Latest Updates
-
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்
தினமும் 'கக்கா' போக கஷ்டப்படுறீங்களா? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. நல்லா ப்ரீயா போகும்...
Home Remedies For Constipation In Tamil: தினமும் காலையில் எழுந்ததும் காலை கடனை கழித்தால், அந்நாளானது சிறப்பாக இருக்கும். ஆனால் அனைவருமே காலையில் அதை செய்கிறோமா என்றால், அது தான் இல்லை. ஏனெனில் தற்போதைய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையினால், உடலில் கழிவுகளானது இறுக்கமடைந்து மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.
பொதுவாக மலச்சிக்கலானது உடலில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைவாக இருந்தால் ஏற்படும். அதோடு, குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் போதுமான உடலுழைப்பு இல்லாவிட்டாலும் இது ஏற்படும். இப்படிப்பட்ட மலச்சிக்கல் ஒருவருக்கு ஏற்பட்டால், அதை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேணடும்.

இல்லாவிட்டால், அது பைல்ஸ் என்னும் மூல நோயை உண்டாக்கிவிடும். உங்களுக்கும் இப்படி மலச்சிக்கல் அடிக்கடி ஏற்படுமா? அப்படியானால் அந்த மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஒருசில சக்தி வாய்ந்த உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. சப்ஜா விதை
தீவிரமான மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், அதிலிருந்து உடனடி நிவாரணத்தைப் பெற சப்ஜா விதைகள் பெரிதும் உதவி புரியும். அதற்கு 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் சப்ஜா விதைகளை இரவு தூங்கும் முன் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த விதைகளானது நீரில் ஊறி உப்பி ஜெல் போன்று இருக்கும். இதை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் உடன் சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் காலையில் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையே வராது.
2. இசப்கோல் அல்லது சைலியம் உமி
சைலியம் உமி என்று அழைக்கப்படும் இசப்கோல் செரிமான பாதைகளை சுத்தம் செய்யவும், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் உடனடி நிவாரணத்தை அளிக்கக்கூடியது. ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்ற உணவுப் பொருட்களை விட ஏராளமான அளவில் உள்ளது. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன் இசப்கோலை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் அல்லது நீருடன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம்.
3. அத்திப்பழ பால்
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதுவும் இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இப்படிப்பட்ட உலர்ந்த அத்திப்பழத்தை 2 துண்டு எடுத்து சிறிது நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை கரண்டியால் அப்படியே மசித்து, வெதுவெதுப்பான பாலுடன் சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், மலச்சிக்கல் பிரச்சனையே வராது.
4. திரிபலா மற்றும் நெய்
ஆயுர்வேத மருத்துவத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் திரிபலா. அதுவும் இந்த திரிபலா மலச்சிக்கலில் இருந்து விடுவிப்பதில் சிறந்தது. ஏனெனில் இது சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு, குடலியக்கத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் திரிபலா பொடியுடன் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் உட்கொண்டு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும்.
5. கருப்பு உலர் திராட்சை
கருப்பு உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. கருப்பு உலர்திராட்சையை தினமும் உட்கொண்டு வந்தால், அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ளும். அதுவும் கடுமையான மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கருப்பு உலர் திராட்சையை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த திராட்சையுடன் நீரையும் குடிக்க வேண்டும். இப்படியொரு பழக்கத்தை தினமும் கொண்டிருந்தால், மலச்சிக்கல் பிரச்சனையே வராது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications