For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் கட்டி மற்றும் வீக்கம் போக்க அருமையான நாட்டு வைத்தியங்கள்!!

உடல் கட்டிகளை போக்க வீட்டிலேயே இருக்கும் குறிப்புகள் கொண்டு நாட்டு வைத்தியம் எப்படி செய்யலாம் என்று இங்கே சொல்லப்பட்டுள்ளது.

By Gnaana
|

நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் அதிக காரம் மற்றும் சுகாதாரமற்ற உணவு வகைகளால் உடலில் நச்சுத்தன்மை சேர்ந்து அவை செரிக்கப்பட இயலாத காரணத்தால், உடலில் நச்சு நீராக மாறுகிறது. இவையே, இரத்த ஓட்டத்தைத் தடை செய்து உடலில் ஆங்காங்கே கட்டிகள் மற்றும் வீக்கத்தை உண்டு செய்கின்றன.

Home remedies to get rid of swelling

இப்படி காணப்படும் கட்டிகள் மற்றும் வீக்கங்களில் பொதுவாக வலி இருக்காது, ஆனால் சிலருக்கு அந்தக் கட்டிகளின் தன்மைகளால் சற்று மன வேதனை ஏற்படும்.
சாதாரண வகைக் கட்டிகளில் கொழுப்புக் கட்டி,நார்க் கட்டி மற்றும் நீர்க் கட்டி எனப் பல வகைகள் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டிகள் மற்றும் வீக்கம் தோன்றக் காரணங்கள்:

கட்டிகள் மற்றும் வீக்கம் தோன்றக் காரணங்கள்:

சுகாதாரமற்ற செயற்கை வாசனை அதிக அளவில் சேர்க்கப் பட்ட அதிக காரத் தன்மை கொண்ட கொழுப்பு வகை உணவுகள் அதிகம் சாப்பிடுவதன் மூலம் சிலருக்கு கட்டிகள் ஏற்படலாம். அதிக எண்ணெய்ப் பிசுக்குகள் காரணமாக அழுக்குகள் சேர்ந்தாலும், சிலருக்கு கட்டிகள் வரலாம்.

சிலருக்கு அதிக உடல் சூட்டினாலும், சூட்டுக் கட்டிகள் வரலாம். சிலருக்கு நீரிழிவு பாதிப்பின் காரணமாக, ஏற்படலாம். மேலும் சிலருக்கு, அதிக அளவிலான மதுப் பழக்கத்தின் மூலம் உடலில் ஏற்பட்ட நச்சுத் தன்மை அதிகரிப்பின் காரணமாக ஏற்படலாம். அதிக உடல் எடையின் காரணமாகவும் சிலருக்கு கட்டிகள் ஏற்படலாம்,

மேலும், பல்வேறு வகை கட்டிகள் மற்றும் வீக்கங்கள் நடுத்தர வயது ஆண்களையே, அதிகம் பாதிக்கின்றன.

எப்படி அறிவது?

எப்படி அறிவது?

சாதாரணக் கட்டிகள் வலிக்காது, சமயத்தில் அவற்றின் அளவுகள் மாறு பட்டாலும், அவை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த வகைக் கட்டிகளே, கொழுப்புக் கட்டிகள் எனக் கூறப்படுகின்றன. இவை உடலின் அதிகப்படியாக சேர்ந்த கொழுப்புகளின் காரணமாக உருவாகி, இந்தக் கட்டிகள், உடல் கை கால் மற்றும் இணைப்புப் பகுதிகளில் அதிகம் காணப்படும். கொழுப்புக் கட்டிகள் பொதுவாக, மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பையும் தருவதில்லை,

எருக்கன் இலை :

எருக்கன் இலை :

கட்டிகள் உடலிலோ அல்லது முகத்திலோ காணப் பட்டால், எருக்கன் இலைகளை எடுத்து விளக்கெண்ணை இட்டு சூட்டில் வதக்கி, அந்த இலையை, கட்டி அல்லது வீக்கத்தில் வைத்து இரவில் கட்டிவர, அவை சரியாகும்.

அத்திமர இலைப் பால் :

அத்திமர இலைப் பால் :

மேலும், அத்திமரக் கிளையை ஒடித்தால், அதிலிருந்து பால் வெளி வரும். அந்தப் பாலைக் கொண்டு தடவி வர, கட்டிகளை சரி செய்யலாம்.

மேலும், ஒரு மருந்து. மஞ்சள் மற்றும் சவக்காரம் என்று சொல்லப்படும் சலவை சோப், தற்காலத்தில் சவக்காரம் எனும் சலவை சோப்பை யாரும் பார்த்திருக்க வாய்ப்புகள் இல்லை, கிடைத்தால் உபயோகிக்கலாம், இல்லை என்றால், தற்கால டிடர்ஜென்ட் சலவை சோப்பை உபயோகிக்கலாம்.

மஞ்சள் மற்றும் சோப் :

மஞ்சள் மற்றும் சோப் :

மஞ்சளை இழைத்து அந்த மஞ்சளுடன் சலவை சோப்பை சேர்த்து கலக்க, கருஞ்சிவப்பு நிறத்தில் அந்தக் கலவை மாறும். அதனை எடுத்து கட்டி உள்ள இடத்தில் தடவி வரலாம்.

தேன் மற்றும் சுண்ணாம்பு :

தேன் மற்றும் சுண்ணாம்பு :

மேலும், சிறிதளவு தேன் மற்றும் சிறிது சுண்ணாம்பு எடுத்து நன்கு கலக்கி, அந்தக் கலவையை கட்டிகளின் மேல் பூசலாம். மேற்சொன்னவை கூட, இதையும் செய்யலாம்.

சோற்றுக் கற்றாழை, உடலில் சேர்ந்த நச்சுக்களை நீக்கி, உடல் உறுப்புகளை சரி செய்து, உடலை வலுவாக்கும்.

கற்றாழை மற்றும் பனை வெல்லம் :

கற்றாழை மற்றும் பனை வெல்லம் :

அத்தகைய சோற்றுக் கற்றாளை மடல்களை எடுத்து, அதன் சதைப் பகுதியை நன்கு அலசி அத்துடன் சிறிது பனை வெல்லம் சேர்த்து தினமும் காலை வேளைகளில் சாப்பிட்டு வர, உடல் நச்சு காரணமாக உடலில் உண்டான கட்டிகள் நீங்கிவிடும்.

உணவுகள் :

உணவுகள் :

மேலும், சத்தான உணவையே உண்ணவேண்டும். துரித வகை உணவுகள், செயற்கை இரசாயன சுவை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கொழுப்புத் தன்மை கொண்ட பால் பொருட்கள் பயன்பாடுகளை நீக்க வேண்டும்.

குளிர் பானங்கள், ஐஸ்க்ரீம் தவிர்ப்பது, உடலுக்கு நன்மை செய்யும். கீரை வகைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கேரட், அவரை, வெண்டைக்காய் மற்றும் பீன்ஸ் உணவில் அதிக அளவில் சேர்ப்பது நல்லது. சிறிய வெங்காயம் உணவில் அல்லது தனியாகவோ சாப்பிட, நலம் பயக்கும்.

குப்பைமேனி இலைகளை அரைத்து அத்துடன் மிளகு சேர்த்து காலை வேளைகளில் சாப்பிட்டு வர, உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரித்து, உடலுக்கு நலம் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home remedies to get rid of swelling

Home remedies to get rid of swelling
Desktop Bottom Promotion