நீங்க ஒரு நிமிஷத்துல எத்தனை முறை சுவாசிக்கிறீங்க? மூச்சிலே இருக்கு உங்கள் ஆயுள் ரகசியம்!!

By: Gnaana
Subscribe to Boldsky

எண்ணும் எண்ணங்களும், செய்யும் செயல்களும், நாம் சுவாசிக்கும் காற்றோடு தொடர்புடையது என்று யாரேனும் சொன்னால், நாம் என்ன சொல்வோம்?

மனதின் நினைவுகளும், நிகழ்கால மனநிலையும், நாம் சுவாசிக்கும் காற்றாலே உண்டாகிறது என்றால், என்ன செய்வோம்?

Facts of Breathing and ways to control your breath for a long healthy life!

"காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா!" என்று மனித உடலைப்பற்றி பாடினார், பட்டினத்தார். அது தத்துவம்! ஆயினும், உண்மையும் அதுதானே! "உடலை வளர்த்தேன்! உயிர் வளர்த்தேனே!" என்றார், திருமூலர்.

உள்ளத்தில் உள்ள உற்சாகம், முகத்தில் உள்ள பொலிவு, உடலில் உள்ள வலிமை, இவை அனைத்துக்கும் காரணம், நாம் சுவாசிக்கும் காற்றே என்றால், என்ன நினைப்போம்? அதைப் பற்றி சற்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயிர் காற்று!

உயிர் காற்று!

இந்த உலகில் உள்ள ஒரு செல் உயிரினம் முதல், ஆறறிவு படைத்த மனித இனம் வரை, அனைவரின் வாழ்க்கைக்கும், தேவையானது காற்று! பேரண்டப் பரவெளியில், மனிதர் உயிர் வாழத்தேவையான பிராண வாயு காற்று நிரம்பிய ஒரே கோளாக இன்றுவரை, நாம் வாழும் பூமியே, அறியப்பட்டு வருகிறது.

நமக்கு அத்தியாவசியமான ஒன்று, எங்கும் நிறைந்து நம்மைக்காத்து வருகையில், அதை நாம், அவற்றின் கடமை என்று கருதி, அதன் மகத்துவம் உணராமல், உதாசீனம் செய்வோம் அல்லவா?

இப்படித்தான், நாம் இயற்கையின் மூலம் அனிச்சையாக பெறும் அரிய பலன்களை மறந்து, அதெல்லாம் அவற்றின் கடமை என எண்ணி, நாம் ஏதேதோ செயல்களில் நாட்டம் செலுத்துகிறோம்! இயற்கை நமக்கு அளிக்கும் நல்லவையையே உணர முடியாத நமக்கு, எப்படி மூச்சு விடுதலின் தன்மை குறித்த அக்கறை இருக்கும்?

என்றேனும் ஒரு நாள், நம் மூச்சை ஆராய்ந்திருக்கிறோமா?

 மூச்சிலே இருக்குது நம் ஆயுள்!

மூச்சிலே இருக்குது நம் ஆயுள்!

மனிதன் தினமும் அனிச்சையாக செய்யும் செயல்களில் ஒன்று, மூச்சு விடுதல், சுவாசித்தல்! இவை இரண்டும் தானாகவே, தடைகளின்றி நடந்து வரும்.

மேலும், ஜலதோச நேரத்தில் மூக்கடைப்பு காரணமாக, வாய் வழியே மூச்சு விடுவோம். எதற்கு இத்தனை சிரமப்பட்டு, வாயின் வழியே மூச்சு விட வேண்டும்? சற்றுநேரம் நிறுத்திவிடலாமே!, மூக்கு சரியானதும், மூக்கின்வழியே மீண்டும் சுவாசித்துக்கொள்ளலாமே!, என்ன சரிதானே!

இப்படி எழுதி இருப்பதைப் படித்ததும், எத்தனை பேர் பதறி இருப்போம், எத்தனை பேர், திட்டி இருப்போம், மூளை இல்லாமல், மூச்சை நிறுத்தி வைக்க சொல்கிறார்களே, என்று! நினைக்கவே, நடுங்குகிறது அல்லவா!

