Latest Updates
-
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்
ஏழு நாட்களில் 5 கிலோ வரை எடையைக் குறைக்க உதவும் பானம் - எப்படி தயாரிப்பது?
Weight Loss Tips In Tamil: நிறைய பேர் உடல் எடையைக் குறைக்க பல்வேறு வழிகளை பின்பற்றி வருகிறார்கள். அதில் பலர் கடுமையான டயட்டை மேற்கொண்டு, தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவார்கள். ஆனால் அனைவராலும் இப்படி டயட்டை ஃபாலோ செய்ய முடியாது. அத்தகையவர்கள் எளிய முறையில் உடல் எடையைக் குறைக்க வழிகளைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.
நீங்களும் அப்படி எளிய வழிகளில் உடல் எடையைக் குறைக்க விரும்புபவரானால், இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் ஒரு அற்புத வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அது வேறொன்றும் இல்லை, உடல் எடையில் உடனடி மாற்றத்தைத் தரக்கூடிய ஒரு பானம் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.

உடல் எடையைக் குறைக்க உதவும் நிறைய பானங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் கடுகு பானம். நமது தினசரி சமையலில் தாளிக்க பயன்படுத்தும் முதல் பொருள் தான் கடுகு. என்ன தான் கடுகு மிகச்சிறியதாக காணப்பட்டாலும், அது வழங்கும் நன்மைகளோ ஏராளம். முக்கியமாக இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரிகின்றன.
அதற்கு கடுகை வெறுமனே சமையலில் பயன்படுத்துவதைத் தவிர, அதைக் கொண்டு உடல் எடையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பானம் தயாரித்துக் குடித்தால், குறுகிய காலத்திலேயே எடையில் மாற்றத்தைக் காணலாம். இப்போது எடையைக் குறைக்க உதவும் இந்த கடுகு பானத்தை எப்படி தயாரிப்பது மற்றும் அதை எப்போது குடிக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடுகு எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது?
கடுகு விதைகளில் கலோரிகள் மிகவும் குறைவாக இருந்தாலும், நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வு ஒன்றில், ஒரு டீஸ்பூன் கடுகு விதைகள், உடலின் மெட்டபாலிசத்தை 25 சதவீதம் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. இது ஒவ்வொரு மணிநேரத்திற்கும் குறைந்தது 45 கலோரிகளை எரிக்கிறது.
இது தவிர கடுகு விதைகளில் உள்ள சிக்கலான நார்ச்சத்து ஜீரணமாவதற்கு செரிமான மண்டலம் சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதற்காக அதிகப்படியான ஆற்றலை பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்த ஆற்றலுக்கு உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக உடல் எடையைக் குறைக்க கடுகு உதவுகிறது.
கடுகு பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
* கடுகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
கடுகு விதைகளில் உள்ள சத்துக்கள்
கடுகு விதைகளில் நார்ச்சத்து மட்டுமின்றி, வைட்டமின் சி, வைட்டமின் கே, தயமின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி6 மற்றும் ஃபோலிக் ஆசிட் போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளன. மேலும் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன.
சோம்பில் உள்ள சத்துக்கள்
கடுகிற்கு அடுத்தப்படியாக சமையலில் பயன்படுத்தும் மற்றொரு பொருள் தான் சோம்பு. இந்த சோம்பில் நார்ச்சத்து, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் சக்தி வாய்ந்த தாவர வகை சேர்மங்களும் உள்ளன. இது பசியைக் கட்டுப்படுத்துவதால், கலோரிகளை அதிகம் உட்கொள்வதைத் தடுக்கிறது. மேலும் சோம்பு இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் இதில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன.
எலுமிச்சை
எலுமிச்சை உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும் முக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று. இந்த எலுமிச்சை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
தயாரிக்கும் முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் கடுகு மற்றும் 1 டீஸ்பூன் சோம்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 கப் சுடுநீரை ஊற்றி மூடி வைத்து, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் கடுகில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அந்த நீரில் இறங்கும்.
* 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்தால், கடுகு பானம் தயார்.
எப்போது குடிக்க வேண்டும்?
உடல் எடையை வேகமாக குறைக்க நினைப்பவர்கள், இந்த கடுகு பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த பானம் தயாரிப்பது மிகவும் சுலபம். இந்த பானத்தைக் குடிப்பதால் உடல் எடை வேகமாக குறைவதோடு மட்டுமின்றி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால், 5 நாட்களிலேயே உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
குறிப்பு
உடல் எடையைக் குறைக்க வெறும் பானத்தை மட்டும் குடித்தால் போதாது. அத்துடன் கொழுப்பு நிறைந்த ஜங்க் உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் தினமும் குறைந்தது 1 மணிநேரம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இவற்றை மனதில் கொண்டு நடந்து வந்தால், நிச்சயம் உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம். ஆனால் தினமும் மருந்து மாத்திரைகளை எடுக்கும் ஒருவர் தங்களின் உணவில் எந்த ஒரு மாற்றத்தை செய்யும் முன்னரும் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

