For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உள்ளங்கை அரிச்சா காசு வரும்னு சொல்றது உண்மையா?... அப்போ வேற என்ன வரும்?

|

நிறைய பேர் இரிடேஷன் மற்றும் எக்ஸிமா சம்மந்தமான பல்வேறு பிரெச்சனைகளை கொண்டுள்ளனர்.

டிஷைட்ராடிக் எக்ஸிமா என்பது நமது உள்ளங்கைகளிலும் கால்களின் பாதங்களிலும், ஒரு அடுக்கான திரவ நிரப்பு தோல் அல்லது கொப்புளமாக உருவாகும். இந்த கொப்புளங்கள் 3 வாரங்களுக்கு நீடித்தவாறு அரிப்பை ஏற்படுத்தும்.

health

கொப்புளங்கள் காய்ந்தவுடன், பிளவுகளின் வளர்ச்சி மற்றும் தோப்புகள் காணப்படும். இந்த செயல்முறை சிறிது கடினமாகவே இருக்கும். இதற்கான சிகிச்சை வழிகளில் சில, ஈர அழுத்தம், அல்ட்ரா வயலட் ஒளி மற்றும் ட்ரோபிக்கள் கிரீம் பயன்பாடு போன்றவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கை அரிப்பு

கை அரிப்பு

அடிக்கடி நமக்கு அரிப்பு உடல் முழுவதும் ஏற்படாது. மாறாக கை, கால், உள்ளங்கை, மற்றும் உள்ளங்கால் போன்ற இடத்தை மட்டுமே பாதிக்கின்றன.அந்த பகுதியில் உருவாகின்றன கொப்புளங்கள் சிறியதாக காணப்பட்டாலும் அதனால் ஏற்படும் அரிப்பை நம்மால் தாங்க முடியாது. இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு பொதுவான தோல் வியாதியாக அமைகிறது.

சருமத்தில் சிக்கல் இருக்கும்போது, நாம் அனைவரும் ஒரு மருத்துவரிடம் விரைந்து செல்வது மிகவும் பொதுவான ஒன்று. ஆனால், அதற்கு முன்பு சில வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்வது ஆரோக்கியமானது.

காரணங்கள்:

காரணங்கள்:

ஹே காய்ச்சல் தோலழற்சிக்கு ஒரு காரணமாக அமையும். மேலும், ஆஸ்துமாவும் ஒரு காரணமாக அமையும். ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி வீக்கத்தை அதிகரிக்கும். திறப்பு மற்றும் நிறைவுடன் இருக்கக்கூடிய சீரம் சரும செல்கள் மற்றும் இடைவெளிகளின் மூடுதலுக்கு தொடர்புடையதாக இருக்கும்.

டாக்டர்களின் சொல்படி, ஸ்பான்ஜியோசிஸின் வளர்ச்சி மைக்ரோஸ்கோப் மூலம் எளிதாக காண முடியும்.

மற்றொரு குழுவினரின் கருத்துப்படி, டிஷைட்ராடிக் எக்ஸிமா எனப்படும் தோலழற்சி அரிப்புக்கு வழிவகுக்கிறது. இன்னொரு குழுவினர்களுக்கு, கையில் ஏற்படும் அரிப்பு வலியை அதிகரித்து கைகளின் பயன்பாட்டை பாதிக்கிறது.

டிஷைட்ராடிக் எக்ஸிமா / தோலழற்சியின் பிரச்சனையை ஒழிக்க நீங்கள் சில பயனுள்ள வீட்டு வைத்தியம் வைத்தியத்தை பின்படுத்தலாம்.

அலோ வேரா

அலோ வேரா

அலோ வேரா பல குணப்படுத்தும் குணங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக தோலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கங்களுக்கு நல்ல பயனை அளிக்கக்கூடியது. அதிலுள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள், தோலழற்சியால் ஏற்படும் பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ்ஸை நீக்குகிறது.

