ஆலிவ் ஆயில் பற்றி இதுவரைக்கும் உங்களுக்கு இருந்த சந்தேகமெல்லாம் இத படிச்சா தீர்ந்துடும்...

Posted By: gnaana
Subscribe to Boldsky

உடல் ஆரோக்கியம் காக்கும் ஆலிவ் எண்ணை சருமத்தையும் வளமாக்கும்.

முற்காலங்களில் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகள் அடங்கிய மத்தியத்தரைக்கடல் நாடுகளில், வீட்டு உபயோகத்தில் இருந்த ஆலிவ் ஆயில், இன்று உலகெங்கும் சமையலுக்கும், உடல் அழகுக்கும் பெரிதும் உபயோகமாகும் ஒப்பற்ற ஆயிலாகத் திகழ்கிறது.

health

அதற்கு முக்கிய காரணம், அதிலுள்ள வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், பொட்டாசியம் போன்ற வேதித்தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துமிக்க கொழுப்பு எண்ணை ஆகியவைதான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு நிறைந்துள்ளதால், ஆலிவ் ஆயில், உலகின் அனைத்து பகுதிகளிலும், சமையலுக்கு பயன்படும் எண்ணையாகத் திகழ்கிறது. இதன் ஊட்டச்சத்துக்கள் சமையலுடன் சேர்த்து, உடல் மற்றும் முக அழகு பராமரிப்பிலும் சிறந்த பயன்கள் தருகின்றன. பல காலமாக, சமையலிலும், முக அழகு பராமரிப்பிலும் பயன்படும் ஆலிவ் ஆயிலை நீங்கள் இதுவரை, வீடுகளில் பயன்படுத்தியதில்லையா? அப்படியானால், இதுவே சிறந்த தருணம், ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவதால் அடையும் நன்மைகளைப் பட்டியலிடும் இந்தக் கட்டுரையை நீங்கள் படித்தவுடன், உங்களை ஆலிவ் ஆயிலை வாங்கத்தூண்டி, பயன்படுத்தி பலன்களை அடையவைக்கும். அதேபோல் இதுவரை உங்களுக்கு ஆலிவ் ஆயில் பற்றி இருந்துவந்த சந்தேகங்களும் ஒரு முடிவுக்கு வரும்.

டைப் 2 டையாபடிஸ்

டைப் 2 டையாபடிஸ்

சர்க்கரை பாதிப்பின் பிரச்னைகள் இல்லாத நாடுகளே இல்லை என்ற இன்றைய காலகட்டத்தில், ஆலிவ் ஆயிலை தினமும் சமையலில் உபயோகப்படுத்தும் மேலைநாடுகளில் உள்ளோருக்கு, ஆலிவ் ஆயிலில் உள்ள நன்மை தரும் கொழுப்பு, உடலின் கெட்ட கொழுப்புகளை குறைத்து, இரத்த சர்க்கரை அளவை, இயல்பாக்குகிறது. ஆலிவ் ஆயிலை சமையலில் பயன்படுத்துவதன் மூலம், நீண்ட நாள் உடல்நல கோளாறுகளை சரியாக்க முடியும். குறிப்பாக, டைப் டயாபடீஸைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.

பக்கவாதம்

பக்கவாதம்

பொதுவாக ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்படக்கூடிய பக்கவாத பாதிப்பைத் தடுக்கும் ஆற்றல், ஆலிவ் ஆயிலுக்கு உண்டு. இதிலுள்ள நல்ல கொழுப்பு, உடலிலுள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் லிபோபுரோடினை குறைத்து, அதனால் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, பக்க வாதம் வராமல், காக்கிறது.

கேன்சர்

கேன்சர்

புற்றுநோய் வைத்தியத்தில், ஆலிவ் ஆயில் சிறந்த பலன்தரும். இதன் ஒலேகெந்தால் எனும் ஊட்டத்தாது, உடல் திசுக்களின் அழற்சிகளைத் தடுக்கிறது. தினமும் ஆலிவ் எண்ணையை உபயோகிப்பதன்மூலம், சரும கேன்சர், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், உணவுக்குழாய் கேன்சர் போன்றவற்றைத் தடுக்கிறது. இதிலுள்ள வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், உடலிலுள்ள தனித்த செல்கள், DNA மூலக்கூறுகளைத் தாக்குவதைத் தடுக்கிறது.

