Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
கண் கட்டி வந்தால் விரைவில் எப்படி குணப்படுத்தலாம் என தெரியுமா?
கண் மிகவும் சென்ஸிடிவானது. சிறிய தூசு பட்டாலும் கண் சிவந்து போய்விடும். கண்கலில் பலருக்கும் அடிக்கடி வரும் ஒரு பிரச்சனை கண் கட்டி. அதனை விரைவில் எப்படி வீட்டிலேயே குணப்படுத்தலாம் என பார்க்கலாம்.
கண்கட்டி கண்களின் இமைகளில் கட்டி போன்று உருவாகும். வலி, சிவந்து போதல், கண் பார்வை மங்குதால் ஆகியவை உண்டாகும்.

காரணம் என்ன?
இதற்கு உடலில் அதிகப்படியான சூடு, நீர் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைவு. சுகாதாரம் இல்லாமல் இருப்பது பல காரணங்கள் இவ்வாறு கண்கட்டி உருவாவத்ற்கு காரணம். தொற்றினாலும் உண்டாகும். சிலருக்கு அதில் நீர் கசிந்துகொண்டேயிருக்கும்.
இதற்கான தீர்வுகள் எளிதுதான். இங்கே சொல்லப்பட்டவை அனைத்தும் பலன் தரும்பவை. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

தனியா விதை :
தனியா விதை கைப்பிடி எடுத்து 20 மி.லி நீரில் 20 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். பின் வெதுவெதுப்பாகியதும் வடிகட்டி , அந்த நீரினால் கண்களை கழுவலாம். தினமும் 3 முறை செய்து பார்த்தால் பலன் தெரியும்.

கொய்யா இலை :
கொய்யா இலையை லேசாக சூடுபடுத்துங்கள் அதனை ஒரு மெல்லிய துணியினால் மூடி கண்களின் மேல் ஒத்தடம் கொடுங்கள்.

உருளைக் கிழங்கு தோல் :
பலரால் உருளைக் கிழங்கு தோலை சீவி அதனை கண்கள் மீது 10 நிமிடங்கள் வைக்கவும். நல்ல பலன் தெரியும்.

உப்பு :
உப்பை வெறும் வாணிலியில் சூடுபடுத்தி அதனை ஒரு துணியினால் கட்டி கண்கள் மீது ஒத்தடம் வைக்கவும். அல்லது வெதுவெதுப்பான நீரில் உப்பை கரைத்து அதனைக் கொண்டு கண்களை கழுவலாம்.

வேக வைத்த முட்டை :
முட்டையை வேக வைத்து ஓட்டை பிரிக்காமலேயே கண்கள் மீது பொறுக்கும் சூட்டில் வையுங்கள். 5 நிமிடம் இப்படி செய்தால் வலி குறைந்து குணமாகும்.

பாலாடை :
பாலாடை எடுத்து அதனை கண்கள் மீது பூசுங்கள். காய்ந்ததும் பாலினால் கண்களை துடைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கண்களை கழுவுங்கள்.



Click it and Unblock the Notifications
