விட்டமின் டி குறைவால் எந்த நோய் தாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

ஆரோக்கியமான உணவு முறை நமது உடல் நலத்திற்கு மிகவும் முக்கியம். போதுமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் பற்றாக்குறையால் நமது உடலில் எண்ணிலடங்காத பிரச்சினைகள் வருகின்றன.

விட்டமின் டி நமது உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இந்த விட்டமின் டி பற்றாக்குறையால் நமது உடலில் நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றனர். விட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தவும், இதய நோய்கள் வர விடாமல் தடுக்கவும், முடக்கு வாதம், ஸ்களீரோசிஸ் போன்ற நோய்களிலிருந்து நம்மை காக்க விட்டமின் டி மிகவும் அவசியம்.

Lack Of Vitamin D Increases Dementia Risk

தற்போது மேற்கொண்ட புதிய ஆராய்ச்சி தகவலானது விட்டமின் டி பற்றாக்குறையால் டிமென்ஷியா வருவதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. சூரிய ஒளியிடமிருந்து தான் நமது உடலுக்கு தேவையான விட்டமின் டி கிடைக்கிறது. எனவே சூரிய ஒளியில் நாம் இருப்பதன் மூலம் விட்டமின் டி பெற்று டிமென்ஷியா வருவதை தடுக்கலாம்.

2014 ஆம் ஆண்டை பொருத்த வரை டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து வருகிறது. இந்த நோயாளிகளை ஆராய்ச்சி செய்ததிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் இவர்கள் எல்லாரும் விட்டமின் டி பற்றாக்குறை உள்ளவர்கள் என்பது தான் அதிர்ச்சியான தகவல்.

இந்த ஆராய்ச்சி படி இளைஞர்களிடம் மேற்கொண்ட போது விட்டமின் டி பற்றாக்குறை உள்ள இளைஞர்களுக்கு 53 % டிமென்ஷியா வருவதற்கான வாய்ப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் கலந்து கொண்டவர்களில் 122% விட்டமின் டி பற்றாக்குறை உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த ஆராய்ச்சியை சுமார் 6 ஆண்டுகள் தொடர்ந்து 1600 பேர்களிடம் மேற்கொண்ட போது அவர்களுக்கு அல்சீமர் நோய் போன்ற டிமென்ஷியா பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

டாக்டர். டேவிட் லீவெல்ன் இந்த ஆராய்ச்சியை பற்றி கூறும் போது விட்டமின் டி பற்றாக்குறை, டிமென்ஷியா மற்றும் அல்சீமர் நோய் இவற்றிற்கு இடையை உள்ள தொடர்பை ஆராய்ந்து பார்க்கும் போது விட்டமின் டி அடங்கிய உணவுகள், விட்டமின் டி மாத்திரைகளை எடுக்கும் போது அவர்களுக்கு அல்சீமர், டிமென்ஷியா போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது என்பது திட்டவட்டமாக தெரிந்துள்ளது.

சரி வாங்க இப்பொழுது விட்டமின் டி அடங்கிய உணவுகள் எவை எனத் தெரிந்து கொள்ளலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 காளான்

காளான்

காளான் சூரிய ஒளியில் வளர்வதால் அதில் விட்டமின் டி சத்துக்கள் அடங்கியுள்ளன. எனவே காளானை உங்கள் உணவில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்கள் உடலுக்கு தேவையான விட்டமின் டி சத்துக்கள் கிடைக்கும்.

பால்

பால்

பாலில் விட்டமின் டி சத்துக்கள் அடங்கியுள்ளன. எனவே தினமும் ஒரு கிளாஸ் பால் குடிக்க வேண்டும். மேலும் தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் பால் குடித்தால் உடலுக்கு தேவையான விட்டமின் டி சத்துக்கள் கிடைக்கும். காபி, டீ மற்றும் மில்க் ஷேக் போன்றவற்றில் கலக்காமல் பால் மட்டும் தனியாக அருந்தினால் நல்லது.

முட்டை

முட்டை

முட்டையின் மஞ்சள் கருவை நிறைய பேர் விருப்பப்பட மாட்டார்கள். ஆனால் அதில் அதிக அளவில் விட்டமின் டி சத்துக்கள் உள்ளன. எனவே முட்டையின் எந்த பகுதியையும் ஒதுக்காமல் அப்படியே முழுவதுமாக எடுத்து கொள்ளும் போது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன.

 சோயா பொருட்கள்

சோயா பொருட்கள்

சோயா பொருட்களில் சோயா பாலில் நிறைய விட்டமின் டி சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் புரோட்டீன் சத்துக்களும் நிறைந்துள்ளன. எனவே ஒரு கிளாஸ் சோயா பால் தினமும் சேர்க்கும் போது உங்கள் உடலுக்கு தேவையான விட்டமின் டி சத்துக்கள் கிடைக்கின்றன

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சில் விட்டமின் டி சத்துக்கள் அடங்கியுள்ளன. தினமும் உங்கள் காலை உணவின் போது ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் பருகி வந்தால் விட்டமின் டி சத்துக்கள் உங்கள் உடலுக்கு கிடைக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lack Of Vitamin D Increases Dementia Risk

Lack Of Vitamin D Increases Dementia Risk
Story first published: Thursday, November 30, 2017, 20:00 [IST]
Subscribe Newsletter