For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கறிவேப்பிலை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் சரியாகும்னு தெரியுமா?

கருவேப்பிலை ஜூஸ் செய்து குடிப்பதால் ஏற்படும் பலவித நன்மைகளை இங்கே பட்டியிலடப்பட்டுள்ளது.

By Divyalakshmi Soundarrajan
|

நன்கு சூடேற்றிய எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு வெடித்தப் பின், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்குவர். இந்த தாளிப்பை சேர்க்காமல் எந்த ஒரு தென்னிந்திய உணவும் தயாரிக்கப்படுவதில்லை. கறிவேப்பிலை உணவுகளில் சேர்க்கப்படுவதற்கு அதன் தனித்துவம் வாய்ந்த சுவை மட்டும் காரணம் அல்ல, அதன் மருத்துவ குணங்களும் தான் காரணம். கறிவேப்பிலையின் அறிவியல் பெயர் முர்யா கோயினீகி. அதன் சொந்த ஊர் இந்தியா மற்றும் இலங்கை ஆகும்.

கறிவேப்பிலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றில் கார்போஹைட்ரேட்டுகள், ஃபைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகியவை உள்ளன. வைட்டமின் சி, ஏ, பி மற்றும் ஈ உள்ளிட்ட வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் ஆகியவை இந்த இலைகளில் உள்ளன. ஆல்கலாய்டுகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றன.

எல்லா உடல் பிரச்சனைகளையும் சரி செய்யக் கூடிய ஒரு வீட்டு மருத்துவ பொருள் என்றால் அது கறிவேப்பிலை. குறிப்பிட்ட பிரச்சனைகள் என்றால் இளநரை, முடிஉதிர்வு மற்றும் கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஆகியவற்றை சரிசெய்யக்கூடியது.

How To Use Curry Leaf (kadi patta) Juice For Gastric Problem & Diarrhoea

மற்ற பிரச்சனைகள் என்றால், வாயுத் தொல்லை மற்றும் வயிற்றுப் போக்கு அவற்றையும் சரிசெய்துவிடும். கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிபாக்டீரியல் குணம் வயிற்றில் எந்த ஒரு நோய் தொற்றுக்களையும் வைத்துக் கொள்ளாது. இது வயிற்றில் உள்ள பித்தத்தைக் குறைத்து வயிற்றை சுத்தம் செய்து வயிற்று கோளாறுகள் அனைத்தையும் சரிசெய்துவிடும்.

இப்போது கறிவேப்பிலையைக் கொண்டு எப்படியெல்லாம் ஜூஸ் செய்து குடிக்கலாம் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Curry Leaf (kadi patta) Juice For Gastric Problem & Diarrhoea

How To Use Curry Leaf (kadi patta) Juice For Gastric Problem & Diarrhoea
Story first published: Wednesday, June 14, 2017, 12:10 [IST]
Desktop Bottom Promotion