உயிர் மேல் உள்ள பற்றோ அல்லது வேறு ஏதோ, எழுதியதைப் படித்தவுடன், ஒரு வினாடி, நமது சிந்தனை, உயிரைப் பற்றி எண்ணுகிறதா? நல்லது, இருக்கட்டும், ஆயினும், மூச்சை நிறுத்தச் சொன்னதால் தானே, இந்த சிந்தனை!

தினமும் நாம் சாப்பிட்டாலும், இல்லையென்றாலும், தண்ணீர்தாகம் எடுத்து நீர் பருக முடியாமல் இருந்தாலும், நாம் மூச்சுவிடுவதையும், சுவாசிப்பதையும், செய்துகொண்டுதான் இருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்ப்பதில்லை, சொல்லப்போனால், அது ஒரு பெரியகாரியமாக, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்பதே, உண்மை

மூச்சுக் காற்று, என்ன செய்கிறது உடலில்?

மூச்சுக் காற்று, என்ன செய்கிறது உடலில்?

உடலில் சுவாசமே, பிரதானம், அதைச்சார்ந்தே, உடல் உறுப்புகள் இயங்கும். சுவாசத்திற்கு அடிப்படையான காற்று, மூக்கின்வழியே உள்ளே இழுக்கப்பட்டு, தொண்டைவழியே, நுரையீரலை சென்றடைகிறது. நுரையீரலே, உள்ளேவரும் காற்றை, அதன் நுண்ணிய காற்றுப்பைகளுக்கு அனுப்பி, ஏற்கெனவே உள்ள சுத்திகரித்தபின் எஞ்சிய காற்றை, திருப்பி மூச்சின் வழியே, வெளியேற்றும்!.

நுரையீரலின் பைகளில் உள்ள காற்று, இரத்தக்குழாய்களின் வழியே, உடலில் பரவும், இதன்மூலம் காற்றிலுள்ள பிராணவாயு எனும் ஆக்சிஜன், செல்களில் சேமிக்கப்பட்டு, உடலின் இயக்கத்தில் வெளியாகும் கார்பன், மூச்சுக்காற்றின் வழியே, வெளியேற்றப்படுகிறது. இதுவே, உடலில் சுவாசிக்கப்படும் காற்றின் செயல்களாக, நாம் அறிந்துகொள்ள வேண்டியவை!.

இந்த செயல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, நாம் இந்த காற்றை சுவாசிக்க எவ்வளவுநேரம் எடுத்துக்கொள்கிறோம் என்று தெரியுமா? அதை அறிவதன் மூலம், நமது ஆயுளை அறியலாம், என்பதையும் நாம் அறிவோமா?

ஒரு நிமிடத்தில் எத்தனை முறை சுவாசிக்க வேண்டும்?

ஒரு நிமிடத்தில் எத்தனை முறை சுவாசிக்க வேண்டும்?

மனிதன் சுவாசிக்கும் மூச்சுக்காற்றின் எண்ணிக்கை, ஒரு நிமிடத்துக்கு சராசரியாக பதினைந்து என்ற அளவில் இருந்தால், நூறு ஆண்டுகள் வரை வாழலாம், என்று சித்தர்கள் உரைத்துள்ளனர். நிமிடத்திற்கு பதினெட்டு முதல் இருபது என்ற அளவில் சுவாசித்தால், எழுபது ஆண்டுகள் முதல் எண்பது ஆண்டுகள்வரை உயிர்வாழலாம்.

இதுவே இன்றைய மனிதர்களின் சராசரி மூச்சின் அளவாகும். மூச்சு எண்ணிக்கை குறையக்குறைய, ஆரோக்கியம் கூடும், ஆயுளும் அதிகரிக்கும் என்பதே, நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.

உணர்ச்சி வசப்படும்போது :

உணர்ச்சி வசப்படும்போது :

நாம் அமர்ந்திருக்கும்போது பனிரெண்டும், நடக்கும்போது பதினெட்டு மூச்சும், கோபத்தில் கத்துதல் போன்ற உணர்ச்சிகளில் சிக்கும்போது, நிமிடத்திற்கு அறுபத்திநான்கு மூச்சுகளும் ஏற்படுகின்றன.

இதன் மூலம், நாம் கோபம் உள்ளிட்ட உணர்ச்சிகளை கட்டுப்படுத்த, மூச்சையும் கட்டுப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறோம் என்றுதானே, பொருள்.

அப்படி என்றால் காற்றையே சுவாசிக்காமல் இருக்க முடிந்தால், நிறைய ஆண்டுகள் வாழலாமா? நிச்சயமாக! ஆனால், அது நம்மால் ஆகாத ஒரு செயல், மூச்சை அடக்கும் கலையின் ஞானிகளான சித்தர்களுக்கு மட்டுமே, சாத்தியமான ஒன்று அது!

சுவாசத்தை வசப்படுத்துவது எப்படி?

சுவாசத்தை வசப்படுத்துவது எப்படி?

நம்முடைய இயக்கத்துக்கும், செயல்களுக்கும் அடிப்படை, நாம் சுவாசிக்கும் காற்றே, என்றபோது அதிர்ச்சியாக இருந்திருக்கும், அது எப்படி என்று பார்ப்போம்!

தோராயமாக ஒருநாளைக்கு இருபத்தியோராயிரம் முறை சுவாசிக்கிறோம், ஆயினும் அதில் கிட்டத்தட்ட பனிரெண்டாயிரம் சுவாசங்கள் மட்டுமே, உடலில் பரவி, வெளியேறும், மீதம் உள்ள சுவாசங்களால் பலன்கள் ஏதுமில்லை! அப்படி என்றால்? அந்த சுவாசங்கள், உடலுக்கு நன்மைகள் செய்யவில்லை, ஏன்? அறிய முயல்வோம்!

நாம் உள் இழுக்கும் மூச்சு, வெளி விடும் மூச்சு இரண்டுக்கும் கால அளவுகள் உண்டு, நாம் ஒன்பது மணி எலக்ட்ரிக் டிரெயினைப் பிடிக்க, வீட்டில் இருந்து எட்டு மணிக்கு கிளம்பி, எட்டு இருபதுக்கு பஸ் ஸ்டாப் வந்து, எட்டு முப்பதுக்கு பஸ் ஏறி, எட்டு ஐம்பதுக்கு இறங்கி ஓடி, வந்து கொண்டிருக்கும் டிரெயினில் மூச்சிறைக்க ஏறி, மூச்சுகூட விடமுடியாத, முண்டியடிக்கும் கூட்டத்தில் கலந்து, தினமும் பணிக்கு சென்று திரும்புவதற்கு, காலக் கணக்குகள் வைத்து செயல்படுகிறோம், அல்லவா?

இந்த கணக்கையே, நாம் விடும் மூச்சுக்கும் பயன்படுத்தினால், காலை கூட்ட நேரத்தில்கூட, உட்கார்ந்து பயணிக்க கிடைக்கும் ட்ரெயின் இருக்கைபோல, நம் வாழ்க்கை அமையும்!

சுவாசத்தை எப்படி வெளிவிட வேண்டும்?

சுவாசத்தை எப்படி வெளிவிட வேண்டும்?

மூச்சை உள்ளிழுத்து, அதில் மூன்று மடங்கு நேரம் உள்ளே அடக்கி, பின்னர், ஒரு மடங்கு நேரத்தில் மூச்சை மெதுவாக வெளியேவிட வேண்டும்!, இதுதான் மூச்சுக்கணக்கு!

மூச்சை, கணக்குபோட்டு சுவாசிக்கும் முறையே, பிரணாயாமம் என்று பண்டை மருத்துவம் அழைக்கிறது. பிரணாயாமம் என பண்டைச்சித்தர் உரைத்த, இந்த அரியகலையை, முறையாகச்செய்து, மூச்சையடக்கி வாழப்பழகுவது, இன்று அனைவருக்கும் அத்தியாவசியமானது. நாம் எந்த வயதிலும், இந்த மூச்சுப்பயிற்சியை செய்யலாம். மனதில் ஆர்வமும், சிந்தனையும் இருந்தால் போதும்!

எப்படி செய்வது ?

எப்படி செய்வது ?

