For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ஆபீஸ்குள்ள ஒரு நாய் வந்தா எப்படி இருக்கும்?... கற்பனை பண்றத விட்டுட்டு இத படிச்சி பாருங்க...

ஏன் நாம் நமது செல்ல நாயை நமது அலுவலத்திற்கு கூட்டி செல்லக்கூடாது? அப்படி நம்முடைய செல்லப் பிராணியை அலுவலகத்துக்குக் கூட்டிச் செல்வது சில சங்கடங்களை உண்டாக்கும் தான். ஆனால் மனஅழுத்தம் குறையும். சமூக வி

By Manikandan Navaneethan
|

பெரும்பாலான மக்களுக்கு தங்கள் வீட்டில் அழகான செல்ல பிராணிகளை வளர்ப்பதில் அலாதி பிரியம் இருக்கும். அதிலும் குறிப்பாக நாய்கள். நாய்களுடன் நாம் கொஞ்சி விளையாடலாம், நாய்கள் நமக்கு விசுவாசமான பிராணி, நமக்கு வீட்டில் ஒரு துணையாக இருக்கும், நம் வீட்டின் பாதுகாவலனாக இருக்கின்றன. அது மட்டுமா காவல் துறையில் புலனாய்விற்கு பெரிதும் உதவுகின்றன. இதில் முக்கியமாக அவற்றின் சேட்டைகள் நமது கவலைகளை போக்கி நம் மனதில் மகிழ்ச்சியையும் அமைதியையும் வழங்குகின்றன. இக்கருத்தை முன்னிறுத்தி ஏன் நாம் நமது செல்ல நாயை நமது அலுவலத்திற்கு கூட்டி செல்லக்கூடாது? அவ்வாறு கூட்டி செல்வதால் நமக்கு ஏற்படும் பயன்களை பற்றிய தொகுப்பே இது.

Dogs in the Workplace

image courtesy

அநேக அலுவலகங்களில் இவ்வழக்கம் நடைமுறையில் இல்லை என்றாலும் ஒரு சில நிறுவனங்கள் குறிப்பாக உளவியல் ரீதியாக பாதிக்க கூடிய வேலை அமைப்பை கொண்ட நிறுவனங்கள் இது போன்ற செயல்களை அனுமதிக்கின்றன இதனால் ஒரு சில பிரச்சினைகள் எழ தான் செய்யும் ஆனால் இதன் நன்மைகள் ஏராளம். நம் செல்ல பிராணிகளை உடன் எடுத்து செல்ல அனுமதிக்கும் நிறுவனங்களின் எடுத்துக்காட்டு கூகுள் (ஆல்பாபெட்), ஆட்டோடெஸ்க், கோ-டாடி இன்னும் பல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. மன அழுத்தத்தை குறைத்தல்:

1. மன அழுத்தத்தை குறைத்தல்:

பொதுவாக வேலை பளுவினால் ஏற்படும் அழுத்தம் நமது மன அழுத்ததை அதிகரிக்கிறது. இதே நிலை தொடரும்போது நாம் உளவியல் ரீதியாக பாதிக்கபடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மன அழுத்தம் அதிகரிக்கும் போது அடிக்கடி மன சோர்வு மற்றும் எரிச்சல் ஏற்படலாம். உளவியல் ரீதியான பிரச்சினைகள் நமது உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இக்கூற்றை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பணியிட அழுத்ததை சமாளிக்க ஒரு சிறந்த வழி நாய் போன்ற செல்லப்பிராணிகளை வேலை செய்யும் இடத்திற்கே அழைத்து வருவது. அதன் வேடிக்கையான நடத்தை உங்கள் மன அழுத்தத்தை கணிசமாக குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. சமூக விழிப்புணர்வு:

2. சமூக விழிப்புணர்வு:

image courtesy

வேலை செய்யும் இடத்தில் உள்ள சூழ்நிலை பற்றி அக்கறையற்றவர்கள் பொதுவாக மற்றவர்களுடன் பழகாமல் தள்ளியே இருப்பார்கள். நாய்களின் வருகை உங்களையும் உங்கள் அலுவலக நண்பர்களையும் ஒருவருக்கொருவர் நெருங்கி பழகுவதற்கு ஒரு கருவியாக இருக்கும். ஏனென்றால் உங்கள் செல்ல பிராணியின் குறும்பான செயல்கள் உங்கள் நண்பர்களின் கவனத்தை ஈர்த்து நீங்கள் நெருங்கி பழக வழி வகுக்கும். இதனால் உங்கள் அலுவலகத்தில் ஆரோக்கியமான சூழ்நிலை உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

3. ஆரோக்கியமான வாழ்வு:

3. ஆரோக்கியமான வாழ்வு:

உங்கள் செல்ல நாயை நடை பயிற்சிக்கு அல்லது அதனுடன் விளையாடுவதற்கு வெளியில் அழைத்து செல்ல நீங்கள் மற்றும் உங்கள் அலுவலக நண்பருடன் சேர்ந்து செல்லும் பொது உங்களின் நட்பு அதிகரிக்கும் அதே நேரம் நடை பயிற்சியினால் உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

4. உற்பத்தி திறன்:

4. உற்பத்தி திறன்:

image courtesy

உங்களின் ஆரோக்கியமான மன அழுத்தமற்ற வேலை சூழ்நிலைகள் உங்களின் உற்பத்தித்திறனை அதிகப்படுத்தும். ஏனென்றால் உற்பத்தி திறன் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை ஒன்றுடன் ஓன்று நெருக்கமானது. எனவே தான் செல்ல நாயை அலுவலகத்திற்கு அழைத்து வருவது உங்கள் உற்பத்தி திறனை ஊக்கப்படுத்த ஒரு சிறந்த மற்றும் எளிதான வழி. அதிக உழைப்பு மற்றும் உற்பத்தித்திறன் நிச்சயமாக உடல் ரீதியிலான செயல்பாடுகளை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:

கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:

image courtesy

இதில் ஒரு சில நடைமுறை பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் வேலை செய்யும் இடத்தின் முதலாளியாக இருந்தால் பிரச்சினை இல்லை நாமே செல்ல பிராணியை அழைத்து செல்வதற்கான வழிமுறைகளை வகுக்கலாம். ஆனால் நாம் ஒரு பணியாளர் எனில், நாம் பணியிடத்திற்கு நாய்களை அழைத்து வந்து அதை கவனித்து அதனுடன் நேரம் செலவிடுவதை நிர்வாகம் மறுக்கலாம். ஒரு சில நிறுவனங்கள் செல்ல பிராணிகளை அழைத்து வருவதற்க்கு அனுமதிக்கின்றன ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் இதை அனுமதிப்பதில்லை என்று கூறலாம். நாம் நாய்களுடன் விளையாடும் பொழுது மற்றவர்களின் கவனத்தை திருப்பி அவருடைய வேலையை பாதிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Surprisingly Health Benefits of Dogs in the Workplace

Having a pet like a dog is fun. These furry animals in some kind have an adorable snack. The dog is one of the animals that can be very friendly with humans and also famous to have good loyalty.
Desktop Bottom Promotion