வலிநிவாரணிகளுக்கு மாற்றாக விளங்கும் சிறந்த 7 இயற்கை மூலிகைகள்

By: Batri Krishnan
Subscribe to Boldsky

பழங்காலம் தொட்டு பல்வேறு மூலிகைகள் வலி நிவாரணிகளாக பயன்பட்டு வருகின்றன. இவற்றிற்கு பக்க விளைவுகள் கிடையாது. எனவே மூலிகைகளை மருத்துவ வலி நிவாரணிகளுக்கு மாற்றாக பயன் படுத்தலாம். இந்த மூலிகை வலி நிவாரணிகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன் பல்வேறு வலி மற்றும் அதனுடைய விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நாம் அனைவருக்கும் தலைவலி, தசைப்பிடிப்பு, விளையாட்டு காயங்கள், கீல்வாதம், நியூரோபதி மற்றும் முதுகு வலி போன்ற பல்வேறு காரணங்களினால் வலி ஏற்படுகின்றது.

7 natural herbs that can replace painkillers effectively

வலி காரணமாக வீக்கம் ஏற்படுகின்றது. அதன் காரணமாக திசுக்கள் பெருகி விடுகின்றது. இது நரம்புகள் மூலமாக மூளைக்கு சமிக்ஞை அனுப்பி வலியை உங்களுக்கு உணர்த்துகின்றது.

அந்த மாதிரியான வலிகளை குணப்படுத்தும்மூ லிகை மருந்துகளில் பக்க விளைவுகள் பற்றிய எந்த ஒரு பயமும் இல்லை. உங்களுக்கு உதவும் விதமாக இங்கு சில வலுவான இயற்கை வலி நிவாரணிகள் பற்றிய குறிப்புகளை கொடுத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 1. மஞ்சள்:

1. மஞ்சள்:

மஞ்சளில் குர்குமின் என்கிற ஒரு இயற்கை மூலப்பொருள் உள்ளது. இதற்கு அழற்சி புரதங்கள் தடுக்கும் ஆற்றல் உள்ளது. மேலும் இது வீக்கத்தை அடக்கும் ஆற்றலை உடலுக்குத் தருகின்றது.

ஒரு ஆய்வு முடிவு குர்குமினுக்கு கீல்வாதம், அல்சைமர், இதய நோய், நீரிழிவு, மற்றும் நாள்பட்ட வலியை போக்கும் திறன் உள்ளது எனத் தெரிவிக்கின்றது. ஒரு நாளுக்கு மூன்று முறை குர்குமினை சுமார் 400-600 மி.கி. எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

 2. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்:

2. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்:

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நீண்ட கால வலியை குறைப்பதற்கு பயன்படுகின்றது. ஏனெனில் மனித உடல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை உடைத்து அழற்சியை தடுக்கும் சேர்மங்களாக மாற்றுகின்றது.

எனவே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மூலிகைகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. மேலும் இதனுடைய குறைபாடு நம்முடைய உடலில் அதிக வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு சுமார் 1000-2000 மிகி அளவு இதை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது.

 3. இஞ்சி:

3. இஞ்சி:

இஞ்சியில் அழற்சி கலவைகள் உற்பத்தியை தடுக்கும் என்சைம்கள் அதிக அளவில் உள்ளன. இஞ்சி ஒரு வலுவான இயற்கை வலி நிவாரணி ஆகும். ஒவ்வொரு நாளும் காய வைக்கப்பட்ட இஞ்சியை (சுக்கு) சுமார் 2 கிராம் எடுத்துக் கொள்வது நாள் பட்ட மற்றும் அதி தீவிர வலியை குறைக்க உதவும்.

 4. டெவில் 'க்ளோ(தேட் கொடுக்கி அல்லது புலி நகம்):

4. டெவில் 'க்ளோ(தேட் கொடுக்கி அல்லது புலி நகம்):

டெவில் ‘க்ளோ' ஒரு கடினமான பழம் ஆகும். இயற்கை மூலிகையான இது மருந்து வலி நிவாரணிகளுக்கு சரியான மாற்றாக விளங்குகின்றது.

இது முதுகு வலி மற்றும் மூட்டு வலியை தீர்க்க உதவுகின்றது. ஆய்வின் முடிவு தினவும் டிவில் க்ளோ உட்கொள்வது, தினத்தோறும் ஆஸ்டியோபோரோசிஸ் மருந்துகள் உட்கொள்வதற்கு ஒப்பாகும் எனத் தெரிவிக்கின்றது.

தினத்தோறும் சுமார் 400 மி.கி அளவு டெவில் க்ளொ உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.

5. வெள்ளை வில்லோ மரப்பட்டை:

5. வெள்ளை வில்லோ மரப்பட்டை:

வெள்ளை வில்லோ பட்டை ஒரு சிறந்த வலி நிவாரணியாக கருதப்படுகின்றது. இது மருத்துவ வலிநிவாரணிகளுக்கு ஒரு சிறந்த மாற்று மூலிகையாக விளங்குகின்றது.

இதில் ஸால்சின் என்கிற மூலக்கூறு சேர்மங்கள் உள்ளது. இதே சேர்மங்கள் ஆஸ்பிரினிலும் உள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் 120-240 மிகி ஸால்சின் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது.

 6. போஸ்வில்லியா:

6. போஸ்வில்லியா:

இது சாம்பிராணி என அழைக்கப்படுகின்றது. இந்த மூலிகை நாள்பட்ட மற்றும் சிறிய வலி நிவாரணத்திற்கு உதவுகிறது. இதில் கீல்வாதம் போன்ற நாள்பட்ட நோய்களை ஏற்படுத்தும் அழற்சி கலவைகள் குறைக்க உதவும் போஸ்வெலிக் என்கிற அமிலம் உள்ளது.

ஒரு நாளைக்கும் மூன்று வேளைகளாக பிரித்து மொத்தமாக சுமார் 750 மிகி போஸ்வில்லியா உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

7. ஆர்னிகா:

7. ஆர்னிகா:

ஆர்னிகா என்கிற வலி நிவாரணி நூற்றாண்டுகள் பழமையான ஆர்னிகா என்கிற மஞ்சள் நிறப் பூவில் இருந்து கிடைக்கின்றது.

ஆர்னிகாவில் செஸ்குவிட்டர்பீன் என்கிற சேர்மம் உள்ளது. இது வீக்கத்தை குறைத்து உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை ஊக்குவிக்கின்றது. மேலும் இது கடுமையான வலியைப் போக்கும் ஒரு இயற்கையன வலி நிவாரணியக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 natural herbs that can replace painkillers effectively

7 natural herbs that can replace painkillers effectively
Story first published: Thursday, December 15, 2016, 11:30 [IST]
Subscribe Newsletter