Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
தினமும் தண்ணீரை 'இப்படி' குடித்து வந்தீங்கனா... உங்க உடல் எடை 'சர்'ன்னு குறையுமாம் தெரியுமா?
உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும், உணவுக்கு இடையில் தண்ணீரை குடிப்பது நல்லதல்ல.
'நீரின்றி அமையாது உலகு' என்ற திருக்குறளுக்கு ஏற்ப தண்ணீர் நாம் உயிர் வாழ மிக முக்கியம். நம் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் தண்ணீர், நமது எடையை குறைக்க உதவும் என்று தெரியுமா? தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் எடை குறைப்பு கனவுகளை நீங்கள் நிறைவேற்றலாம்.
நமது உடல் 60 சதவிகிதம் நீரால் ஆனது. வளர்சிதை மாற்றம், உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நீரேற்றம் தவிர ஊட்டச்சத்துக்களைக் கொண்டு செல்வது போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்குத் தண்ணீர் அவசியம். ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் நீரேற்றமாக இருக்க வேண்டும். இதற்கு தண்ணீரை விட சிறந்த பானம் ஏதுமில்லை.

எடை இழப்பு திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தண்ணீரை, நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
தண்ணீருடன் எடை இழப்பு
நீர் உட்கொள்ளலை அதிகரிப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். இது எடை இழப்புக்கும் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆனால் உடற்பயிற்சிகள் மற்றும் நடைப்பயிற்சி போன்ற மற்ற விஷயங்களுடன் இணையும்போது மட்டுமே எடை இழப்புக்கு தண்ணீர் உதவும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எடை இழப்புக்கு தேவையான நீரின் அளவு
ஒரு நபர் தினமும் குறைந்தபட்சம் 1.5 முதல் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது முக்கியம். இது உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ஆனால், நீங்கள் எப்போது பசியுடன் இருக்கிறீர்கள் மற்றும் உங்கள் உடலில் நீரிழப்பு எப்போது ஏற்படுகிறது மற்றும் தண்ணீர் உங்களுக்கு எப்போது தேவைப்படும் என்பதை புரிந்துகொள்வது அவசியம். உதாரணமாக, மன அழுத்தம் நிறைந்த உடல் உழைப்புக்குப் பிறகு, நாம் பசியுடன் இருப்பதாகக் கருதி இனிப்பு கலந்த பானத்தை அருந்துகிறோம். ஆனால், அப்போது ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது போதுமானது. மேலும் தேவையற்ற கலோரிகளை உட்கொள்வதிலிருந்து உங்களை தடுக்கலாம்.
தண்ணீர் குடிக்க சரியான நேரம்
எடை இழப்புக்கு தண்ணீர் குடிப்பது நல்லது என்றாலும், அதை எப்போது குடிக்க வேண்டும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் சாப்பிடுவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. ஏனெனில், இது உங்கள் பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது, இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிடாமல் குறைவாக சாப்பிடலாம்.
உங்கள் உடல் எடையை குறைக்க சரியான உணவு முறையை பின்பற்றுவதோடு, 1.5 முதல் 2 லிட்டர் அளவு தண்ணீரும் குடிக்க வேண்டும். அத்துடன் உடற்பயிற்சி செய்யும்போது, எடை குறைப்பு சாத்தியமாகும். தினமும் 500 மில்லி தண்ணீரைக் குடிப்பதன் மூலம் உங்கள் நாளைத் தொடங்கலாம். ஏனெனில் இது நாள் முழுவதும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. தூங்கும் போது 8 முதல் 9 மணிநேர உண்ணாவிரதத்திற்குப் பிறகு நல்ல ஆரோக்கியமான தொடக்கமாக தண்ணீர் இருக்கும்.
உணவுடன் ஆரோக்கியமற்ற பானங்களை குடிப்பதைத் தவிர்த்து, தண்ணீரைத் தேர்ந்தெடுங்கள். இது உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது. வேலை செய்வதற்கு முன்னும் வேலையில் இருக்கும்போதும் எப்போதும் தண்ணீரை மட்டும் பானங்களாக எடுத்துகொள்ளுங்கள். ஏனெனில் இது அமர்வு முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் கொழுப்பை எரிக்க உங்களுக்கு உதவும்.
உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும், உணவுக்கு இடையில் தண்ணீரை குடிப்பது நல்லதல்ல. தேவைப்பட்டால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் நிறைய தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது உங்கள் தூக்கத்தை சீர்குலைத்து, நீங்கள் அடிக்கடி கழிவறைக்கு செல்ல எழுந்திருக்க வேண்டியிருக்கும்.
நீங்கள் வேலை செய்யும் மேசை அல்லது அதிக நேரம் செலவிடும் இடத்தில் உங்கள் தண்ணீர் பாட்டிலை வைத்திருங்கள். சுத்தமான தண்ணீர் பாட்டிலை மட்டும் பயன்படுத்துங்கள். எப்போதும் உங்கள் அருகிலேயே தண்ணீர் பாட்டிலை வைத்திருப்பது, நாள் முழுவதும் தண்ணீர் பருகுவதற்கு ஏற்றதாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


