தூக்கம் வரலியா? தூக்கம் வர ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படும் பூ எது தெரியுமா?

By: Gnaana
Subscribe to Boldsky

உணவு எப்படி நம் இயக்கத்துக்கு அவசியமோ, அதுபோல உறக்கம் நம் உடல் ஓய்வுக்கு அவசியம். ஆழ்ந்த உறக்கமே, நம்மை அதிகாலை விழிப்பிற்குப் பின், அன்றைய நாளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.

நல்ல தூக்கம் என்பது நல்ல வாழ்க்கைக்கு அவசியம் தேவையானது, தூக்கமில்லா மனிதர்களின் தினசரி வாழ்வு அவர்களின் குடும்பத்தாரையும் மற்றும் அலுவலகத்தினர் யாவரையும் அச்சுறுத்தும் வண்ணம் இருக்கும், எரிச்சல், கோபம், ஏமாற்றம், செயல்களில் முனைப்பில்லாமல் இருப்பது, இவை போன்ற சரியான தூக்கம் இல்லாதவர்களின் எதிர்வினைச் செயல்களால், அவர்கள் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரிடம் இருந்து விலகிவிடுவர்.

An ayurvedic remedy to get deep sleep

இந்த எதிர்வினைத் தன்மைகளால், தனிமைப் பட்டு துன்பப் படுவர்கள் சிலர் இதன் காரணமாகவே, தூக்கம் வருவதற்காக, குடியை நாடுவோர் ஏராளம் பேர் உண்டு நம் நாட்டிலே. எப்படி ஒரு சாதாரணமான விஷயம், அவர்களிடம் அதற்கு சரியான தீர்வு இல்லாமையால், வேறு ஒரு தீயப் பழக்கத்திற்கு அவர்களை அடிமையாக்குகிறது? விலகிடலாம், இனி அவற்றை விட்டு விலகி, நல்ல தூக்கத்தை இயற்கையாகவே அடையலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்கம் வராததற்கு என்ன காரணங்கள்?

தூக்கம் வராததற்கு என்ன காரணங்கள்?

இரவு உறங்கும் வேளையிலும், நாளைய பொழுதையும், இனி வரும் நாட்களையுமே நினைத்து, நம்முடைய நிகழ்காலத்தை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கழிக்க முடியாமல், ஏதேதோ கற்பனைகள் கொண்ட எதிர்காலத்திலேயே மனத்தை செலுத்தி, இழப்பது நிகழ்காலத்தை மட்டுமல்ல, நம்முடைய நாளைய பொழுதுக்குத் தேவையான உந்து சக்தியை நலமுடன் தரும் நல்ல தூக்கத்தையும் சேர்த்துதான்!

சில உடல் நலக் கோளாறுகள் காரணமாக, நீண்ட நாட்கள் தொடர் மருந்துகள் எடுத்துக்கொள்வதாலும், சிலர் தூக்கத்தை தூக்கத்தை இழக்க நேரிடலாம்.

சிலருக்கு வயது முதிர்வின் காரணமாகவும் தூக்கமின்மை ஏற்படலாம். ஆனால் அதுவும் மன நலன் சார்ந்ததே.

வயதானவர்களின் மன நிலை, நல்ல நிலையில் இருக்கும் போதே, இயற்கை எய்திட வேண்டும், உடல்நலம் கெட்டு மகனுக்கோ அல்லது மகளுக்கோ, யாருக்கும் பாரமாகி விடக்கூடாது எனும் நிலையில் இருக்கும் அந்த எண்ணமே, அதிகமாகி, அதன் காரணமாகவே, அவர்கள் தூக்கத்தை இழந்து சிரமப் படுகின்றனர்.

எப்படி தூக்கத்தை வரவழைப்பது?

எப்படி தூக்கத்தை வரவழைப்பது?

தூக்கத்தை வலுக்கட்டாயமாக வரவழைக்க எண்ணினால், அது ஏமாற்றத்தில்தான் போய் முடியும். அதீத சிந்தனை, மனக் கிளர்ச்சி மற்றும் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்த மற்ற சில காரணங்களால், நாம் நல்ல உறக்கத்தை இழந்து விட்டோம். எனவே, தூக்கம் இயல்பாக வரும் நிலைக்கு நாம் நம்முடைய மன நிலையை அட்லீஸ்ட், படுக்கைக்கு செல்லும் நேரத்திலாவது, மாற்றிக் கொள்ளவேண்டும்.

