For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கால் கட்டைவிரல் இப்படி ஆகுறதுக்கு என்ன காரணம் தெரியுமா?... இதுதான் காரணம்...

பொதுவாக இந்த நோயின் தாக்குதல் இரவு நேரங்களில் அதிகமாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் அதிக வலியை அனுபவிக்கும்போது, அவர்களில் கால் கட்டை விரல் சிவப்பாக மாறுகிறது.

|

முடக்கு வாதத்தால் அவதிப்படுபவர்கள் உண்ணும் உணவில் கவனம் கொள்ள வேண்டும். இத்தகைய நபர்கள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துவதால் இந்த நோயின் அறிகுறிகள் இன்னும் மோசமாக மாறுவதை தவிர்க்கலாம்.

health

மூட்டு வலி அல்லது கீல்வாதம், இதன் மிகவும் வலி நிறைந்த வடிவம் தான் இந்த முடக்கு வாதம். உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் நுண்ணிய படிகங்களின் குவிப்பு காரணமாக முடக்கு வாதம் ஏற்படுகிறது. இந்த படிக குவிப்பு காரணமாக முழங்கால்கள், கணுக்கால் மற்றும் உடலின் பிற பகுதிகள் பாதிக்கப்படுகின்றது. இது அடிக்கடி மூட்டுகளை பாதிக்கிறது, மேலும் உடல் மற்றும் சிறுநீரகங்களில் உள்ள மென்மையான திசுக்களில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோய் தாக்குதல்

நோய் தாக்குதல்

இந்த நோயின் தாக்குதல் இரவு நேரங்களில் அதிகமாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் அதிக வலியை அனுபவிக்கும்போது, அவர்களில் கால் கட்டை விரல் சிவப்பாக மாறுகிறது. இந்த முடக்கு வாத பிரச்சனை உள்ளவர்களில் 20% மக்கள், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

காரணம்

காரணம்

இந்த பிரச்சனை ஒருவித வீக்கம் அல்லது அழற்சியை உருவாக்குகிறது என்பதால், பொதுவாக வலி, இயங்குவதில் கஷ்டங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சீரழிவு ஆகியவை இதன் தொடர்ச்சியாக ஏற்படுகிறது. இந்த முடக்கு வாதம் உண்டாவதற்கான சரியான காரணத்தை நிபுணர்கள் இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் சில விஷயங்களுடன் இந்த நோய்க்கு தொடர்பு உள்ளது. அவை,

மெனோபாஸ் காலகட்டத்திற்கு பிறகு பெண்கள் அனுபவிக்கும் மாற்றம். கூடுதலாக, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் எடை அதிகரிப்பும் இந்த முடக்கு வாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக அறியப்படுகிறது.

ஆகவே, நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் இந்த தாக்கத்தை அதிகரிக்கும் சில உணவுகள் உண்டு. இந்த உணவுப் பட்டியலை நாம் அறிந்து கொள்வதால், அந்த உணவுகளை முற்றிலும் தவிர்த்து அல்லது மிதமான அளவு எடுத்துக் கொள்வதால் இந்த நோயின் அறிகுறி மேலும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தலாம்.

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியை அதிகமாக எடுத்துக் கொள்வதால் முடக்கு வாதம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. மேலும், ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பல சிக்கலை சந்திக்க நேரும். இதற்குக் காரணம், சிவப்பு இறைச்சியில் அதிக ப்யுரின் உள்ளது. மேலும், இதில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் எடை அதிகரிப்பு உண்டாகிறது. இந்த வகையான இறைச்சியை உட்கொள்வதால் உடலின் அழற்சியின் செயல்களில் பிரச்சினைகள் ஏற்படலாம் மற்றும் யூரிக் அமிலம் வலியை உடலிலேயே தக்கவைத்துக்கொள்ளலாம்.

கடல் உணவுகள்

கடல் உணவுகள்

கடல் உணவுகளில் பொதுவாக விரும்பி சுவைக்கப்படும் மட்டி மீன் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். கடல் உணவில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் , இவற்றில் அதிக அளவு ப்யுரின் உள்ளது. இந்த வகை பொருட்கள் உடலில் யூரிக் அமிலமாக மாற்றம் பெறுகிறது. கடல் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால், இத்தகைய கூறுகள் உடலில் அதிகரித்து வலி மற்றும் வீக்கத்தை மேலும் மோசமடைய வைக்கிறது.