அலோ வேரா தோலிற்கு ஊட்டமளித்து, ஸ்கின்னை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. அது விரைவாக டிஷைட்ராடிக் எக்ஸிமா குணப்படுத்த உதவுவதாக அறியப்படுகிறது.

இந்த தோல் வியாதியை சில வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்யலாம். தினசரி உங்கள் தோல் மீது நேரடியாக அலோ வேரா ஜெல் தடவி வர உங்களால் மாற்றத்தை உணர முடியும்.

ஓட்மீல்

ஓட்மீல்

ஓட்மீல் ஆன்டி-இனபிலம்மாட்டோரி குணங்களை கொண்டுள்ளது. அதனால் இது நமைச்சலைக் குறைக்ககூடியது.

முகப்பரு, தடிப்புகள் மற்றும் வறட்சி போன்ற பல தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை குணப்படுத்துவதில் ஓட்மீல் நன்கு பயனளிக்கும்.

இது ஸ்கின்னுக்கு ஒரு எஸ்போலியடராக செயல்படுகிறது. மேலும், இது இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியாவை நீக்க பயன்படுகிறது.

ஓட்மீல் குளிர்ச்சியான பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதை நேரடியாக அப்ளை செய்து உலர்ந்த பின்னர் அதை கழுவவும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர் பெரும்பாலும் நிறைய வீட்டு வைத்தியர்களுக்கு பயன்படுகிறது. குறிப்பாக தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு.

இது டிஷைட்ராடிக் எக்ஸிமா தோலழற்சியை முற்றிலும் குணப்படுத்த கூடியது. ஆப்பிள் சிடர் வினிகரை சம விகிதத்தில் தண்ணீருடன் கலந்து ஒரு சுத்தமான பருத்தி பஞ்சை கொண்டு நேரடியாக ஸ்கின்னில் தடவவும்.

மாய்ஸ்சரைசர்

மாய்ஸ்சரைசர்

நீங்கள் வீட்டில் ஏராளமான மாய்ஸ்சரைசர் கொண்டிருக்கலாம். உங்கள் கைகளிலும் கால்களிலும் போதுமான அளவிற்கு அதை அப்ளை செய்ய வேண்டும். ஆனால் ஒருமுறை அதைப் பயன்படுத்துவது போதாது. மாறாக ஒரு நாளில் இரண்டு முறை அப்ளை செய்வது நல்லது.

இதை மதியம் குளித்து விட்டும் பின்பு இரவு தூங்குவதற்கு முன்பும் செய்யவேண்டும்.

இவ்வாறு செய்து வர ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கழித்து உங்களுக்கு நல்ல மாற்றம் தெரியும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

நமது ஸ்கின்னில் ஆலிவ் ஆயில் பயன்படுத்தி வர அது தோலழற்சியிலிருந்து விலகிச் செல்ல சிறந்த தீர்வுகளில் ஒன்றாக விளங்குகிறது.

இந்த வகையான தோல் நோய், உங்கள் கை, கால்கள், பாதங்கள், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் போன்ற இடத்தில் சிறிய கொப்புளங்களை உருவாக்குகிறது.

உங்கள் கையில் சிறிது ஆலிவ் ஆயில் எடுத்துக் கொண்டு, ஸ்கின் பிரச்சனை உள்ள இடத்தில் தடவ வேண்டும். உங்கள் கால்களுக்கும் அதையே செய்யுங்கள்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

டிஷைட்ராடிக் எக்ஸிமா தோலழற்சிக்கு மற்றொரு இயற்கை மற்றும் மிகவும் பயனுள்ள தீர்வு தேங்காய் எண்ணெய் தவிர வேறு ஒன்றும் இல்லை.

மற்ற எண்ணெய் வகைகளைப் போலவே, நீங்கள் இதை உங்கள் கைகளிலும், உள்ளங்கைகளிலும், பாதங்களிலும், பிரச்சனை உள்ள எல்லா பகுதிகளிலும் அப்ளை செய்ய வேண்டும்.

