For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில எழும்போது இந்த அறிகுறிகள்லாம் இருந்தா உங்களுக்கு குடலிறக்கம் இருக்குனு அர்த்தம்...

இந்த கட்டுரையில் குடலிறக்க நோய் எப்படி உருவாகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன, அதை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

|

குடலிறக்கம் அல்லது ஹெர்னியா என்பது ஒரு உறுப்பு அல்லது திசுவினால் உருவாக்கப்படும் ஒரு புடைப்பு.காரணம் மிகவும் பொதுவான குடலிறக்கம் அடிவயிற்றில் தான் ஏற்படுகின்றது. அடி வயிற்று சுவரில் ஏற்படும் பலவீனத்தால் கொழுப்பு திசு அல்லது அடி வயிற்று உறுப்புகள் வெளிவருகின்றன.

hernia types causes symptoms and treatment

இந்த குடலிறக்கம் தொப்புள், மேல் தொடை பகுதிகள், இடுப்பு பகுதிகள் போன்ற இடங்களிலும் ஏற்படலாம். இது பிறந்த குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை பாதிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடலிறக்க வகைகள் இங்குவினல் ஹெர்னியா (வெட்டுசார் குடலிறக்கம்)

குடலிறக்க வகைகள் இங்குவினல் ஹெர்னியா (வெட்டுசார் குடலிறக்கம்)

பிரிட்டிஷ் ஹெர்னியா மையம் படி, அனைத்து ஹெர்னியாக்களிலும் சுமார் 70 சதவீதம் வரை காணப்படும் குடலிறக்கம் இந்த வகை ஆகும். ஆண்களுக்கே இந்த வித ஹெர்னியா அதிகமாக ஏற்படுகிறது. ஆண் குழந்தை பிறப்பதற்கு சற்று முன்பு தான் அதன் விரைப்பைகள் அடிவயிற்றுப் பகுதியில் இருந்து கவட்டைக்கால் என்று சொல்லப்படும் (inguinal canal) என்ற பகுதி வழியாக கீழே இறங்கும். இந்த கவட்டைகால் பகுதி பொதுவாக மூன்று அல்லது ஆறு மாதங்களில் இயல்பாகவே மூடிக்கொள்ளும். ஆனால் சில சமயங்களில் இந்த பகுதி மூடாமல் இருப்பதால் தான் பின்னாளில் இதுவே குடலிறக்கம் ஏற்படக் காரணமாக அமைந்துவிடுகிறது.

கீறல் அல்லது அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் குடலிறக்கம் (இன்ஸிஸனல் ஹெர்னியா)

அறுவை சிகிச்சை செய்த பிறகு அந்த பகுதியில் குடலிறக்கம் ஏற்பட்டால் அதனையே கீறல் ஹெர்னியா என்று அழைக்கிறோம்.

Most Read : காலையில் குடிக்கும் காபியுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிங்க... ஏன் தெரியுமா?

ஹையாடல் ஹெர்னியா

ஹையாடல் ஹெர்னியா

இது திரைத்தசை / ஆஸ்போகஸ் உணவு வால்வு என்று சொல்லப்படும், நெஞ்சையும் வயிற்றையும் பிரிக்கும் வலுவான தசைப்பகுதியில் ஏற்படும் பலவீனத்தால் ஏற்படுகிறது. இந்த குடலிறக்கத்தால் சில சமயங்களில் நெஞ்செரிச்சல் ஏற்படும். 50 வயதை அடைந்தவர்களுக்கு இந்த குடலிறக்கம் சாதாரணமாக காணப்படுகிறது.

தொடை பகுதியில் ஏற்படும் குடலிறக்கம்

தொடை பகுதியில் ஏற்படும் குடலிறக்கம்

இந்த வகை குடலிறக்கம் பெண்களுக்கு பொதுவாக ஏற்படுகிறது. இந்த ஹெர்னியாவில் "கவட்டை" என்று சொல்லப்படும் "groin"என்ற குடல் திசுக்களின் பலவீனமான பகுதி தொடை எலும்புக் கால்வாய் என்று சொல்லப்படும் femoral canal பகுதிக்குள் குடலிறக்கம் ஏற்படும். இது பொதுவாக கருவுற்ற பெண்களுக்கு, உடல் பருமன் உள்ள பெண்களுக்கு ஏற்படும்.

தொப்புள் பகுதியில் ஏற்படும் குடலிறக்கம்

தொப்புள் பகுதியில் ஏற்படும் குடலிறக்கம்

(அ) அம்பிளக்கள் ஹெர்னியா

இந்த குடலிறக்கம் தொப்புள் பகுதியில் ஏற்படுகிறது. தொப்புள் பகுதியானது வயிற்றுப்பகுதியில் இயல்பாகவே பலவீனமான தசைகளைக் கொண்டு இருக்கும். தொப்புள்கொடி அறுக்கப்பட்டவுடன் அது மூடுவதற்கு முன்பாக சில காலங்களுக்கு இந்த வகை ஹெர்னியா இயல்பாகவே குழந்தைகளுக்கு இருக்கும். அது தானாகவே சில மாதங்களில் மறந்துவிடும்.சிறு குடல் ஒரு பகுதியாக வயிற்று தசைகளை தள்ளும் போது தொப்புள் பகுதிகளில் வீக்கம் ஏற்படுகிறது. இது தான் அம்பிளக்கள் ஹெர்னியா.

