TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
கிட்னி, கல்லீரல்ல வர்ற எல்லா பிரச்னைக்கும் ஜாதிபத்திரி ஒன்னே போதுமாம்... இது தெரியாம போச்சே!
நம் நாட்டில் தான் எங்கும் இல்லாத அளவிற்கு மருத்துவ மூலிகைகள் காணப்படுகிறது. அப்படிப்பட்ட ஒன்று தான் இந்த ஜாதிப்பத்திரி. பார்ப்பதற்கு ஆக்டோபஸின் வடிவம் போன்று ஆரஞ்சு கலரில் வடிவில் சிறியதாக இருந்தாலும் இது அள்ளித் தரும் பலன்கள் ஏராளம்.
இந்த ஜாதிப்பத்திரி ஒரு சிவப்பு நிற பழம் காணப்படும். இந்த பழத்திலிருந்து பெறப்படும் மசாலா மிகவும் நறுமணமிக்கது. அதனால் தான் இதை சமையலில் பயன்படுத்துகிறார்கள். இந்த ஜாதிப்பத்திரி விதையில் உள்ள பழத்தை எடுத்து வெயிலில் காய வைத்து ஜாதிபத்திரி தயாரிக்கிறார்கள். இந்த நறுமணப் பொருள் மவுத் ப்ரஷ்னராக கூட பயன்பட்டு வருகிறது.
ஏன் சமையலில் பயன்படுத்துகிறோம்
இந்திய சமையலில் மசாலா பொருட்கள் இல்லாமல் இருக்காது. ஏனெனில் இது குறைந்த கொழுப்பு கொண்டு இருப்பதால் எளிதில் சீரண மாகும். ஜாவிற்ரியின் அழற்சி எதிர்ப்பு தன்மையால் சைனீஸ், இந்திய சமையலில் பெரும் பங்கு வகிக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மன அழுத்தத்தை குறைக்கும் தெரபிகளில் பயன்படுகிறது. அறிவாற்றல் செயல்பாடுகளை அதிகரிக்கவும், நிம்மதியான தூக்கந்திற்கும் இது உதவுகிறது.
Most Read: பெண்களுக்கு ஒரே நேரத்துல இரண்டு ஆண்களோடு தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?
ஊட்டச்சத்து அளவுகள்
100 கிராம் ஜாவிற்ரி மசாலாவில்
கலோரிகள் - 475
பைரிடாக்சின்-0.160மில்லி கிராம்
ரிபோப்ளவின் - 0.448மில்லி கிராம்
தைமின்-0.312 மில்லி கிராம்
கார்போஹைட்ரேட் - 50.50கிராம்
புரோட்டீன் - 6.71கிராம்
கொழுப்பு - 32.38 கிராம்
நார்ச்சத்து - 20.2 கிராம்
போலேட்76 மைக்ரோ கிராம்
நியசின் -1.350 மில்லி கிராம்
விட்டமின் சி - 21 மில்லி கிராம்
சோடியம் - 80 மில்லி கிராம்
பொட்டாசியம்- 463 மில்லி கிராம்
கால்சியம் - 25 2 மில்லி கிராம்
காப்பர் - 2.467 மில்லி கிராம்
இரும்புச் சத்து - - 13.90 மில்லி கிராம்
மக்னீசியம் -163 மில்லி கிராம்
மாங்கனீஸ் - 1,500 மில்லி கிராம்
பாஸ்பரஸ் - 1 10 மில்லி கிராம்
ஜிங்க் - 2.15 மில்லிகிராம்
சீரண சக்தியை அதிகரித்தல்
இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்துகள் சீரண பிரச்சினையை சரி செய்கிறது. மலச்சிக்கல், வயிறு வீக்கம், வாய்வுத் தொல்லை போன்றவற்றை நீக்குகிறது. மலம் கழித்தலை இலகுவாக்குகிறது. வாந்தி, வயிற்று போக்கு போன்றவற்றை இந்த மசாலா சரி செய்கிறது.
இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்
நமது இரத்த ஓட்ட மண்டலத்தை சுறுசுறுப்பாக்குகிறது. இதிலுள்ள மாங்கனீஸ் உடலில் உள்ள நச்சுக்களை அலசி வெளியேற்றுகிறது. இதிலுள்ள இரும்புச் சத்து இரத்த அபிவிருத்திக்கு உதவுகிறது.
சிறுநீரக ஆரோக்கியம்
இந்த மசாலாவை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தாலே சிறுநீரக பிரச்சினை சரியாகி விடும். சிறுநீரில் ஏற்படும் சிறுநீரக கற்களை கரைக்கிறது. இதனால் எளிதாக வெளியேற்றப்படுகிறது. இதற்கு காரணம் இதிலுள்ள மக்னீசியம், கால்சியம் சத்துக்கள் தான். சிறுநீரக தொற்றை தடுக்கிறது.
பசியை தூண்டுதல்
உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், பசி இல்லாமல் இருப்பவர்கள், சரிவர சாப்பிடாத குழந்தைகள் அவர்களுக்கு பசியை தூண்ட இது உதவுகிறது. இதிலுள்ள ஜிங்க் பசியை தூண்டும் பொருளாக செயல்படுகிறது. எனவே இந்த மசாலாவை உணவில் சேர்த்து வந்தால் பசி ஏற்பட்டு நேர நேரத்துக்கு சரியாக சாப்பிடுவோம்.
புற்றுநோயை தடுத்தல்
ஆசிய பசுபிக் ஜர்னல் ஆஃப் டிராபிகல் மெடிசின் நடத்திய ஆய்வின் படி,இந்த மசாலாவிற்கு புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தன்மை புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. செல்கள் பிறழ்ச்சியாவதை தடுத்து புற்று நோய் செல்கள் வளர விடாமல் தடுக்கிறது.
