Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
மனித இனத்தை உலுக்கும் கொடூரமான நோய்கள்
மருத்துவ உலகமே இதுவரை கேள்விப்பட்டிராத, கோடிகளில் ஒரு சிலருக்கு ஏற்படும் அரிதான சில நோய்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
லேசான காய்ச்சல் தலைவலிக்கே சுருண்டு விடும் மனிதர்களுக்கு மத்தியில் இன்னும் மருந்தே கண்டுபிடிக்காத அல்லது குணமாகாத நோய்களுடனும் மனிதர்கள் பலர் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவ உலகமே இதுவரை கேள்விப்பட்டிராத, கோடிகளில் ஒரு சிலருக்கு ஏற்படும் அரிதான சில நோய்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

கினியா வார்ம் சிண்ட்ரோம் (Guinea Worm Syndrome)
இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் தோலிலிருந்து புழு,திரவம் வெளிவந்து கொண்டேயிருக்கும். பாராசிடிக் என்ற ஒரு வகையான புழுக்களால் இந்த நோய் ஏற்படுகிறது. சுத்தமில்லாத தண்ணீரை பருகுவது தான் இந்நோய் வர முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. இன்னமும் இந்நோயை குணப்படுத்தும் மருந்தோ அல்லது இதனை வராமல் தடுக்கும் தடுப்பூசி என எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை 1986 ஆம் ஆண்டில் இருந்ததை விட இன்றைக்கு இந்நோயால் பாதிக்கப்படுகிறவர்களின் அளவு வெகுவாக குறைந்து விட்டது.
Image Courtesy

ஸ்டோன் மேன் :
இது பயங்கரமான நோய். நம் உடலில் உள்ள திசுக்கள், சதைப்பகுதி எல்லாம் எலும்பாய் மாறத்துவங்கும். கிட்டதட்ட உடம்பே விறைத்து போய்விடும். உள்ளுறுப்புகளும் விறைத்து விடுவதால் மூச்சுவிடுவதில் ஆரம்பித்து பல பிரச்சனைகள் ஏற்படும்.
Image Courtesy

ப்ரோசோபகநோசியா (prosopagnosia)
இவர்களுக்கு முகம் மட்டும் மறந்து போகும். நடந்த சம்பவங்கள் எல்லாம் நினைவில் இருக்கும். இது ஒரு வகையான மறதி நோய் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது முகமே மறந்து போகும் சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றன. மறதி அல்லது முகம் மட்டுமே இருப்பதால் வேண்டுமென்றே சொல்வதாய் நினைத்து இந்நோயை பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை.
Image Courtesy

நோமா :
நோமா எனப்படும் ஒரு வகை கிருமியினால் முகத்திசுக்கள் எல்லாம் சிதைந்து விடும். வாயைச் சுற்றியுள்ள திசுக்கள் எல்லாம் அழிந்து விடுவதால் சாப்பிட முடியாது, பேச முடியாது, முகமே சிதைந்து காணப்படும்.
Image Courtesy

ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் ( Alien Hand Syndrome)
மூளையில் இருக்கும் நியூரான்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாறுதல்களால் இது ஏற்படுகிறது. தன்னையறியாமலேயே தன் கைகளால் தன்னையே அடித்துக் கொள்வது. தன்னையறியாமல் செய்வதால் ரத்தம் வந்தாலும் அவர்களால் நிப்பாட்ட முடியாது.

கோட்டர்ட் டில்யூஷன் (Cotard Delusion)
இது ஒரு வகையான நரம்பியல் மாற்றத்தால் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் இறந்து விட்டதாகவே நினைப்பர்.

ஸ்லீப் பாரலிசிஸ் ( Sleep Paralysis)
தூங்குதல் என்பது மனமும் உடலும் ஒன்றாக அமைதியாக இருப்பது. இது தூக்கத்தில் மட்டுமே ஏற்படக்கூடியது இது. மனம் அமைதியாய் தூங்கியிருக்க உடல் முழித்துக் கொள்ளும். மூளையின் கட்டளைகள் இன்றி நமக்கு ஆபத்து நேரும் விஷயங்களைக் கூட செய்வர். தூக்கத்தில் நடப்பது என்பது இதில் ஒரு வகையே.
Image Courtesy



Click it and Unblock the Notifications
