மன அழுத்தம் நல்லது !! ஏன் என தெரியுமா??

Posted By: Lekhaka
Subscribe to Boldsky

இந்த தலைப்பு உங்களை கண்டிப்பாக ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் என எங்களுக்குத் தெரியும்.

அதிகமான மன அழுத்தம் உங்களின் ஆரோக்கியத்தை கண்டிப்பாக பாதிக்கும். எதுவுமே அளவுக்கு மீறினால் ஆபத்துதான். ஆனால் ஒரு சிறிய அளவிலான அழுத்தம் உங்களுக்குத் தரும் நனமைகள் பல தருகின்றது.

7 surprising reasons why stress can be healthy for you

அனைவரும் ஏதாவது ஒரு சமயத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அமைதியின்மை, மனச் சோர்வு, மகிழ்ச்சியின்மை, கவனம் இழப்பு, பசியின்மை, தலைவலி, சோர்வு, தனிமை, முதலியன மன அழுத்தத்தை வெளிப்படுத்தும் அறிகுறிகளாக அறியப்படுகின்றன.

எனினும், ஒரு சமீபத்திய ஆய்வு முடிவுகள் சிறிய அளவிலான மன அழுத்தம் எண்ணற்ற நன்மைகளை நமக்குத் தருவதாக தெரிவிக்கின்றது. என்ன ஆச்சர்யமாக இருக்கின்றதா? தொடர்ந்து படியுங்கள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 1. மூளையின் ஆரோக்கியம் அதிகரிக்கின்றது

1. மூளையின் ஆரோக்கியம் அதிகரிக்கின்றது

ஆராய்ச்சி முடிவுகள், சிறிய அளவிலான அல்லது குறைந்த கால மன அழுத்தம், மூளை செல்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றது என தெரிவிக்கின்றது.அதோடு மட்டுமல்லாமல் இது மூளையின் உஷார்நிலையை அதிகரிக்கின்றது.

2. ஞாபகசக்தி அதிகரிக்கின்றது :

2. ஞாபகசக்தி அதிகரிக்கின்றது :

அழுத்தம் காரணமாக மூளை செல்களின் உற்பத்தி அதிகரிக்கின்றது. அதன் காரணமாக உங்களுடைய அறிவாற்றல் மற்றும் ஞாபகசக்தி கனிசமான அளவு அதிகரிக்கின்றது.

 3. உடல் ஆற்றல் அதிகரிக்கின்றது

3. உடல் ஆற்றல் அதிகரிக்கின்றது

குறுகிய கால மன அழுத்தம், சில நேரங்களில் உங்களின் மூளையில் அட்ரினலின் உற்பத்தியை அதிகரிக்கின்றது. குறிப்பாக நீங்கள் படபடப்பாக இருக்கும் பொழுது அட்ரினலின் உற்பத்தி அதிகரிக்கின்றது. அதிகமான அட்ரினலின் உங்களின் உடல் ஆற்றலை அதிகரிக்கின்றது.

4. பால் உணர்ச்சி அதிகரிக்கின்றது

4. பால் உணர்ச்சி அதிகரிக்கின்றது

மன அழுத்தம் உங்களின் பால் உணர்ச்சியை அதிகரிகின்றது. நீங்கள் அழுத்தத்தில் இருக்கும் பொழுது உங்களின் மூளை உங்களுடைய விரக்தியை வெளிப்படுத்துவதற்கான வழியைத் தேடுகின்றது.

அதன் காரணமாக மூளை உந்துவிசையை உற்பத்தி செய்து ஒருவரின் பாலியல் உணர்ச்சியை உருவாக்குகின்றது. எனவே குறுகிய கால மன அழுத்தம் உங்களின் ஆண்மையை அதிகரிக்கின்றது. .

5. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

5. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

நாள்பட்ட மன அழுத்தம் நமது நோய் எதிர்ப்பு அமைப்பை பாழ்படுத்துகின்றது என்பது உண்மை தான் என்றாலும், குறுகிய கால மன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அதன் மூலம் நாம் சில வியாதிகளின் தாக்குதலில் இருந்து விடுபடுகின்றோம். எனவே குறுகிய கால மன அழுத்தம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

6. தன்னம்பிக்கை அதிகரிக்கின்றது

6. தன்னம்பிக்கை அதிகரிக்கின்றது

நீங்கள் படபடப்பாக இருக்கும் பொழுது மூளையில் அட்ரினலின் உற்பத்தி அதிகரிக்கின்றது. அதன் காரணமாக உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கின்றது.

குறிப்பாக நீங்கள் ஒரு பொது கூட்டங்களில் பேசுவதற்கு முன்னர் அல்லது அலுவலக கூட்டத்தில் பேச முற்படும் பொழுது இது உங்களுக்கு உதவுகின்றது.

7. இதை விட அதிக பிரச்சனையை சமாளிக்கும் மனோதிடம் !

7. இதை விட அதிக பிரச்சனையை சமாளிக்கும் மனோதிடம் !

குறுகிய கால அழுத்தத்திற்கு ஆட்பட்டவர்களின் மூளை மன அழுத்தத்திற்கு ஏற்ப தன்னை ஏற்கனவே அமைத்துக் கொண்டு விட்டது.

எனவே அந்த மூளை அதிக அழுத்தத்தை வெகு எளிதாக சமாளித்து விடும். ஆகவே அடிக்கடி சிறிய அளவிலான அழுத்தத்திற்கு உட்படும் நபர் வெகு எளிதாக அதிக அழுத்தத்தை சமாளிக்கும் திறனை பெறுகின்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 surprising reasons why stress can be healthy for you

7 surprising reasons why stress can be healthy for you
Story first published: Saturday, November 19, 2016, 18:00 [IST]
Subscribe Newsletter