For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் இளைக்கும்போது கொழுப்பு எப்படி வெளியேறுகிறது தெரியுமா?

உடலிலுள்ள கொழுப்பு எந்த மாதிரி வெளியேறுகிறது என இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Ambika Saravanan
|

நாளுக்கு நாள் உடல் எடை அதிகரிப்பதை உணர்ந்து இன்று பலரும் பல வித முயற்சிகளை அல்லது பயிற்சிகளை மேற்கொண்டு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்கின்றனர்.

உடலில் இருந்து கொழுப்புகள் வெளியேற்றப்படும்போது தான் உடல் இளைக்கிறது. இந்த கொழுப்புகள் எங்கே போகின்றன எப்படி போகின்றன என்று யாராவது யோசித்ததுண்டா? அந்த யோசனைக்கான பதில் தான் இந்த தொகுப்பு!

உடலுக்கு தேவையான அளவை விட அதிகமாக உட்கொள்ளும்போது , அந்த குறிப்பிட்ட அளவிற்கு அதிகம் சேரும் உணவுகள் கொழுப்பாக மாற்றம் பெற்று உடலில் சேமித்து வைக்க படுகின்றன.

இப்படி சேமித்து வைக்கப்பட்ட கார்போ ஹைட்ரெட் மற்றும் புரதங்கள் ட்ரை கிளிசெரைடுகளாக மாறுகின்றன. இந்த ட்ரை கிளிசெரைடுகள் என்பது ஒரு வகை கொழுப்புகள் ஆகும். இவை இரத்தத்தில் காணப்படும்.

what happens to fat when you lose your weight

மற்ற கூறுகளை போல இவையும் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனால் உருவாக்கப்பட்டவை ஆகும். இவை கொழுப்பு செல்களில் சிறு சிறு துளிகளாக சேமித்து வைக்க பட்டிருக்கும். உங்கள் எடை குறையும் போது இவைகள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.

சரி இந்த கொழுப்புகள் எங்கே, எப்படி போகின்றன? இதற்கான பதில் உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.

உங்கள் உடலில் இருந்து வெளியேறும் கொழுப்புகள் சுவாசத்தின் வழியாக கார்பன் டை ஆக்சைடாக வெளியேறுகிறது. இன்னும் சொல்ல போனால், உங்கள் நுரையீரல் தான் எடை குறைப்பிற்கு உதவும் உள்ளுறுப்பாகும். எடை குறைப்பை செய்வதற்கான முக்கிய பணியாகிய கொழுப்புகள் வெளியேற்றம் நுரையீரலில் தான் நடைபெறுகிறது.

10 கிலோ எடை யை குறைப்பதாக வைத்து கொள்வோம். இதற்கு நீங்கள் சராசரியாக 29 கிலோ ஆக்ஸிஜனை உள்ளிழுக்க வேண்டும். அது 28 கிலோ கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் 11 கிலோ தண்ணீரை உற்பத்தி செய்ய வேண்டும்.

உங்கள் மூச்சு காற்றில் வெளியேறுவது கார்பன் டை ஆக்ஸைட் மற்றும் ஈரப்பதம் . சுவாசத்தினால் தான் உடலில் எடை குறைப்பு ஏற்படுகிறது என்பதால் இந்த செயலின் போது உருவாகும் சிறு அளவு நீரும் , சிறுநீர், வியர்வை , கண்ணீர் போன்ற வழிகளில் வெளியேறிவிடுகிறது.

வியர்வை வழியாக ஒரு சிறு அளவு கொழுப்புகள் மட்டுமே வெளியேறுகிறது. மலத்தின் வழியாக ஒரு சிறு அளவு வெளியாகிறது. அதிகப்படியான கொழுப்பு உங்கள் மூச்சு காற்றின் வழியாக மட்டுமே வெளியேறுகிறது.

English summary

what happens to fat when you lose your weight

what happens to fat when you lose your weight
Story first published: Friday, September 15, 2017, 10:55 [IST]
Desktop Bottom Promotion