For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு டான்சில் பிரச்னை இருக்கா?... அப்போ ஓமத்தை தினமும் இப்படி சாப்பிடுங்க...

|

காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா என்று வாய் வார்த்தைக்கு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். வேதாந்திகளும், சித்தாந்திகளும் வசதிக்கு ஏற்றவாறு வாதப்பிரதி வாதங்களையும், தர்க்க அனர்த்தங்களையும் முன் வைக்கலாம்.

How to test tonsillitis? – Best home remedies for tonsillitis

உண்மையில் ஒவ்வொரு மனித உடலும் ஒட்டுமொத்த மருத்துவ உலகத்துக்கு ஏதோ ஒன்றை புதிது புதிதாக சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நுணுக்கமான அந்த மனி உடலுக்கு இப்போது என்ன ஆயிற்று என்று கேட்கலாம். ஆம், மண்டைக்கு கீழே உள்ள தொண்டையில் பிரச்சினை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொண்டை அழற்சி என்றால் என்ன

தொண்டை அழற்சி என்றால் என்ன

தொண்டை குழாயின் இரு பகுதிகளிலும் நிணநீர் திசுக்கள் உள்ளன. இவை தொண்டைக் குழாயில் ஊடுருவும் பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும் எதிர்த்து போராடும் வல்லமை பெற்றது. நோய்த் தொற்றுக்களை உருவாக்கும் வைரஸ்களை பிடித்து விழுங்கி விடுகிறது. அப்படி நிகழாமல் போய் விட்டால், நோய்த்தொற்று திசுக்களை அழித்து விடுகிறது. தொண்டை அழற்சி பெரும்பாலும் பருவகாலங்கள் மாறும்போது, குழந்தைகளையும், சிறுவர்களையும் அதிகமாக தாக்குகிறது.கிருமிகளுக்கு ஆயுட்காலம் நீடிக்கும்போது வீக்கம் அதிகமாகிறது.

அழற்சிக்கான அறிகுறிகள்

அழற்சிக்கான அறிகுறிகள்

கடுமையான காய்ச்சல், நடுக்கம், வறட்சி தன்மையுடன் தொண்டை அழற்சி ஏற்படும். மூச்சு விடும்போது வெளியேறும் கெட்ட நாற்றம் இதன் முக்கிய அறிகுறி. அறிகுறிகள் தொடங்கிய சில நாட்களில் தொண்டை வீக்கமும், நாக்கு சிவப்பாகவும் மாறும். இர்ண்டு வாரங்களுக்கு இதன் பாதிப்புகள் நீடிக்கும்.பருவ காலங்கள் மாறும்போது வாழ்நாள் முழுவதும் கூட தொண்டை அழற்சி பாடாய்படுத்தலாம். தொண்டை உப்பி, நாக்கு உள்ளிட்டவற்றில் ஒருவித அல்சரை ஏற்படுத்தும். மருத்துவரிடம் ஆலோசனைக்குச் சென்றால், அதன் சாம்பிள்களை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்

தொண்டை அழற்சியின் பாதிப்புகள்

தொண்டை அழற்சியின் பாதிப்புகள்

பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் தொண்டை அழற்சி உருவாகிறது. திசுக்களின் திறன் குறையும்போது இதன் ஆட்டம் அதிகரிக்கிறது. தொண்டை மண்டலங்கள் வீக்கம் மற்றும் வலியால் இம்சையை அனுபவிக்கின்றன. இதனால் பீடிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் பேசத்தயங்குகிறார்கள்.உமிழ் நீரை விழுக்க முடியாத நிலை, கடுமையான தலைவலி போன்றவை ஏற்படும். வானிலை மாற்றங்கள் அதாவது குளிர்காலத்தில் இது தீவிரமடைகிறது. உணவை விழுங்க இயலாததால் இது பசியை மறக்கடிக்கிறது. நாளாக நாளாக வலியும், வேதனையும் உடலை நோக்கி முன்னேறுகிறது.வீட்டு வைத்தியம் மூலம் தொண்டை அழற்சியை குணப்படுத்த சாத்தியங்கள் இருக்கிறது. அது உங்கள் அடுக்களையிலேயே கிடைக்கிறது என்பது பெரிய வரப்பிரசாதம்.

சிலிப்பரி எல்

சிலிப்பரி எல்

வழுக்கும் தன்மை கொண்ட சிலிப்பரி எல் தற்போது பிசின் வடிவில் கிடைக்கும் இது, திசுக்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. உடலில் ஏற்படும் வியர்வை, வலி, வீக்கத்தை குறைக்க உதவுகிறது.தொண்டையில் நோய் எதிர்ப்பு சக்தியை எழுப்பும் திசுக்களை மறு கட்டமைப்பு செய்கிறது.

இரண்டு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சிலிப்பரி எல் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கி வெதுவெதுப்பான நிலையில் குடிக்கவும். ஒரு நாளைக்கு 2 முறை பருகினால் தொண்டை அழற்சிக்கு தீர்வு காணலாம்

புதினா

புதினா

தொண்டை அழற்சியிலிருந்து உடனடியாக நிவாரணம் பெற வேண்டும். அழற்சியை ஏற்படுத்திய பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும் விரட்ட வேண்டும் என்றால் அதற்கு நல்ல மருந்து புதினாதான். நுண்ணுயிரைகளை அழிக்கும் தன்மை கொண்டது.சளிப் பிரச்சினையை தீர்க்கக்கூடியது.

