For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எகிப்துல வாழ்க்கையோட எல்லா விஷயத்துக்கும் எந்த மூலிகைய பயன்படுத்தறாங்க தெரியுமா?

|

நம் முன்னோர்கள் ஏன் எல்லா நோய்களுக்கும் மூலிகையை பயன்படுத்தினார்கள் எனத் தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம் அந்த வரலாற்றை ஹெர்பாலிசம் என்பது மூலிகைகளை மட்டும் பயன்படுத்தும் ஒரு மருத்துவ முறை. 1000 வருடங்களுக்கு முன்னால் இருந்தே நம் முன்னோர்கள் இந்த மூலிகைகளை நிறைய நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

சுமார் 60, 000 வருடங்களுக்கு முன்னால் இருந்தே அதாவது பழைய கற்காலத்தில் இருந்தே மனிதன் மூலிகைகளை பயன்படுத்தி வருகின்றான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உதாரணங்கள்

உதாரணங்கள்

ஆயிரக்கணக்கான மனித சமூகத்தில் ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு வகையான மூலிகைகளை பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே அப்படிப்பட்ட மூலிகைகளை பட்டியிலிடுவது மிகக் கடினமாகவே உள்ளது. ஆனால் இருப்பினும் ஒரு சில மூலிகைகளின் மருத்துவ குணங்கள் மட்டும் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்குகிறது.

இதைப் பற்றி பேசப் போனால் குறிப்பாக கெமோமில் டீ தூக்கமின்மை, அனிஸிட்டி, வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. ஏன் நாம் வீட்டில் வளர்க்கும் துளசி கூட அதன் ஆன்டி மைக்ரோபியல் தன்மையால் தொற்றுகளை எதிர்த்து போரிடுகிறது.

MOST READ: நம்ம முழு உடம்பையும் தாங்கிப்பிடிக்கறது இந்த எலும்புதானாம்... எப்படி தாங்குதுனு நீங்களே பாருங்க...

பழங்கால ஹெர்பாலிசம்

பழங்கால ஹெர்பாலிசம்

மூலிகைகளின் ஆரம்பகால பட்டியலில் எழுதப்பட்ட விவரங்கள் பண்டைய சுமேரியாவிலிருந்து வந்தவைகள். இதை பண்டைய எகிப்து மற்றும் சிந்து சமவெளி ஆகியவற்றுடன் சேர்ந்து முதல் பெரிய நாகரிகங்களில் ஒன்றாக கருதுகின்றனர்.

இதன் படி 250 மூலிகைகளைக் கொண்டு 12 விதமான மருத்துவ பயன்களை பட்டியிலிட்டனர். அந்த காலத்திலேயே பாப்பி, ஹென்பேன், மாண்ட்ரேக் போன்ற மூலிகைகளைக் கொண்டு மாத்திரைகள் கூட தயாரிக்கப்பட்டனர்.

எகிப்து மூலிகைகள்

எகிப்து மூலிகைகள்

எகிப்திய ஹைரோ கிளிஃப்களுக்கான சரியான மொழிபெயர்ப்பு இல்லை. ஆனால் நவீன காலத்தில் எகிப்திய மருத்துவ மூலிகை பட்டியலை மொழி பெயர்த்து வருகிறார்கள். கண்டிப்பாக இது எகிப்திய மூலிகை பற்றிய புரிதலை நம்மளுக்கு கொடுக்கும். எப்ரஸ் பாப்ரைஸ் போன்ற மூலிகைகள் எகிப்தியர்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா

இந்தியா

இந்திய புனித வேதங்களில் கூட ஏராளமான மருத்துவ மூலிகைகளைப் பற்றி நிறைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் படி பார்த்தால் இந்தியர்கள் நிறைய மூலிகை பொருட்களை சாதரணமாகவே சமையலில் பயன்படுத்தி வருகிறார்கள். உதாரணமாக நாம் சமையலில் பயன்படுத்தப்படும் மஞ்சள், இஞ்சி போன்றவை சமையலில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே மாதிரி மிளகு போன்றவை இன்ஸோமினியா, சூரியனார் ஏற்படும் சரும பாதிப்பு, பல்வலி, போன்ற நிறைய நோய்களை குணப்படுத்துகிறார்கள்.