பீர்

பீர்

பீரில் சேர்க்கப்படும் பல மூலப்பொருட்கள் மிகவும் ஆரோக்கியமானவை. ஆனாலும், கீல்வாதத்தில் இந்த வகை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். இந்த பானம் உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது, மேலும் பாதிப்புகளை மோசமாக்குகிறது மற்றும் யூரிக் அமிலத்தை அகற்றும் செயல்முறைகளை பாதிக்கிறது. கூடுதலாக, அதன் கலவைகள் நேரடியாக மூட்டுகளின் அழற்சியின் செயல்களை பாதிக்கின்றன, அதே நேரத்தில் விறைப்பு மற்றும் இயக்கத்தின் சிரமம் போன்றவை அதிகரிக்கும்.

இனிப்பு பானங்கள்

இனிப்பு பானங்கள்

குளிர்பானங்கள் மற்றும் இனிப்பு பானங்களில் கார்ன் சிரப் மற்றும் ப்ருக்டோஸ் சேர்க்கப்படுகிறது. மேலும் செயற்கை சுவையூட்டிகள் சேர்த்து தயாரிக்கப்படுவதால் இவற்றின் மூலம் யூரிக் அமில உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. இத்தகைய பானங்களை தினமும் அதிகளவு உட்கொள்வதால் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அழற்சி பாதிப்புகளான கீல்வாதம் முடக்கு வாதம் போன்றவை ஏற்படலாம். கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களை பருகுவதால் வயது முதிர்ச்சி அடையும் போது எலும்பு தொடர்பான பிரச்சனைகள் தோன்றவும் வாய்ப்புகள் உண்டாகிறது.

வெள்ளை மீன்

வெள்ளை மீன்

சில வகையான மீன், வீக்கம் மற்றும் வலியைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்றாலும், யூரிக் அமிலக் அதிகரிப்பைக் கொண்ட நோயாளிகளுக்கு வெள்ளை மீன் தீங்கு விளைவிக்கிறது. இந்த வகை மீன்களில் 50 முதல் 150 மில்லி கிராம் அளவு ப்யுரின் உள்ளது. ஆகவே இதனை உட்கொள்வதால் முடக்கு வாதத்திற்காக எடுத்துக் கொள்ளும் சிகிச்சை பலன் கொடுப்பதில்லை. மாறாக இதன் அறிகுறிகள் அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டு. இந்த வகை மீன்களில் சில,

பண்ணா மீன் (Cod)

பாஸ் மீன் (Bass)

நீல மீன் (Blue Whiting Fish)

கில்ட் (Gilt - Head bream)

ஹேக் (Hake)

காளான்

காளான்

ருசியான, கவர்ச்சியான மற்றும் கலோரிகளில் குறைவாக இருக்கும் காளான்கள், ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக இருக்கின்றன, பல மக்கள் பல்வேறு சமையல் வகைகளில் இதனைச் சேர்க்க விரும்புகிறார்கள். எனினும், இந்த கீல்வாதத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த உணவின் நுகர்வு குறைக்கப்பட வேண்டும். காளான்கள் மூட்டுகளில் யூரிக் அமில படிகங்களின் படிவை அதிகரிக்கும் என்பதே இதற்குக் காரணம்.

ஈரல் உணவுகள்

ஈரல் உணவுகள்

இரும்பு சத்து குறைபாடால் ஏற்படும் இரத்த சோகை உள்ளவர்களுக்கு கல்லீரல் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் முடக்கு வாதம் உள்ளவர்கள் இந்த உணவை தவிர்ப்பது நல்லது. விலங்கு இறைச்சியில், மற்ற பகுதிகளை விட, கல்லீரல் பகுதியில் ப்யுரின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. ஆகவே இது முடக்கு வாதம் உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறது.

முடக்குவாத அறிகுறிகளைக் குறைக்க மற்றும் இதன் பாதிப்பை கடந்து வர, மேலே கூறிய உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமான விஷயமாகும். மாறாக, இந்த பாதிப்பை அகற்றுவதற்கு பெரிதும் பங்களித்திருக்கும் அழற்சி எதிர்ப்பு, வலி நிவாரணி மற்றும் நச்சுகளை நீக்கும் பண்புகளுடன் கூடிய உணவுகளை சாப்பிடுவதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do You Suffer from Gout? Avoid These 7 Foods

Gout is one of the most painful forms of arthritis. It’s caused by the accumulation of microscopic crystals of uric acid in the body.
Story first published: Wednesday, May 30, 2018, 16:08 [IST]
Desktop Bottom Promotion