மலச்சிக்கல் எப்பவும் இருக்கிறதா? எதுக்கும் இந்த டெஸ்ட் பண்ணிக்கோங்க!!

Posted By:
Subscribe to Boldsky
மலச்சிக்கல் எப்பவும் இருக்கிறதா? எதுக்கும் இந்த டெஸ்ட் பண்ணிக்கோங்க!!- வீடியோ

உங்கள் உடலில் ஒரு ஹார்மோன் சுரப்பு குறைந்தால் மொத்த உடலிலும் பாதிப்பு உண்டாகும்;. அந்த பாதிப்புகள் எல்லாம் பலவித பிரச்சனைகளை உண்டாக்கும். அது எந்த ஹார்மோன் தெரியுமா? தைராய்டு. ஆமாம் அதுதான் பலவித உடல் ஹார்மோன் மற்றும் உப ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் மேனேஜர் போல் நிர்வகிக்கும்.

அந்த தைராய்டு ஹார்மோன் குறைவதால் பாதிப்பு உண்டாகும். அதிகமானாலும் பாதிப்பு உண்டாகும்.

ஹைபோதைராய்டு என்பது தைராய்டு ஹார்மோன் சுரப்பது குறைவதால் உண்டாகும் பிரச்சனை. இது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். இதனால் மொத்த உடலிலும்பாதிப்பு உண்டாகும்.

ஹைபோதைராய்டின் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருக்கும். செயல்கள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாது. முகம் வீங்கும். முடி கொட்டும்.இளநரை தோன்றும். தோல் வறட்சி ஆகும்.

ஹைபோதைராய்டின் அறிகுறிகளை நீங்கள் எப்போதும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இதனால் வரும் முன் காப்போமென மென்னெச்செரிக்கையாக இருப்பது நல்லதுதானே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சரும நிற மாற்றம் :

சரும நிற மாற்றம் :

உங்களுக்கு ஹைபோ தைராய்டிசம் இருந்தால் உங்கள் சரும நிறம் மஞ்சளாக , வெளுத்து காணப்படும். அதோடு பலவீனமான நகங்கள் காணப்படும். எப்போதும் சருமம்

வறண்டு காணப்படும்.

காலையில் வீக்கம் :

காலையில் வீக்கம் :

காலையில் உங்கள் பாதங்கள் வீக்கமடைந்திருந்தால் அது ஹைபோதைராய்டிசமாக இருக்கலாம். முகமும் கழுத்தும் வீங்கியிருக்கும்..கண்களுக்கு அடியில் நீர்ப்பை தேங்கி கண் ரப்பை வீங்கிருந்தால் இதன் அறிகுறிகளாக இருக்கும்.

குளிர் தாங்க முடியாது :

குளிர் தாங்க முடியாது :

மிகச் சாதரண குளிர் கூட தாங்க இயலாமல் இருக்கும். பின்னர் அதிகாலையில் அதிக நடுக்கம் உண்டாகும். வெயில் நேரத்திலும் நடுக்கமாய் உணர்வீர்களேயானால் அது இதன் குறைப்பாட்டினால் இருக்கலாம்.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் :

தைராய்டு ஹார்மோன் குறைபாடு இருந்தால் மலச்சிக்கல் உருவாவது சகஜம். நிறைய தண்ணி மற்றும் நார்ச்சத்து உணவுகள் சாப்பிட்டும் மலச்சிக்கல் பிரச்சனை உங்களுக்கு இருந்தால் அது இந்த பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

உடல் எடை அதிகரிப்பு :

உடல் எடை அதிகரிப்பு :

குறைவாகத்தான் சாப்பிடுவீர்கள். ஆனால் உடல் எடை புசுபுசுவென அதிகரித்தால் அது ஹைபோதைராய்டின் அறிகுறியாக இருக்கலாம். தைராய்டு குறையும்போது உடல்

தனிச்சையாக வீக்கம் பெறுகிறது. வளர்சிதை மாற்றம் குறைகிறது. அதன் பாதிப்பே உடல் எடை கூடுதல்.

ஞாபக மறதி :

ஞாபக மறதி :

உங்களால் ஒரு விஷயத்தில் கவனம் கொள்ள இயலவில்லையென்றால், அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுகிறதென்றால் இது ஹைபோதைராய்டின் அட்வான்ஸ்டு நிலையாகும்.

தலைவலி :

தலைவலி :

எப்போதும் தலைவலி, அல்லதுஒற்றைத் தலைவலியால அவதிப்படுவீர்களென்றால், அதற்கு பலவித காரணங்கள் இருக்கின்றன. அதில் இந்த ஹைபோதைராய்டிஸத்தின் அறிகுறியும் ஒன்றாகும்.

புருவங்கள் உதிர்தல் :

புருவங்கள் உதிர்தல் :

இது இன்னொரு அறிகுறி. புருவ முடிகள் திடீரென உதிர்ந்து கொண்டு வந்தால் அது குறிய ஹைபோதைராய்டின் அறிகுறியாகும். ஆனால் இதனை வெகுசிலரே கூர்ந்து

கவனிப்பார்கள். பெரும்பாலோனோர் புருவ முடி உதிர்தலை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இதுவும் இதன் அறிகுறிகளின் ஒன்றே.

