For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இவற்றில் உங்கள் தொப்பை எந்த வகை? தொப்பையின் வகைகள்

தொப்பையின் வகைகளும் அதனை போக்க சில எளிய யோசனைகளும்

|

உடல் ஆரோக்கியம் பற்றி பேசினாலே உடனே எல்லாருடைய நினைவுக்கும் வருவது தொப்பை தான். இன்றைய வாழ்க்கை முறையினால் பலருக்கும் இந்தப் பிரச்சனை தான் தலையாய பிரச்சனையாக இருக்கிறது.

உங்களது ஒட்டுமொத்த உடல் இயக்கத்திலும் இதனால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் அதோடு, உங்களுடைய தன்னம்பிக்கையை சீர் குலைக்கும் விதமாகவும் அமைந்திடுகிறது.

உடல் எடையை குறைக்க, அதிலும் குறிப்பாக தொப்பையை குறைக்க என்று சொல்லி, எக்கச்சக்கமான மெனக்கடல்களை எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்ன செய்தாலும் ஒரு இன்ச் கூட குறையவே மாட்டேங்குது என்று கவலைப்படுபவரானால் இந்த கட்டுரையை தொடர்ந்து படித்திடுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதனால் ? :

எதனால் ? :

முதலில் தொப்பை ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்ப மாற்றங்களை கொடுத்தால் மட்டுமே நீங்கள் எதிர்ப்பார்த்த மாதிரி தொப்பை குறைந்திடும்.

பெரும்பாலும் தொப்பை வருவதற்கு உங்களுடைய வாழ்க்கை முறை தான் முக்கிய காரணியாக இருக்கிறது.

உங்களுக்கு இருக்கக்கூடிய தொப்பை என்ன வகை அதனை போக்க என்ன செய்ய வேண்டும் என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மது :

மது :

வைன்,பீர் போன்றவற்றால் உங்களுக்கு தொப்பை ஏற்படும். இதனை நீங்கள் தொடர்ந்து குடிப்பதினால் சரியாக உங்களுக்கு செரிமானம் ஆகாது. அதோடு இது போன்ற டிரிங்க்ஸ்களில் அதிகப்படியான கலோரி இருப்பதால் அதுவும் உங்கள் உடல் எடையை அதிகரிக்க வழிவகுத்திடும்.

இதைக் குறைக்க வேண்டுமென்றால், முதலில் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

தாய்மை :

தாய்மை :

பெண்களுக்கு குழந்தை பெற்றவுடன் தொப்பை உருவாகும். இது இயற்கையானது தான், இதனை நீங்கள் குறைக்க வேண்டும் என்று நினைத்தால் மசாஜ் அல்லது சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றிருப்பவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள்

ஸ்ட்ரஸ் :

ஸ்ட்ரஸ் :

தூக்கமின்மை அல்லது ஸ்ட்ரஸ்ஸினால் உங்களுக்கு தொப்பை ஏற்பட்டிருக்கிறது என்றால் கீழ் வயிறு மட்டும் துண்டாக தெரியுமளவுக்கு தொப்பை இருக்கும்.பிறர் ஏழு மணி நேரம் தூங்குகிறார்கள் என்றால் நீங்கள் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும். உங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியம். அதே போல காபி மற்றும் டீ அதிகப்படியாக குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவுப்பழகக்த்தை கடை பிடித்திடுங்கள்.

ஹார்மோன் :

ஹார்மோன் :

சிலருக்கு உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களாலும் தொப்பை ஏற்படக்கூடும். இதனை தவிர்க்க வேண்டுமென்றால் உடற்பயிற்சி அவசியம். அதோடு உங்களுடைய உணவுப்பழகக்த்தையும் மாற்ற வேண்டியது கட்டாயம்.

செரிமானம் :

செரிமானம் :

செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருந்து அதனால் தொப்பை உண்டானால் நீங்கள் கண்டிப்பாக உணவை குறைத்துக் கொள்ள வேண்டும். அதாவது கலோரி குறைவான உணவு சாப்பிட வேண்டும் . அதோடு தொடர் உடற்பயிற்சி அவசியம்.

