்துவார்கள். பிறகு பற்களை பிடுங்கும் எலிவேட்டர் கருவி மூலம் பற்களை தளர்த்தி கொள்வார்கள். பிறகு ஒரு பல் பிடிங்கியை கொண்டு அதை பிரித்தெடுத்து விடுவார்கள். அந்த பகுதியில் வரும் இரத்த போக்கை தடுக்க அந்த இடத்தில் காட்டன் பஞ்சை வைத்து துடைத்து அதில் காட்டன் பஞ்சை அமுக்கி வைப்பார்கள்.

இரத்த போக்கு

இரத்த போக்கு

பற்களை பிடுங்கிய முதல் நாள் உங்களுக்கு லேசான இரத்த போக்கு இருக்கும். கொஞ்சம் வலி, வீக்கம் உணரலாம் மற்றும் அந்த இரத்தத்தை எச்சிலை சில நாட்களுக்கு விழுங்க கூடாது. காயங்கள் ஆற சில நாட்கள் ஆகும். 24 மணி நேரம் பல் துலக்க கூடாது. வாரத்திற்கு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சூடான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொப்பளிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

உங்கள் கடைவாய் பற்கள் பல் ஈறுகளுக்கு அடியில் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்க வேண்டும். சில மருத்துவர்கள் இதற்கு வாய் வழி சிகச்சையை மேற்கொள்கின்றனர்.

அறுவை சிகிச்சையின் போது

அறுவை சிகிச்சையின் போது

அறுவை சிகிச்சையின் போது வலியை உணராமல் இருக்க தூக்க மருந்து கொடுக்கப்படும்.

மருத்துவர் இப்பொழுது பல் ஈறை வெட்டி திறந்து உங்கள் பற்களை வேரோடு பிரித்தெடுத்து விடுவார்.

பல் துளை பெரிதாக ஏற்படாமல் இருக்க சில சமயங்களில் பற்களை துண்டுகளாக நீக்க முற்படலாம்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு

அறுவை சிகிச்சைக்கு பிறகு

அறுவை சிகிச்சைக்கு பிறகு காயங்கள் ஆற அதற்கான மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வலி நிவாரணி மூலம் உங்கள் வலியை நீங்கள் சமாளிக்கலாம்.

சுய பராமரிப்பு

சுய பராமரிப்பு

பாதிப்புகள்

கீழ் பகுதியில் உள்ள இறுதி கடைவாய் பற்களை நீக்கும் போது சில நரம்புகள் பாதிப்படையலாம். இதன் மூலம் உங்கள் கன்னம், நாக்கு மற்றும் உதடுகள் போன்றவற்றில் நிரந்தர உணர்வில்லாமல் போகலாம்.

மேல் கடைவாய் பற்கள்

மேல் கடைவாய் பற்கள்

இதே அறுவை சிகிச்சையை நீங்கள் மேல் கடைவாய் பற்களுக்கு மேற்கொண்டால் மூக்குப் பகுதிகள் அதாவது கண்களுக்கு கீழே உள்ள சுவாச மண்டலத்தில் பாதிப்பு ஏற்படலாம்.நரம்புகள் மற்றும் எலும்புகளில் இரத்தம் கட்டிக் கொண்டு தீவிர வலியை ஏற்படுத்தலாம்.

மருத்துவரை அணுக

மருத்துவரை அணுக

கீழ்க்கண்ட பிரச்சினைகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்

சுவாசிக்க மற்றும் உணவை விழுங்க கஷ்டப்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

இரத்தம் இரண்டு நாட்களுக்கு மேல் நிற்காமல் போனால் அல்லது ஒரு வாரத்திற்கு மேல் வலி இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

முகம் மற்றும் தாடை சில நாட்களுக்கு மேல் வீங்கி இருந்தால் மருத்துவரை சந்தியுங்கள்

காய்ச்சல் இருந்தால்

காய்ச்சல் இருந்தால்

உணர்வின்மை அல்லது கவனக் குறைவு அல்லது தவறான வாசனையை உணர்ந்தீர்கள் என்றால் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    What You Should Know About Wisdom Teeth

    Wisdom teeth won’t make you smarter. They’re called that because they usually come in when you’re older, around 17 to 21. These teeth are in the very back of your mouth. You get two on top and two on the bottom as part of a complete set of 32 adult teeth. How to treat molars extraction.
    Story first published: Tuesday, June 12, 2018, 16:40 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more