தினமும் பத்து மில்லி ஆலிவ் ஆயிலை சமையலில் சேர்த்துக்கொள்ள, பாதிப்புகள் விலகும்.

எலும்பு புரை

எலும்பு புரை

ஆலிவ் ஆயிலில் உள்ள ஒலேயுரோபின் எனும் வேதிச்சத்து, எலும்பை வலுவாக்கும் செல்களின் உற்பத்தியை ஊக்குவித்து, கால்சியத்தை எலும்புகளில் சேர்க்கும். தினமும் ஆலிவ் ஆயிலை உபயோகித்துவர, எலும்புகளின் கால்சிய சத்தையும் எலும்பு தாதுக்களையும் அதிகரிக்கும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

ஆலிவ் எண்ணையை தினமும் உணவுகளில் சேர்த்துவர, மன வளத்தை அளித்து, மனச்சோர்விலிருந்து வெளிவர உதவும். இதிலுள்ள நன்மைதரும் கொழுப்பு, மன அழுத்த பாதிப்புகளை சரியாக்குகிறது. ஆலிவ் எண்ணையைக்கொண்டு, உடலில் மசாஜ் செய்ய, நரம்புகளை இயல்பாக்குகிறது. இதனால், இரத்த ஓட்டம் சீராகி, மன அழுத்தம் குறைகிறது.

ஞாபகமறதி

ஞாபகமறதி

ஞாபக மறதி நோயை ஏற்படுத்தும் மூளையின் அபரிமித அமிலாய்டு புரோட்டின் படலத்தை, ஆலிவ் ஆயிலிலுள்ள ஒலியோகெந்தால் தாது, குறைக்கிறது. தினமும் ஆலிவ் ஆயிலை உபயோகிக்கும்போது, அல்சைமர் வியாதி எனும் ஞாபக மறதியை குணமாக்குவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கணைய பாதிப்பு

கணைய பாதிப்பு

கணைய அழற்சியால் ஏற்படும் கடுமையான கணைய வியாதிகளை, ஒலிக் அமிலம் மற்றும் ஹைட்ராக்சிடைரோசொல் நிறைந்துள்ள ஆலிவ் ஆயிலை தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம், கணைய பாதிப்புகள், நுரையீரல், உணவுக்குழல் பாதிப்புகளை சரிசெய்யும்.

நினைவாற்றல்

நினைவாற்றல்

ஆலிவ் ஆயிலில் உள்ள வைட்டமின் K, மூளையின் ஆற்றலை அதிகரித்து, மனத்தைக்கூர்மையாக்கி, விசயங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் திறனை அதிகரிக்கும். ஆலிவ் ஆயிலிலுள்ள பாலிபினால் மற்றும் வைட்டமின் E, செயல் முடக்கத்தைத்தடுக்கும்.

கல்லீரல்

கல்லீரல்

ஆக்சிஜனேற்ற பாதிப்பு மற்றும் அழற்சிகளால், கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. எலுமிச்சை சாற்றுடன் ஆலிவ் ஆயிலை உட்கொள்ள, ஆக்சிஜனேற்ற தடுப்பாகவும், கல்லீரல் சுத்திகரிப்பானாகவும் செயல்பட்டு, கல்லீரலை வலுவாக்கும். ஆல்கஹால் மற்றும் காஃப்ஃபீன் கல்லீரலை பாதிக்காமல் தடுக்கிறது.

குடல்புண்

குடல்புண்

பெருங்குடலில் ஏற்படும் அழற்சி மற்றும் புண்ணை ஏற்படுத்தும் வியாதியைத் தடுக்கிறது. அழற்சியைத்தடுக்கும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ள ஆலிவ் ஆயிலை, தினமும் குடித்துவர, பாதிப்புகள் நீங்கும்.

வலிகள்

வலிகள்

மூட்டு இணைப்புகளில் ஆலிவ் ஆயிலைத்தடவ, வலி விலகும். வலியை ஏற்படுத்தும் என்சைம்களை, குணப்படுத்தும் ஆற்றல்மிக்கது, ஆலிவ் எண்ணையில் உள்ள ஒலியோகெந்தால். எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை தினமும், இருபத்தைந்து மில்லி உபயோகிப்பது, வலி நிவாரணியான இபுபுரூபன் மருந்தில், பதினைந்து சதவீதத்துக்கு சமம்.