ப்ளோட்டட் :

ப்ளோட்டட் :

உணவு எதுவும் சாப்பிடாமலே எப்போதும் வயிறு நிறைந்த உணவே இருக்கிறதென்றால் உங்களுக்கு செரிமானத்தில் பிரச்சனையிருக்கிறது என்று அர்த்தம். தொப்பைக்கு இது முக்கிய காரணியாக இருக்கிறது.

செரிமானத்தை அதிகப்படுத்தும் சில உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

கேஸ் :

கேஸ் :

உங்கள் உடலில் அதிகப்படியான கேஸ் சேர்ந்திருந்தால் கூட தொப்பை இருக்கும். பொதுவாக செரிமானப் பிரச்சனை இருப்பவர்களுக்குத் தான் இந்த கேஸ் பிரச்சனையும் இருக்கும், அவர்களின் உடலில் தான் அதிகமான கேஸ் சேர்ந்திருக்கும்.

ஒவ்வொரு உணவு நேரத்திற்கும் அதிக இடைவேளி விடுவது, இரவு நேரத்தில் அதிகமான உணவுகளை உட்கொள்வது, துரித உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகளை எடுத்துக் கொள்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

அதிகப்படியான உடற்பயிற்சி தேவையில்லை கட்டுப்பாடான ஆரோக்கியமான உணவுமுறையே அதற்கு போதுமானதாக இருக்கும்.

வயிற்றைச் சுற்றி :

வயிற்றைச் சுற்றி :

வயிறு, இடுப்புப்பகுதி,தொடைப்பகுதி என வயிறு மற்றும் வயிற்றைச் சுற்றியும் அதிக சதை இருந்தால் உங்களது உருவத்தையே குலைத்திடும். இதனால் உங்கள் உடலுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டிடுமோ என்று பயப்படத் தேவையில்லை.

ஆனாலும் குறைத்துக் கொள்ள முயற்சி செய்திடுங்கள்

கீழ் வயிறு :

கீழ் வயிறு :

சிலருக்கு கீழ் வயிறு மட்டும் பெரிதாக இருக்கும். இதற்கு முழுக்க காரணம் உங்களது வாழ்க்கை முறை தான், டைட்டாக பேண்ட் அணிவதும் எப்போதும் ஒரேயிடத்தில் உட்கார்ந்தே இருப்பதும் தான் இந்த வகை தொப்பைக்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

இடுப்புப் பகுதி :

இடுப்புப் பகுதி :

இடுப்பகுதியை சுற்றி கொழுப்பு அதிகரிக்கவும் உங்களுடைய வாழ்க்கை முறை ஒரு காரணியாக சொல்லப்படுகிறது. அதோடு உணவுப்பழக்கத்தையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

துரித உணவுகள், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள்ம் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட இனிப்புகள்,சோடா போன்றவற்றையெல்லாம் அறவே தவிர்த்திடுங்கள்.

விஸ்செரல் :

விஸ்செரல் :

VAF எனப்படுகிற Visceral abdominal fat இருந்தாலும் உங்களுக்கு தொப்பை இருக்கும். இது உங்கள் வயிற்றில் இருக்கக்கூடிய உள்ளுருப்புகள் வயிற்றுக்குள் அதிக இடத்தை எடுத்துக் கொள்வதால் உண்டாகக்கூடிய தொப்பை.

உடலுக்கு போதுமான அளவு குளுக்கோஸ் இல்லாத போது, ஹார்மோன் பிரச்சனைகளின் போது, இதயப் பிரச்சனைகள்,சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த வகை தொப்பை இருக்கும்.

இவர்களுக்கு உடல் நலன் சார்ந்த ஆபத்துக்கள், பிறரை விட இந்த வகை தொப்பை இருப்பவர்களுக்கு அதிகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

types of belly fat

types of belly fat
Story first published: Tuesday, January 30, 2018, 18:04 [IST]
Desktop Bottom Promotion