மூச்சை உள்ளே இழுக்கும் நேர அளவு, இரண்டு முதல் மூன்று வினாடிகள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த நிலையை சரியாக பழகிவாருங்கள்,

பின்னர், உள்ளே இழுத்த மூச்சுக்காற்று நுரையீரல் வழியே, உடலின் இரத்த குழாய்களில் கலந்து அதில் உள்ள கார்பனை எடுத்துக்கொண்டு வெளியேறுவதற்கு கால அளவாக, காற்றை உள்ளே இழுத்த நேரத்திற்கு இரண்டு அல்லது மூன்று மடங்கு நேரம், அதாவது ஆறு முதல் ஒன்பது வினாடிகள் வரை,

அதன் பின் மூச்சை நான்கு முதல் ஆறு வினாடிகள் நேரத்தில் சீராக எந்த நெருக்கடியும் இன்றி, வெளியிடவேண்டும். இதுபோல, தினமும் பத்து முதல் பதினைந்து முறை செய்துவர, பின்னர், தினமும் மூச்சு விடுவதுபோல, இந்த மூச்சுக் கலையும் பழகிவிடும். இதில் இடகலை பிங்கலை, சுழுமுனை என்று பிரிவுகள் உண்டு, அதை நாம், பின்னர் அறியலாம்.

என்ன நன்மை இந்த மூச்சு பயிற்சியினால்?

என்ன நன்மை இந்த மூச்சு பயிற்சியினால்?

நாம் இதுவரை, சுவாசத்தை சற்றும் மதிக்காமல், அதன் முக்கியத்துவம் உணராத வீணர்களாக இருந்தோம், இப்போது சுவாசத்தின் தன்மைகளை உணர்ந்து அதைக்கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறோம். முறையான சுவாசத்தினால், மூச்சு உள்ளே நிற்கும் அளவுக்கு, உடலின் நன்மைகளை அதிகரிக்கும்.

மூச்சை உடனே வெளியிடாமல், சற்றுநேரம் அடக்கி வைக்கும்போது, காற்றில் உள்ள சக்தி அதிக அளவில் உடலில் சேகரிக்கப்படுகிறது, உடலில் தேங்கும் பிராண சக்தியே, மனதின் ஆற்றலை அதிகரிக்கிறது, இதன்மூலம், இலட்சியங்கள், குறிக்கோள்கள், சிந்தனைகள் போன்ற எதிர்கால திட்டங்களை அடையும் வல்லமையை விரைவில் பெறமுடியும்,.

பிராண சக்தி :

பிராண சக்தி :

உடலில் உள்ள பிராண சக்தி, மனித உடலில் ஆற்றலை மேம்படுத்தி, உடலில் வியாதி எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை வலுவாக்கும், கவனிக்கவும், இங்கே பிராண சக்தி என்பது, காற்றில் இருந்து நாம் பெற்ற ஆக்சிஜன் வாயுவில் இருந்து சேமித்த ஆற்றல், இந்த ஆற்றலே, வியாதி எதிர்ப்பு, உடல் வலுவை அதிகரித்து, மன தைரியம், எண்ணங்களில் தெளிவு போன்ற நேர் சிந்தனைகளை மனதில் வலுப்பெறச் செய்யும், இதன் மூலம், நமது அகமும், புறமும் பொலிவாகும்!

இதன் மூலம், நம்மைச்சுற்றியுள்ளோர் நிலையறிந்து, அவர்களை அறிவுறுத்த முடியும் என்பதுடன், அவர்களுக்கும் சுவாசித்தலின் விழிப்புணர்வைத் தூண்ட முடியும். தன்னலமில்லா இத்தகைய செயல்கள் மூலம், நாம் வாழும் சமூகமும், நம்முடன் பயனுற வேண்டும், என்ற நல்ல நோக்கமும் நிறைவேறும்!

மூச்சுப்பயிற்சியை யார் வேண்டுமானாலும் செய்யலாம், உலகின் இயற்கை வளத்தை அறிந்து, அதை நாமும் பயன்படுத்தி, மற்றவர்களும் பயன்படுத்த ஊக்கம் அளித்தால், நம் பிறப்பின் காரணம், முழுமை பெறும் அல்லவா!.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts of Breathing and ways to control your breath for a long healthy life!

Facts of Breathing and ways to control your breath for a long healthy life!
Story first published: Friday, October 20, 2017, 14:24 [IST]
Subscribe Newsletter