அப்ளை செய்து ஸ்கின் எண்ணெயை உரியும் வரை காத்திருக்க வேண்டும் பிறகு நீங்கள் இதை கழுவலாம் இல்லையெனில் அப்படியே விட்டுவிட்டு, வித்தியாசத்தை காணலாம்.

வீட்டு வைத்தியம்:

வீட்டு வைத்தியம்:

- இத்தகைய அரிக்கும் தோலழற்சியால் பாதிக்கப்படும் நோயாளிகள் நகங்களைக் கொண்டு சொரிவதோ பூருவதோ கூடாது. இந்த சூழ்நிலையில் நகங்களை வைத்துக்கொள்வது அவசியம்.

- உடலில் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளை உப்பு நீரில் நனைக்க வேண்டும்.

- தோலழற்சியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான வெள்ளை வினிகர் ஒரு சிறந்த வழியாகும்.

- உங்களுக்கு ராஷஸ் ஏற்பட்டிருந்தால் அந்த பகுதிகளை சொறியாமல் இருப்பது நல்லது

- உங்கள் ஸ்கின்னை தண்ணீரில் வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது

- குளிக்கும் போது, ​​மென்மையான சோப்பு மற்றும் இதர தோல் பராமரிப்பு பொருட்கள் பயன்படுத்த வேண்டும்.

- கைகளை கழுவிய பின்னர் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது நல்லது.

- நீங்கள் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்கவும். மாறாக, நீங்கள் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.

- நமைச்சலை குறைக்க குளிர் மற்றும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்

- வாசனை மற்றும் நறுமணம் கொண்டிருக்கும் சோப்புகள் தவிர்க்கப்பட வேண்டும்.

- கடுமையான சோப்பு மற்றும் பிற பொருட்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

போட்டோதெரபி

போட்டோதெரபி

போட்டோதெரபி இதுமாரியான உடல் நிலை சிகிச்சைக்கு ஒரு நல்ல வழி. சிகிச்சையுடன் இயங்குவதற்கு அல்ட்ரா வயலட் ஒளியைப் பயன்படுத்துகின்ற மருத்துவரிடம் நன்கு ஆலோசிக்க வேண்டும்.

போட்டோதெரபி என்பது அல்ட்ரா வயலட் ஒளியுடன் மருந்துகளை ஒருங்கிணைத்து செய்யக்கூடிய ஒரு சிகிச்சை. ஒரு புதிய வகை அல்ட்ரா வயலட் B ஒளி, ஒரு நல்ல விளைவு பெற இணைந்துள்ளது. இது ஒளியின் அதிகமான விளைவுகளை அளிக்க உதவுகிறது.

சிலர் டிஷைட்ராடிக் எக்ஸிமா போன்ற தோலழற்சிக்கு டாக்சின் ஊசி பெறுவதை நம்புகின்றனர். ஏனெனில் கடுமையான நோய்களை எளிதில் கையாள உதவுகிறது. இது ஒரு புதிய சிகிச்சை முறையாக இருந்தாலும் கூட, இது மிகவும் பிரபலமடையவில்லை.

மேலும் தோலழற்சியை சரிசெய்ய பல்வேறு மூலிகை சம்பந்தப்பட்ட சிகிச்சைகளும் உள்ளன. சில இயற்கையான அடிப்படை மூலிகைகள் கொண்டு, நீங்கள் பாதிக்கப்படுகிற உடல் நிலைமையை மாற்றுவது மிகவும் எளிது. இந்த சூழ்நிலையில் நோயெதிர்ப்பு அடக்குமுறை பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home remedies for dyshidrotic eczema that helps to get rid of itchy fingers

Eczema where the affected area is hand and feets. The itching does not take place in entire body. Rather only the portions such as soles, palm, feets and hands are affected.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more