For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஒரு சூப்பர் பழம் இதுதான்!!

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க பல வகைகளில் முயற்சித்திருப்பீங்க. ஆனால் நீங்கள் ப்ளூ பெர்ரியை உபயோகித்திருக்கிறீர்களா? அதில் செய்யப்படும் ஸ்மூத்தி உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

|

ரத்த அழுத்தம் பல மோசமான வியாதிகளுக்கு அஸ்திவாரம். பக்க வதம், இதய நோய்கள். மூளை அழற்சி முதற்கொண்டு உயிருக்கு ஆபத்தை தரும்.

அதுவும் டென்ஷனான வேலைகள் இருந்தால் தினமும் கை நிறைய மாத்திரைகளுடனே உங்கள் நாட்களை தொடங்க வேண்டும் என்பது உண்மையில் வேதனைக் குரியதுதான். அப்படியான உங்களுக்கு ரத்த அழுத்தத்தை இயற்கை முறையில் குறைப்பதற்கான ஒரு வழியைதான் இங்கே சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ப்ளூபெர்ரி :

ப்ளூபெர்ரி :

ப்ளூ பெர்ரி ஆப்பிளை விட இரு மடங்கு சத்துக்களை கொண்டது. பல்வேறு ஆராய்ச்சிகள் ரத்த அழுத்தத்திற்கான சிறந்த பழமாக ப்ளூபெர்ரியை சுட்டிக் காட்டுகிறது.

 தேவையானவை :

தேவையானவை :

ஜர்னல் ஆஃப் அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் டயடிக்ஸ் நடத்திய ஆய்வில் , 8 வாரங்களுக்கு மெனோபாஸ் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு ப்ளூபெர்ரி பொடி செய்து கொடுக்கப்பட்டது.

8 வாரத்திற்குப் பின் ரத்த அழுத்தம் முழுதும் குறைந்திருந்தது. இது போலவே அபல் ஆராய்ச்சிகள் பல்வேறு நிறுவனங்கள் நடத்தியதில் ப்ளூ பெர்ரி ஆச்சரியயப்படும்விதத்தில் ரத்த அழுத்தத்தை குறைத்திருந்தது.

ப்ளூபெர்ரி ஸ்மூத்தி செய்ய தேவையானவை :

ப்ளூபெர்ரி ஸ்மூத்தி செய்ய தேவையானவை :

ப்ளூ பெர்ரி - 1 கப்

வாழைப் பழம் - 1

கொழுப்பில்லா யொகார்ட் - 1 கப்

பசலை கீரை - 1 கப்

செய்முறை :

செய்முறை :

வாழைப்பழம் மற்றும் பசலைக் கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அவற்றுடன் ப்ளூபெர்ரி மற்றும் யொகார்ட் கலந்து நன்றாக மிக்ஸியில் அரைக்கவும். அதனை வடிகட்டாமல் அப்படியே பருக வேண்டும். தினமும் பருகினால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

நன்மைகள் :

நன்மைகள் :

ப்ளூ பெர்ரியில் அதிக ஃப்ளேவினாய்டு இருக்கிறது. அதிலுள்ள ஆந்தோசயனின் என்ற ஆனி ஆக்ஸிடென்ட் ரத்த அழுத்ததை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.இதனை ஒரு டம்ள் அர் அளவு தயாரித்து காலையில் அரை கப் மற்றும் மதியம் அரைக் கப் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Smoothie that lowers Blood pressure naturally

The Smoothie that lowers Blood pressure naturally
Story first published: Monday, January 2, 2017, 15:54 [IST]
Desktop Bottom Promotion