கர்ப்பம் தங்காமை :

கர்ப்பம் தங்காமை :

அடிக்கடி கர்ப்பம் கலைந்தால் அல்லது சீரில்லாத மாதவிடாய் தோர்ந்தால் இதுசீரில்லாத ஹார்மோனால் உண்டாகும் பிரச்சனை. இது அத்தைனைக்கும் காரணம் தைராய்டு

குறைபாடே.

சோம்பேறித்தனம், சோர்வு :

சோம்பேறித்தனம், சோர்வு :

உங்களுக்கு எந்த வேலையிலும் நாட்டமில்லாமல் இருந்தால், சின்ன வேலையிலும் சோர்வு தென்பட்டால், எதையும் செய்வதற்கு கஷ்டமாக இருந்தால், எதற்கும் மருத்துவரை நாடுங்கள்.

சீரற்ற இதயத் துடிப்பு :

சீரற்ற இதயத் துடிப்பு :

உங்களுக்கு அடிக்கடி படபடப்பு உண்டானால், அல்லது சீரில்லாத இதயத் துடிப்பு உண்டாகியிருந்தால், அது இந்த கோளாறின் அறிகுறியாக இருக்கலாம்.

செக்ஸில் நாட்டமின்மை :

செக்ஸில் நாட்டமின்மை :

செக்ஸ் விஷயத்தில் ஈடுபாடில்லாமல் இருக்கும். யர மீதும் ஈர்ப்பில்லாமல் இருக்கும். யாரை கண்டாலும் எரிந்து விடுவார்கள். இந்த விஷயங்களைக் கொண்டு நீங்கள்

மருத்துவரை நாடி பரிசோதிப்பது நல்லது.

மன அழுத்தம் :

மன அழுத்தம் :

காரணமின்றி அழுவது, அடிக்கடி கோபம், திடீரென மன வியாதி வந்தவர் போல் நடந்து கொள்வது யரைடமும் நெருங்கி பழகாமல் இருப்பது, தன்னையே மற்றவர்கள் கவனிப்பது போன்ற பிரம்மை போன்றவை எல்லாம் ஹைபோதைராய்டின் அறிகுறிகள்தான்.

காய்டர் :

காய்டர் :

தைராய்டு சுரப்பிக்குப் போதுமான அளவு அயோடின் கிடைக்காவிட்டால், தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. இதனால் கழுத்து வீக்கமடைந்து கழுத்தின் முன் பக்கத்தில் ஒரு கழலைப் போன்று தோன்றும். அதற்கு ‘முன்கழுத்துக் கழலை'என்று பெயர்.

என்ன செய்ய வேண்டும் :

என்ன செய்ய வேண்டும் :

நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். கடல் சார்ந்த உணவு வகைகளில் அயோடின் சத்து அதிகம் என்பதால் மீன், நண்டு போன்ற உணவு வகைகள் நல்லது. பால், முட்டை, இறைச்சி சாப்பிட வேண்டியது முக்கியம். பசலைக்கீரை, முள்ளங்கி, காலிஃபிளவர்,முட்டைக்கோஸ், டர்னிப் ஆகியவற்றைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.

கடற்பாசி

கடற்பாசி

அகார் அகார் எனப்படும் கடற்பாசியில் செய்யும் இனிப்பு, குழந்தைகளுக்கு நலம் தரும் உணவு. பால், வெல்லம், அகர் அகர், ஏலக்காய் தூள் சேர்த்து இந்த இனிப்பைச் செய்து சாப்பிடலாம்.

ஸ்பைருலினா :

ஸ்பைருலினா :

`ஸ்பைரூலினா' என்ற சுருள்பாசி மாத்திரைகள், ஊட்ட உணவு வகைகளில் மிகப் பிரபலம். மீன் சாப்பிடாதவர்கள் இதைச் சாப்பிடலாம்.

யோகா :

யோகா :

யோகாசனமும் மூச்சுப் பயிற்சியும் தைராய்டு கோளம் சரியாக இயங்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. `சூரிய வணக்கம், கபாலபாதி பிராணாயாம மூச்சுப் பயிற்சி, விபரீதகரணி யோகப் பயிற்சி ஆகியவை உடல் இயக்க ஆற்றலை வலுப்படுத்தும்' என்கின்றன ஆராய்ச்சிகள்.

ஆயோடின் உப்பு :

ஆயோடின் உப்பு :

சமையலுக்குச் சாதாரண உப்பைப் பயன்படுத்துவதைவிட அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனையோடு, கழுத்துக்கு உண்டான

உடற்பயிற்சி / யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டால், குறை தைராய்டு பிரச்சினைகளைத் தடுக்க முடியும்

தவிர்க்க வேண்டியவை :

தவிர்க்க வேண்டியவை :

தைராய்டு கோளத்தில் பாதிப்புகளை உண்டாக்கும் சில உணவுகள் உள்ளன. அவற்றில் நம் ஊர் கடுகும் முட்டைக்கோஸும் இடம்பிடித்திருக்கின்றன. லேசாக முன் கழுத்து வீக்கமோ, ஹைபோதைராய்டு நோயோ இருந்தால், கடுகு, முட்டைக்கோஸை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சோயா

சோயா

சந்தையில் விற்கப்படும் ஊட்டச்சத்து பானங்களில் அதிகமாகச் சேர்க்கப்படுவது சோயா புரதம். இந்தப் புரதம், சில நேரங்களில் தைராய்டு கோள வீக்கத்துக்குக்

காரணமாகிவிடும். இதைத் தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Symptoms of Hypothyroidism

Symptoms of Hypothyroidism
Subscribe Newsletter