சீன மக்கள்

சீன மக்கள்

பி.சி. இ. 2500 ஆம் ஆண்டில் பேரரசர் ஷென் நுங் வேர்கள் மற்றும் புற்கள் குறித்து ஒரு புத்தகம் எழுதினார். இந்த புத்தகத்தில் மருத்துவ குணங்களை கொண்டிருப்பதாக 365 உலர்ந்த தாவர பாகங்களை பட்டியலிட்டு உள்ளார். இந்த பட்டியிலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான தாவரங்கள் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: இவ்ளோ அழகா இருந்தும் முரட்டு சிங்கிளாதான் இருப்பேன்னு அடம்பிடிக்கும் நடிகைகள் யார்யார் தெரியுமா?

ரோம் மற்றும் க்ரீஸ்

ரோம் மற்றும் க்ரீஸ்

பல பண்டைய ரோமானிய மற்றும் கிரேக்க நூல்கள் மூலிகைகளின் பயன்பாட்டை கொண்டு எழுதப்பட்டுள்ளது. அதில் ஹோமரின் தி இலியட் மற்றும் தி ஒடிஸி ஆகியவற்றில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் . கிட்டத்தட்ட 63 வகையான மருத்துவ மூலிகைகளைப் பற்றி இவர்கள் விவரிக்கிறார்கள். அதில் பூண்டு, கேஸ்டர் பீன்ஸ் போன்றவை அடங்கும்.

மூலிகைகளின் பரவுதல்

மூலிகைகளின் பரவுதல்

தற்போதுள்ள வர்த்தக மற்றும் வாய்ப்புகள் மூலிகைகளின் பயன்பாட்டை பரப்பி உள்ளதே என்று கூறலாம். பல குளிர்ந்த அல்லது ஈரமான பகுதிகளில் சில மூலிகைகள் வளர முடியவில்லை. வர்த்தகம் வாய்லாக ரோஸ்மேரி, பூண்டு போன்ற மூலிகைகள் மக்களுக்கு கிடைக்கும் படி செய்யப்பட்டுள்ளது.

இடைக்காலம்

இடைக்காலம்

இடைக்காலத்தில் ஆரம்ப கால மருத்துவர்களுக்காக மூலிகைகள் வளர்க்கப்படும் பணிகள் மேறகொள்ளப்பட்டன. நிறைய துருவிகள் மருத்துவ மூலிகைகளின் பட்டியலை வேறு மொழிகளில் இருந்து மொழிபெயர்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் படி மடங்களில் மூலிகைகள் வளர்க்கப்பட்டு நோய்களுக்கு மருந்தாக்கப்பட்டது.

ஆரம்பகால நவீனம்

ஆரம்பகால நவீனம்

துறவிகளின் இடைப்பட்ட காலமான 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டில் லத்தீன் மற்றும் க்ரீக் மொழியில் நிறைய மூலிகைகள் இடம் பெற்று இருந்தன. எனவே இந்த காலத்தில் மூலிகைகளின் தேவை தாறுமாறாக எகிறியதே என்று கூறலாம்.

MOST READ: மனித பிறப்பும் இறப்பும் இந்த லோகத்தில் தான் தீர்மானிப்பாங்களாம்... தேவி லோக மர்மங்கள்...

நவீன காலம்

நவீன காலம்

19 ஆம் நூற்றாண்டில் வணீகம் மூலிகைகளின் உற்பத்திக்கு திருப்பு முனையாக அமைந்தது. மூலிகைகள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அல்கலைடு தாவரங்களான பாப்பி, ஸ்ட்ரைக்னோஸ் மற்றும் ஐபகாகுவான்ஹா போன்ற தாவரங்கள் தனியாக பிரிக்கப்பட்டது. இதிலுள்ள கெமிக்கல்கள் பொருட்கள் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A History of Healing Herbs and Their Uses

Herbalism is the use of plants for medicinal purposes. For thousands of years, cultures have sought to cure diseases and looked to herbs as the answer. Humans began using herbs medicinally as early as the Paleolithic age 60,000 years ago.