நோயெதிர்ப்பு ஆற்றல்

நோயெதிர்ப்பு ஆற்றல்

ஆலிவ் ஆயிலிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் E, உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தி, கிருமிகளின் பாதிப்பைத் தடுக்கும். அதனால் இது நோயெதிர்ப்பு ஆற்றலைக் கொடுக்கிறது.

வயிற்றுப்புண்

வயிற்றுப்புண்

ஆலிவ் ஆயில் வயிற்றுப்புண்ணை ஏற்படுத்தும் ஹெலிகொபேக்டர் பாக்டீரியாவை குறைப்பதன் மூலம், வயிற்றைக் காக்கும். வயிற்றுப் புழுக்களை அழித்து, வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது.

செரிமானம்

செரிமானம்

இரைப்பை பாதிப்புகளைத் தடுப்பதன் மூலம், செரிமானத்தைத் தூண்டி, மலச்சிக்கலைப் போக்கும். உடலின் மெட்டபாலிச்தை அதிகரிக்கச் செய்யும். அதனால் ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமானக் கோளாறுகளைத் தவிர்க்க முடியும்.

தாய்மையடைதல்

தாய்மையடைதல்

கருவிலுள்ள குழந்தையின் உடல் இயக்கத்திறன், கண்பார்வை, சிறுநீரகம் மற்றும் கணைய வளர்ச்சியை வலுவாக்குவதில், ஆலிவ் ஆயில் பெரும் துணைபுரியும். அதனால் கரு உற்பத்தி, கரு வேகமாகவும் ஆரோக்கியமாகவும் வளருதல் என பல வழிகளில் நன்மை பயக்கிறது.

காயங்கள்

காயங்கள்

காயங்களை விரைவில் ஆற்றி, நகங்களை வலுவாக்கும். ஆலிவ் ஆயிலை குடித்தோ அல்லது காயங்களில் தடவியோவர, காயங்களில் உள்ள பாதிப்புகளைப் போக்கி, விரைவில் ஆற்றும். ஆலிவ் ஆயிலிலுள்ள வைட்டமின் E சத்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, நகங்களின் வளர்ச்சியைத்தூண்டி, சொத்தை மற்றும் வெளுத்த நகங்களின் தன்மையை மாற்றி, நகத்தைப்பொலிவாக்கும்.

உடல் எடை

உடல் எடை

சாப்பிடுமுன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலைக் குடித்தால், பசியை குறைத்து, உடல் எடையை குறைக்கும். உடலில் கொழுப்பு சேர்ந்த இடங்களில் ஆலிவ் ஆயில் மசாஜ் செய்துவர, தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.

சருமப் பொலிவு

சருமப் பொலிவு

அரிப்பு மற்றும் உடல் தடிப்பை, ஆலிவ் ஆயிலிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட் குணமாக்கி, சரும செல்களை பொலிவாக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றும். ஆலிவ் ஆயிலிலுள்ள ஒமேகா 3, ஒமேகா 6 கொழுப்பு, சருமத்தை மென்மையாக்கி, வறண்ட சருமத்தை ஈரத்தன்மை மிக்கதாக மாற்றும் வைட்டமின் E, ப்ரீ ரேடிகல் செல்களின் வேகத்தைத் தணித்து, சருமத்தை பாதிப்புகளிலிருந்து காக்கிறது.

வயதாவதைத் தடுக்கும்

வயதாவதைத் தடுக்கும்

ஆலிவ் ஆயிலிலுள்ள பாலிபினால் மற்றும் ஒலிக் அமிலம், வயதாவதால் தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, சருமத்தைப் பொலிவாக்குகிறது. வயதான தோற்றத்தை போக்கி, இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

முடி உதிர்வு

முடி உதிர்வு

தலையில் ஆலிவ் ஆயிலைத்தேய்த்துவர, முடி உதிர்தல் கட்டுப்பட்டு, முடி வளர்ச்சி அதிகரிக்கும். ஆலிவ் ஆயிலிலுள்ள ஸ்க்யூலின் மற்றும் பால்மிடிக் அமிலம், முடியை பளபளப்பாக்கி, வளர்ச்சியைத்தூண்டும். பொடுகைக் கட்டுப்படுத்தும்.

முகம் மற்றும் உடலில் போடும் மேக்கக்கை, கண் புருவத்தில் இடும் மையை அழிக்க, ஆலிவ் ஆயிலை பஞ்சில் தோய்த்து, தடவிவரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

proven health and beauty benefits of olive oil

The benefits of olive oil are peerless. Originally, a staple of Mediterranean diet.