லைட்டான உணவு :

லைட்டான உணவு :

இரவில் மிதமான உணவுகளையே உண்ண வேண்டும், ஜங் புட் தவிர்த்து, வேக வைத்த உணவுகளையோ அல்லது பழங்களையோ உண்ணலாம், மேலும், எல்லோருக்குமே பொதுவானது, இரவு உணவு நமக்கு பசிப்பதைவிட குறைவாகவே, உண்ண வேண்டும்.

உறங்கப்போகும் ஒரு மணி நேரத்திற்குள் இரவு உணவை உட் கொண்டிட வேண்டும், சாப்பிட்ட பின், சிறிது நேரத்தை குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக செலவிடலாம். நல்ல நூல்கள் ஆயிரம் நண்பர்களுக்கு சமம் என்பதற்கேற்ப, நல்ல நூல்களை சற்று நேரம் வாசிக்கலாம், ஏற்கெனவே படித்திருந்தாலும், சற்று நேரம் திரும்ப வாசித்தாலும் தவறில்லைதானே.

இவற்றை எல்லாம் செய்துவிட்டு, கை கால்களை நன்கு கழுவி விட்டு, சிறிது நீர் பருகிவிட்டு, படுக்கைக்குச் செல்லலாம், படுக்கையில் எப்போதும் இடது புறம் ஒருக்கணித்தேப் படுக்கவேண்டும், இதன் பின் படுக்கையில் சற்று நேரம் நேர்வினைச் சிந்தனைகளையே எண்ணுங்கள். தூக்கம் வந்துவிடும். என்ன தூக்கம் வரலையா

 ஆழ்ந்த தூக்கத்தை தரும் மகிழம்பூ :

ஆழ்ந்த தூக்கத்தை தரும் மகிழம்பூ :

மகிழ மரம், இலைகள்,பட்டை மற்றும் பூக்களின் மூலம் நற் பலன்கள் தரும் தெய்வீக மரம், இதன் மலர்கள் வாடிய பின்னும் வாசம் நீங்காதிருப்பது, மகிழ மலர்களின் தனிச் சிறப்பு.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

இத்தகைய சக்தி மிக்க மகிழ மலர்களை, சேகரித்து, நன்கு சுத்தம் செய்து படுக்கையில் தலையணைக்கு அருகில் வைத்துப் படுக்க, மனதில் நல்ல எண்ண அலைகளை உண்டாக்கி, எங்கிருந்தோ வரும் நித்திராதேவி, உங்களை நிமிடத்தில் ஆழ்ந்த நித்திரைக்கு அழைத்துப்போவாள்.

மகிழம்பூவிற்கு மாற்று :

மகிழம்பூவிற்கு மாற்று :

இத்தனை நாட்களாக, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து, சிரமப்பட்டு வந்த அனைவரும் இந்த முறையில் நல்ல பலன்களை விரைவில் அடையலாம்.

மகிழ மலர்களை சேகரிப்பது சிரமம், எங்கு தேடுவது என்றே தெரியவில்லை என்று வருந்துகிறீர்களா? கவலை வேண்டாம்.

பெண்களின் கைகளை சிவக்க வைக்கும் மருதாணி, உங்கள் இன்னல்களை களைந்து, உறக்கம் உங்கள் கண்களைத் தழுவ வைக்கும்.

மகிழ மலர்களைப் போன்றே, அற்புதப் பலன்கள் தரவல்லது தான் மருதாணியும். மருதாணி மலர்களை மேற் சொன்ன முறையில் சேகரித்து, படுக்கையில் இட்டு உறங்கி வர, நல்ல காலைப் பொழுது நலமுடன் விடியும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

An ayurvedic remedy to get deep sleep

An ayurvedic remedy to get deep sleep
Story first published: Wednesday, June 21, 2017, 8:00 [IST]
Subscribe Newsletter