MOST READ: பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா? எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க...

ஹெர்னியா ஏற்படக் காரணங்கள்

ஹெர்னியா ஏற்படக் காரணங்கள்

திசுச் சிதைவு மற்றும் பழுது தூக்குதல்

இது இயற்கையாகவே நமது உடலில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. காயம் காரணமாக திசுக்களில் ஏற்படும் கிழிஞ்சல்கள் பெரும்பாலும் குடலிறக்கம் ஏற்படக் காரணமாக அமைகிறது. உள் உறுப்புகள் எளிதாக புடைப்பதற்கு திசுச் சிதைவு வழிவகுக்கிறது.

வயதாகுதல்

அழுத்தத்துடன் தொடர்ந்து இருமல் போன்றவை திசுக்கள் பலவீனமடைய காரணமாகின்றன.

அறுவை சிகிச்சைக்கு பிறகு வயிற்று தசைகள் வீக்கமடைதல்

அதிகமாக எடை தூக்குவது

மலச்சிக்கல்

அடிவயிற்றில் இருக்கும் நீர்

பிறப்பு குறைபாடுகள் போன்றவை குடலிறக்கத்தை ஏற்படுத்துகிறது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீக்கம் காணப்படுதல்

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வலி

அசெளகரியம்

பலவீனம்

சோர்வு

வலியை உணரும் உணர்வு

மார்பு வலி

உணவை விழுங்குவதில் சிரமம்

நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும்.

அபாய காரணிகள்

பரம்பரை ரீதியாக வருதல், அதிக உடல் பருமன், நாட்பட்ட மலச்சிக்கல், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்றவை குடலிறக்கத்தை மேலும் அபாயமாக்கு கின்றன.

MOST READ: ஐஸ்வர்யா மாதிரி அடிக்கடி மூடு மாறிக்கிட்டே இருக்கும் ராசிகள் எதுன்னு தெரியுமா? இந்த ஆறும் தான்

கண்டறிதல்

கண்டறிதல்

உடற்கூறியல் மூலம் வெட்டுசார் குடலிறக்கம் மற்றும் இன்ஸிஸனல் (கீறல் அல்லது அறுவை சிகிச்சை குடலிறக்கம்) கண்டறியப்படுகிறது. இதற்கு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவர்கள் உங்கள் அடி வயிற்றில் எதாவது புடைப்பு அல்லது வீக்கத்தை கண்டால் குடலிற்க்கமாக இருக்கலாம். ஹையாடல் குடலிறக்கம் எக்ஸ்ரே அல்லது எண்டோஸ்கோபி முறை மூலம் கண்டறியப்படுகிறது. இதன் மூலம் வயிற்றின் உட்புற பகுதிகளை படம் பிடித்து கண்டறிவர்.

சிகச்சைகள்

சிகச்சைகள்

குடலிறக்கத்திற்கு பொதுவாக அறுவை சிகிச்சை தான் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் ஹையாடல் குடலிறக்கத்திற்கு ஆன்டாஸிட், H2 ஏற்பிகள், புரோட்டான் பம்ப் தடுப்பான்கள் போன்ற மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை குறைத்து குடலிறக்க அறிகுறிகளை குறைக்கிறது.

அறுவை சிகிச்சை என்பது உங்கள் குடலிறக்க வகை, அறிகுறிகளின்அளவு போன்ற காரணிகளை கருத்தில் கொண்டே முடிவெடுக்கப்படுகிறது.

MOST READ: புரட்டாசி செவ்வாய் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள் காத்திருக்கு?

குடலிறக்க சிகச்சை வகைகள் இரண்டு விதமான அறுவை சிகிச்சையை மேற்கொள்ளுகின்றன.

குடலிறக்க சிகச்சை வகைகள் இரண்டு விதமான அறுவை சிகிச்சையை மேற்கொள்ளுகின்றன.

திறந்த அறுவை சிகிச்சை முறை

இந்த முறையில் தசை சுவரில் கீறலை ஏற்படுத்தி அங்கு மெல்லிய வலைகளை வைத்தோ தைத்தோ அல்லது அறுவை சிகிச்சை பசைகளைக் கொண்டு ஒட்டியோ பலவீனமான தசைகளை வலுப்பெற வைக்கின்றனர். இதன் மூலம் குடலிறக்கம் சரி செய்யப்படுகிறது.

லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை

லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை

இது ரெம்ப கடினமான அறுவை சிகிச்சை என்றாலும் இதன் மூலம் அருகில் உள்ள திசுக்கள் அறுவை சிகிச்சையின் போது பாதிப்படைவதை தடுக்கலாம். இதில் வயிற்று பகுதியில் சிறு துளையிட்டு அதன் மூலம் லேப்ரோஸ்கோபி என்ற சாதனத்தை உட் செலுத்தி அதிலிருந்து வரும் வீடியோ படங்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

hernia types causes symptoms and treatment

In this article, we will write about the causes of hernia, symptoms and treatment.
Desktop Bottom Promotion