For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தசை வலிமையை அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம்?

தசை வலிமையை அதிகரிக்கச் செய்யும் முக்கிய உணவுகளை இந்த கட்டுரையில் காணலாம்.

By Ambika Saravanan
|

ஒரு பக்கம் உடல் பருமனை குறைக்க பலரும் பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கம் உடல் எடையை அதிகரிக்க சிலர் முயற்சி செய்து கொண்டிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை. ஆகவே நாம் இப்போது உடல் எடையை அதிகரிக்க செய்து, தசை வலிமை பெற்று, உடலின் வளைவு நெளிவுகளை சீராக்குவதற்கான உணவு பற்றிய குறிப்புகளை பார்க்கப்போகிறோம்.

எடை அதிகரிப்பு என்பது தரமான கலோரிகளை கொண்டு கொழுப்பை அதிகரிக்காமல் தசைகளை அதிகமாக்குவது தான். ஜங்க் உணவுகளை தவிர்த்து மற்ற எல்லா உணவுகளையும் எடுத்துக் கொள்வது தான் இதற்கு தீர்வாகும்.எல்லாம் என்பது, ஊட்டச்சத்து , பழங்கள், காய்கறிகள், கார்போஹைடிரேட், முழு தானியங்கள், புரதம், பால் பொருட்கள் போன்றவையாகும். இவை கலோரிகளை தரமான முறையில் அதிகரிக்கும்.

Best foods for healthy weight gain

தசைகளை அதிகரிக்கும் உணவு:

முழு கோதுமை டோஸ்ட் , இதனுடன் பீனட் பட்டர், ஒரு வாழைப்பழம், ஒரு க்ளாஸ் பால் - இவை காலை உணவாக இருக்க வேண்டும்.

சால்மன் மீன், அவகடோ, ஆலிவ் எண்ணெய், நட்ஸ் ஆகியவற்றை கொறிப்பதற்கு பயன்படுத்தலாம்.

பழங்கள் அல்லது சாண்ட்விச்சுடன் யோகர்ட் கலந்து உண்ணலாம். ஊட்டச்சத்து சாக்லேட் பார்களை உணவுக்கு இடையில் எடுத்துக் கொள்ளலாம்.

சீமை தினை உடல் எடை அதிகரிப்பிற்கு உதவுகிறது. இதனை சான்டவிச்சுடன் சேர்த்து உண்ணலாம். மாலை நேரத்தில் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

ஸ்டார்ச் அதிகம் உள்ள காய்கறிகளான, உருளை கிழங்கு, பட்டாணி, காலிப்ளவர் , பூசணிக்காய், சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

பீன்ஸ் மற்றும் பயறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை விரைவில் அதிகரிக்கும். இதில் கார்போஹைடிரேட் அதிகம் உள்ளது.

தானிய வகைகளுடன் சீஸ் சேர்ப்பதால் அந்த உணவு முழுமை அடைகிறது. பாஸ்தாவுடன் சீஸ் சேர்ப்பது ஒரு முழுமையான காலை உணவு. பால் பொருட்களான தயிர், சீஸ் போன்றவற்றை எப்போதும் தானியங்களில் சேர்த்து உண்ணுவதால் சுவையும் அதிகரிக்கும்.

ஓட்ஸுடன் யோகர்ட் சேர்த்து உண்பது உணவை முழுமையாக்கும்.

உணவு பொதுவாக அதன் அளவை கொண்டு அளக்கப்படக்கூடாது அதன் தரத்தை பொறுத்து அளவிடவேண்டும். கலோரிகளை அதிகமாக்குவதுதான் நம் குறிக்கோள், ஆனால் தரமான முறையில் இதனை செய்ய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் .

பளு தூக்கும் பயிற்சி:

சிறந்த தசை வலிமைக்கு உணவுடன் சேர்த்து பளு தூங்குவதும் முக்கியம். இதனால் தசைகள் வலிமையாகும். கலோரிகள் அதிகமாக எடுக்கும் போது உடல் பளு தூக்கும் தன்மைக்கு ஈடு கொடுக்கும். பளு தூக்கும் பயிற்சியுடன் கூடிய மேலே கூறப்பட்ட உணவு அட்டவணை, உங்கள் தசைகளை வலிமையாக்கி, உடல் எடையை அதிகரிக்கும்.

English summary

Best foods for healthy weight gain

Best foods for healthy weight gain
Story first published: Tuesday, September 26, 2017, 17:16 [IST]
Desktop Bottom Promotion