ஒரு டம்பளம் தண்ணீருடன் ஒரு கைப்பிடி அளவு புதினா இலையை சேர்ந்து கொதிக்க விடவும். வற்றி அரை பங்காக வரும்போது இறக்கி அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு 3 முறை பருகவும். நேரமே எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்

வெந்தயம்

வெந்தயம்

தொண்டை அழற்சிக்கு வெந்தயம் ஒரு குணப்படுத்தும் மருத்துவ அம்சங்களைக் கொண்டது. பாதிப்புக்கு காரணமான பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும் அழிக்க உதவுகிறது. ஒவ்வாமை மற்றும் வலிக்கு தீர்வு காணக்கூடிய எதிர்ப்பு சக்தியை உள்ளடக்கியது.

கொதிக்க வைக்கப்பட்ட அரை டம்ளம் தண்ணீரில் 2 டீஸ்பூன் வெந்தயத்தை சேர்க்கவும். இதற்காக அரை மணி நேரம் காத்திருந்து பயன்படுத்தவும். ஒரு சில நொடிகளில் தொண்டை அழற்சி பறந்து போகும். ஒரு நாளைக்கு 2 முறை இதனை அருந்த வேண்டும்

க்ரோம் விதைகள்

க்ரோம் விதைகள்

அறிகுறிகள் தொடங்கும்போதே க்ரோம் விதைகளை பயன்படுத்த தொடங்கி விட்டால் தொண்டை அழற்சி பறந்து போகும். 1 க்கு 4 விகிதத்தில் வறுத்த குரோம் விதைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் அதில், சிறிய அளவில் மஞ்சளுடன் பாலில் சேர்த்து தினமும் சிற்சில இடைவெளிகளில் உண்ணும்போது இந்த பிரச்சினைகளில் இருந்து விலகலாம்.

வெதுவெதுப்பான தண்ணீர்

வெதுவெதுப்பான தண்ணீர்

வெதுவெதுப்பான தண்ணீரில் பாறை உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது வீக்கம் குறைகிறது. பாறை உப்புகள் எந்த பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும் கொல்லக்கூடியது,. வெந்நீரில் துணியை நனைத்து தொண்டைப் பகுதியில் வைக்கும்போது சுகமாகவும் இருக்கும். வலியும் குறையும்

மஞ்சள்

மஞ்சள்

அடுக்களையில் இருக்கும் பொருட்களிலே மஞ்சள் ஒரு அபூர்வமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது. வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்து குடிக்கும்போது அழற்சிக்கு நல்ல மருந்து. கொதிக்க வைத்த நீரில் மஞ்சள், பாறை உட்பு, மற்றும் கறுப்பு மிளகு ஆகியவற்றை கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை அருந்தினாலும் தீர்வு பிறக்கும். தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு மாதத்துக்கு இதனை அருந்த வேண்டும்.

கறுப்பு மிளகு

கறுப்பு மிளகு

பாக்டீரியாவின் எதிர்க்கும் சக்தி கறுப்பு மிளகில் அபரிமிதமாக உள்ளது. வலுவான எதிர்ப்பு சக்தியை கொண்டது. தொண்டை அழற்சிக்கு கறுப்பு மிளகுப் பொடியுடன் தேனை கலந்து ஒரு நாளைக்கு 4 முறை சாப்பிட வேண்டும். கொதிக்க வைக்கப்பட்ட வெதுவெதுப்பான நீரிலும் கறுப்பு மிளகை கலந்து நாள் முழுவதும் அருந்தலாம்.

துளசி மற்றும் இஞ்சி தேநீர்

துளசி மற்றும் இஞ்சி தேநீர்

துளசி இலையுடன், இஞ்சி மற்றும் கறுப்பு மிளகை தண்ணீரில் கொதிக்க வேண்டும், அது குளிந்த நிலையில் பாலுடன் சேர்த்து அருந்த வேண்டும். இதனை படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் செய்வது நல்லது. துளசி மற்றும் இஞ்சி டீயும் தொண்டை அழற்சிக்கு உதவும்

கேரட் பானம்

கேரட் பானம்

கேரட் ஜூஸ் தொண்டை அழற்சிக்கு வலிமையான நிவாரணி ஆகும். தொடர்ந்து 3 மாதங்களுக்கு அருந்தி வர இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழம்

ஒவ்வாமை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சக்தியைக் கொண்டது எலுமிச்சை. இதில் உள்ள வைட்டமின் சி தொற்றுகளை குணப்படுத்தக் கூடியது. வெது வெதுப்பான நீரில் நறுக்கப்பட்ட அரை எலுமிச்சை பழம், கறுப்பு மிளகு மற்றும் தேனுடன் சேர்த்து நாள் முழுவதும் குடித்து வர தொண்டைப் புண் குணமாகும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை சிறந்த நுண்ணுயிர் கொல்லியாக திகழ்கிறது. அதனால் இது தொண்டை அழற்சிக்கு பயன்படுகிறது. வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்து சாப்பிடும் போது அழற்சி நீங்கும்

சூடான கள் (விஸ்கி) (HOT TODDY)

சூடான கள் (விஸ்கி) (HOT TODDY)

சூடான் கள் தொண்டையில் உள்ள ரணத்தை அகற்றும். வெது வெதுப்பான நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் விஸ்கி, லெமன் ஜூஸ், மற்றும் தேன் கலந்து ஒரு நாளைக்கு 2 தடவை அருந்திவர நோய்த் தொற்று அகலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to test tonsillitis? – Best home remedies for tonsillitis

Tonsillitis remains one of the most painful and bothersome illnesses among preschoolers. Tonsils are two masses of lymphoid tissues.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more