அழற்சி சிகிச்சைகள்
இதன் மயக்க மருந்து தன்மையால் உடம்பில் ஏற்படும் அலற்சிக்கு மருந்தாகிறது. அழற்சியால் ஏற்படும் வலியை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தன்மை அழற்சிக்கு காரணமான கிருமிகளை அழிக்கிறது. இந்த ஜாவிற்ரி எண்ணெய் மூட்டு வலி, மசாஜ், தசைகளை ரிலாக்ஸ் செய்தல் போன்ற சிகச்சை களுக்கு பயன்படுகிறது.
வலிக்கு நிவாரணம்
சைனீஸ் மக்கள் இதை சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்துகின்றனர். காயங்களில் ஏற்படும் வலி, தசைகள் பிடிப்பு, அழற்சி போன்ற வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
மன அழுத்தம்
இதிலுள்ள விட்டமின் பி காம்ப்ளக்ஸ் நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. நியசின், தைமின் மற்றும் ரிபோப்ளவின் போன்றவை மன அழுத்தத்தை குறைத்து பயத்தை போக்குகிறது.
புதிய இரத்த செல்கள் உருவாக்கம்
இதிலுள்ள இரும்புச் சத்து மற்றும் காப்பர் புதிய இரத்த செல்களை உருவாக்குகிறது. இதனால் இரத்த சோகம் போன்ற நோய்கள் வராது. சோர்வு, அனிமியா, தசைகள் பலவீனம் எதுவும் நெருங்காது.
இன்ஸோமினியா
இன்ஸோமினியா போன்ற தூக்கமின்மை பிரச்சினையை இதைக் கொண்டு எளிதாக விரட்டி விடலாம். இதிலுள்ள மக்னீசியம் நரம்புகளை அமைதிப்படுத்தி செரோடோனின் ஹார்மோனை சுரக்க செய்து நிம்மதியான தூக்கத்தை தருகிறது.
மூளை ஆரோக்கியம்
இந்த ஜாவிற்ரி எண்ணெய்யில் உள்ள மிரிஸ்ஸின் மற்றும் மசெலிக்னைன் மூளையில் உள்ள நரம்புகளை மேம்படுத்துகிறது. அல்சீமர் நோய், டிமென்ஷியா போன்ற நினைவாற்றல் இழப்பு வராமல் நினைவாற்றலை அதிகரிக்கிறது.
சலதோஷம் மற்றும் இருமல்
இதன் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை சலதோஷம் மற்றும் இருமலை விரட்டுகிறது. இந்த மசாலாவை வைத்து டானிக் தயாரித்து குடிக்கலாம். தொண்டை புண், ஆஸ்துமா பிரச்சினைகள் காணாமல் போய் விடும்.
வாய் ஆரோக்கியம்
இதிலுள்ள யூஜெனால் ஈறுகளில் இரத்தக் கசிவு, பல்வலி போன்றவற்றை சரி செய்கிறது. இதன் ஆன்டி பாக்டீரியல் தன்மை வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வாய் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
சாதிக்காய் ரெசிபி
மசாலா டீ
11/2 கப் தண்ணீர்
11/2 டேபிள் ஸ்பூன் டீ பவுடர்
1 டேபிள் ஸ்பூன் தேன்
1/2 ஸ்பூன் ஜாவிற்ரி பொடி
பயன்படுத்தும் முறை.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்கவும்
டீ பொடி சேர்த்து மிதமான தீயில் வையுங்கள்
இப்பொழுது சாதிக்காய் பவுடர் கலந்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்
தேன் சேர்த்து கொள்ளுங்கள்
காய்கறி சூப்
தேவையான பொருட்கள்
1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
1 பெரிய நறுக்கிய வெங்காயம்
1 பெரிய கேரட், நறுக்கியது
2 பழுத்த செலரி, நறுக்கியது
2 பூண்டு பற்கள்
1/2 டீ ஸ்பூன் சாதிக்காய் பொடி
11/2 கப் தண்ணீர்
21/2 கப் கடலை பருப்பு
உப்பு, மிளகுத்தூள் சுவைக்கேற்ப
பயன்படுத்தும் முறை
மிதமான தீயில் பாத்திரத்தை வைத்து ஆலிவ் ஆயில் ஊற்றி சூடுபடுத்தவும்
வெங்காயம், கேரட், செலரி மற்றும் பூண்டு சேர்த்து கொள்ளுங்கள்
நன்றாக மென்மையாகும் வரை சமைக்கவும்
இப்பொழுது சாதிக்காய் பவுடர், கடலை பருப்பு சேர்த்து கொள்ளுங்கள்
தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்கள் சமைக்கவும். பருப்பு மென்மையாகும் வரை சமைக்கவும்
உப்பு, மிளகு சேர்த்து பரிமாறுங்கள்
சுவையான சூப் ரெடி
Most Read: கொஞ்சம் சாப்பிடறவங்க குண்டாவும் நிறைய சாப்பிடறவங்க ஒல்லியா இருக்கறது ஏன் தெரியுமா?
கவனத்தில் வைக்க வேண்டியவை
சாதிக்காய் பவுடரை அதிகளவில் பயன்படுத்த வேண்டாம்.
கருவுற்ற பெண்கள் பயன்படுத்தும் போது கருச்சிதைவு, குழந்தை பிறப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இதை உபயோகிக்க கூடாது
அதிகளவில் எடுக்கும் போது ஒரு வித மயக்க நிலை ஏற்படும்.
அதிகளவில் உபயோகித்தால் வியர்த்தல், படபடப்பு, தலைவலி மற்றும் உடல் வலி ஏற்படும்.
கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய் இருப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ள கூடாது.