பப்பாளி விதையுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அற்புதங்கள்!!

By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

நவீன மருத்துகள் அதிகரித்து வரும் இந்த காலத்தில் வியாதிகளும் அதிகரித்து விட்டன. பண்டைய காலக்கட்டத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் பலர் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்ந்தனர். இதற்கு காரணம் அப்போது அவர்கள் உபயோகித்து வந்த இயற்கை மருத்துவ முறைகள். அந்த மருந்துக்கள் நோய்களில் இருந்த குணப்படுத்துவ மட்டுமல்லாது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்தது.

health benefits of papaya seed and honey

புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்கள் இப்போது தான் அதிகமாக உள்ளன. அந்த காலத்தில் இவையெல்லாம் மிகவும் அரிதான நோய்கள். அதற்குக் காரணம் பண்டைய கால மக்கள் எடுத்துக் கொண்ட இயற்கை மருந்துகள் தான்.

மக்கள் பலர் இப்போது இயற்கை மருத்துவத்தின் அபூர்வ குணங்களை அறிந்து அவற்றை உபயோகிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கே பப்பாளி விதையுடன் தேன் கலந்து சாப்பிடுவதினால் நமது உடலினுள் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அதிகம். அவற்றில் முக்கியமான 7 பலன்களைப் பற்றி இங்கு நாம் பார்க்கப் போகிறோம்.

2 டீஸ்பூன் பப்பாளி விதையுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனை குறைந்தது ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். அப்போது தான் சூப்பரான பலன்கள் விரைவில் கிடைக்கும்.

வாருங்கள் இப்போது பப்பாளி விதையுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் 7 பலன்களைப் பற்றி பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 உடலை சுத்தம் செய்கிறது

உடலை சுத்தம் செய்கிறது

பப்பாளி விதை மற்றும் தேனில் உள்ள சக்தி வாய்ந்த அமிலங்கள் மற்றும் ஆன்டிஆன்ஸிடன்ட்கள் வயிற்றில் உள்ள நச்சுக்களை வெயியேற்றி உடலை முழுமையாக சுத்தம் செய்கிறது.

வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கிறது

வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கிறது

வயிற்றில் உள்ள புழுக்களை அழிப்பதற்கு இது ஒரு சிறந்த இயற்கை முறையாகும். வயிற்றில் உள்ள புழுக்கள் நமது செரிமான செயலை பாதிக்கிறது. பப்பாளி மற்றும் தேனில் உள்ள அமிலங்கள் புழுக்களை கொன்று செரிமானத்தை சீர் செய்கிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது

உடல் எடை குறைக்க உதவுகிறது

பப்பாளி விதை, தேன் கலந்த கலவையில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது.

கட்டுக்கோப்பான உடலைத் தருகிறது

கட்டுக்கோப்பான உடலைத் தருகிறது

இந்தக் கலவையில் அதிகப்படியான புரதச்சத்து உள்ளது. எனவே, அதனை தொடர்ந்த சாப்பிட்டு வந்தால் நமது உடலின் சதைகளை ஒழுங்கு செய்து அழகான கட்டுக்கோப்பான உடலை பெற உதவுகிறது.

உடற்சோர்வை குறைக்கிறது

உடற்சோர்வை குறைக்கிறது

தேன் மற்றும் பப்பாளி விதை கலந்த கலவையில் குளுக்கோஸ் அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள சோர்வுடன் போராடி உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருகின்றது.

தொற்று நோய்களுடன் போராடுகிறது

தொற்று நோய்களுடன் போராடுகிறது

இந்த இயற்கை மருத்துவக் கலவையில் சக்தி வாய்ந்த ஆன்டிஆன்ஸிடன்ட்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் காய்ச்சல் மற்றும் நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுத்து உடலுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.

ஆண்மை அதிகரிக்க உதவுகிறது

ஆண்மை அதிகரிக்க உதவுகிறது

பப்பாளி விதை மற்றும் தேன் கலந்த கலவையில் சில வகை எம்சைம்கள் உள்ளன. அவை ஆண்களின் விந்து எணணிக்கையை அதிகரித்து ஆண்மைக் குறைவு பிரச்சனை ஏற்டாமல் தடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

health benefits of papaya seed and honey

Health benefits of eating papaya seed with honey,
Story first published: Saturday, April 1, 2017, 10:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter