For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எவ்வளவு வலி இருந்தாலும் இந்த மூலிகை இருந்தா போதும்... பஞ்சா பறந்துடும்...

By Gnaana
|

"வாங்கம்மா! மெதுவா பார்த்து ஏறுங்க. படியிலே நின்னு வாங்க", மூச்சிரைக்க, வீட்டில் நுழையும் நடுத்தர வயது பெண்களிடம், வீட்டில் உள்ளவர்கள், மேற்படி பேசி, நாம் பார்த்திருப்போம். "எத்தனை நாளா, இந்த மூட்டு வலி? தெரியலேப்பா! அது எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து இருக்குது!" இதையும் கேட்டிருப்போம்.

சாலையில், ஒரு மூட்டையை தூக்கிவிட, சற்றே கைகொடுக்கும்போது, தோள்பட்டையில் ஏற்படும் விண்ணென்ற வலியில், கையை விட்டுவிட்டு, துடித்துபோவோமே! எத்தனை நாளா அந்த வலி இருக்குது? அது இருக்கு, ரொம்ப நாளா, அதுதான், நான் வெயிட் தூக்கறதே இல்லே, என்று பெருமிதம் வேறு!

health

இதுபோல, பல சம்பவங்களை நாம் நேரில் கண்டிருப்போம், அல்லது கேட்டிருப்போம். இது எதனால்? சக மனிதனின் பாரத்தை ஏற்றிவிடக்கூட முடியாத உடல் வலி, தன் உடலைக்கொண்டு மாடிப்படி கூட ஏறமுடியாத மூட்டுவலி. இவற்றையெல்லாம், பலநாட்களாக அல்ல, பலஆண்டுகளாக, சகித்துக்கொண்டே நம்மில் பலர் வாழ்ந்து வருகிறோம். நாள்பட்ட வலிகளுக்கு சிகிச்சைகள் இல்லையா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேலை மருத்துவம்

மேலை மருத்துவம்

மேலை மருத்துவத்தில் அறுவை ஒன்றே தீர்வு, என்றாகிவிட்டது, மேலும் அதற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள், பக்கவிளைவுகளை ஏற்படுத்தி, வேறு பல பாதிப்புகளை உடலுக்கு கொடுத்துவிடுமோ என்ற காரணத்தினாலேயே, நம்மில் பலர், நீண்ட நாள் வலியுடனே, வாழ்க்கையைக் கழிக்கிறோம்.

நாம் மட்டுமென்றில்லை, அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களும் வலியுடனே வாழ்கிறார்கள். அதிகவலி வரும்போது, மெடிக்கலில் வலிமாத்திரைகள் அல்லது ஸ்பிரே வாங்கி, அந்த சமயத்தில் வலியை சமாளிக்கிறார்கள். வலிநிவாரணி மாத்திரைகள், உடலுக்கு தீங்குதரும் என்று, அதை அதிகம் அவர்கள் உபயோகிப்பதில்லை.

எதனால் வருகிறது வலி?

எதனால் வருகிறது வலி?

நம் உடலில் ஓடும் இரத்த நாளங்கள், இரத்த ஓட்டத்தை மட்டும் உடல் உறுப்புகளுக்கு அளிப்பதில்லை, அத்துடன், உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் உள்ள நன்மைகள், பாதிப்புகள் போன்றவற்றையும் மூளைக்கு தெரிவிக்கும், சக்திமிக்க நாளங்களையும் கொண்டுள்ளன. காலில் அடிபட்டால், உடனே இரத்தம் வருகிறதோ இல்லையோ, தகவல் மின்னல்வேகத்தில் மூளைக்கு சென்று, அங்கிருந்து, அதற்கு தீர்வுகள் நொடிப்பொழுதில், அடிபட்ட இடத்திற்கு வந்துவிடும். சாதாரணமாக கால் பிசகுவது, தசைப்பிடிப்பு போன்ற வலிகள், சற்றுநேரத்தில் தீர்வதற்கு, உடலின் இயல்பான வலி நிவாரணத்தன்மைகளே, காரணமாகும்.

காயங்கள்

காயங்கள்

இரத்தம் வருமளவுக்கு காயம் எனில், இரத்தத்தை உறையவைத்து, அடிபட்ட இடத்தில் வலியை, அதிகரிக்கும். இதற்கு காரணம், இந்த காயத்தை உடலால், தானே தீர்க்க முடியாது, வைத்தியம் பார்க்கவேண்டும், உடனே, மருத்துவமனைக்கு செல் என்று வலியுறுத்தவே, அடிபட்ட இடத்தில், வலியை கடுமையாக்கும்.

இதுவே, உடலில் வலி தோன்றக்காரணம். உடலில் நாள்பட்ட வலிகள் பொறுக்கும் அளவுக்கு இருப்பதற்கும், மூளையின் செயல்களே, காரணமாகின்றன. ஆயினும், நாள்பட்ட வலிகளே, பிற்காலத்தில் வேறுபல கடுமையான உடல்நல பாதிப்புகளுக்கு, காரணமாகின்றன, என்று தற்கால மருத்துவம் கூறுகிறது.

இதனால், பலரும் மாற்றுவழி தேடி, பக்கவிளைவுகள் இல்லாத மூலிகைகள் மூலம், நாள்பட்ட உடல் வலிகளுக்கு தீர்வுகாண விரும்புகின்றனர்.

அன்னாசிப்பழத் தண்டுகள்.

அன்னாசிப்பழத் தண்டுகள்.

அன்னாசிப்பழ செடிகளின் தண்டுகளில் உள்ள ப்ரோமிலைன் எனும் என்சைம், உடல் வலிகளைக் குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உடலின் தசைவலி, ஆர்த்ரைடிஸ் வலிகளைப் போக்குகிறது. தசைகள் மற்றும் தசைநார் பாதிப்புகளை சரிசெய்கிறது.

கொரிடாலிஸ் செடிகள்.

கொரிடாலிஸ் செடிகள்.

இமயமலைத்தொடர்களிலும், சீனத்திலும் பரந்து விரிந்திருக்கும் ஒரு செடிவகைதான், கொரிடாலிஸ். சீனமருத்துவத்தில், நூற்றாண்டுகளுக்கும் மேலாக, வலி நிவாரணத்தில், தலைவலி, உடல்வலிக்கு தீர்வளிக்கும் மருந்தாக பயன்பட்டுவருகிறது.

கொரிடாலிஸ் கிழங்குகளை, அரைத்து வேகவைத்து, வினிகரில் இட்டு எடுக்கும், அதன்சாறு, உடல்வலி தீர்வில் பயனாகிறது. இதன் முக்கியபொருளான டிஹைட்ரோகோரிபல்பின் (DHCB), உடலில் வலியை உணர்த்தும் டோபமைன் சுரப்பை கட்டுப்படுத்தி, வலியைப் போக்குகிறது.

மிளகாய் கேப்சாய்சின்

மிளகாய் கேப்சாய்சின்

சமையலில் இடம்பெறும் மிளகாயில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு மூலப்பொருள், கேப்சாய்சின். மிளகாய் நம் உடலில் எங்கு பட்டாலும், அந்த இடத்தில் எரிச்சல் தோன்றும். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல, உடலுக்கு எரிச்சல் தரும் அதன் தன்மையே, உடல்வலியைப் போக்கும் மருந்தாகிறது.

உடலில் வலியுள்ள இடங்களில் கேப்சாய்சின் சிரீமைத் தடவும்போது, அது உடல் வலியைத் தடுக்கும் உடலின் இயற்கை நிவாரணியான எண்டார்பின் சுரப்பிகளைத் தூண்டி, வலியைக்குறைக்கிறது. கேப்சாய்சின் மருந்தின் எரிச்சலை சற்றுநேரம், பொறுத்திருந்தால், நெடுநாள் வலியை, விரைவில் போக்கிவிடமுடியும்.

கேப்சாய்சின் தோலில் ஓட்டும் பிளாஸ்டர்களாக, மூக்கில் விடும் சொட்டுமருந்தாக, சுளுக்கு, தோள்பட்டைவலி, ஆர்த்ரைடிஸ்வலி, தசைவலி போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் மருந்தாகிறது.

நரம்புக்கோளாறு, சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களால் ஏற்படும் அரிப்பைத்தடுக்கும் மருந்தாகவும், பயன்படுகிறது.

உடலின் அதிக எடைக்கோளாறு, இரத்த சர்க்கரைபாதிப்பு மற்றும் இதய நோய்களைத் தடுப்பதில், கேப்சாய்சின் மருந்து பயன்படுவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன, அது தொடர்பான ஆராய்ச்சிகளும் தொடர்கின்றன.

ஆஸ்பிரின் எனும் வெள்ளை வில்லோ பட்டைகள்.

ஆஸ்பிரின் எனும் வெள்ளை வில்லோ பட்டைகள்.

உடல்வலி, கைகால் சுளுக்கு என்றால் முதலில் போடுவது ஆஸ்பிரின் மாத்திரைகள் என்று பலரும் பழகியிருக்கிறார்கள். அந்த ஆஸ்பிரின் வில்லோ மரப்பட்டைகளில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது என்பதும், அதற்குமுன், வில்லோ மரப்பட்டைகளே, மேலைநாடுகளில் வலி நிவாரணத்தில், மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதையும், நாம் அறிவோமா!

வில்லோ மரப்பட்டையில் உள்ள அசிட்டில் சாலிசிலிக் வேதிப்பொருளே, வலிகளைப் போக்கும் தன்மைகளுக்குக்காரணமாகிறது.

வில்லோ மரப்பட்டை தேநீர்

வில்லோ மரப்பட்டை தேநீர்

வில்லோ மரப்பட்டைகளை நீரில் கொதிக்கவைத்து, அந்தநீரைப்பருகிவர, இரத்தத்தை இளக்கி, இதய பாதிப்புகளை தடுக்கும். பெண்களின் மாதவிலக்கு கடந்தபின் ஏற்படும் தசைப்பிடிப்புகளை சரியாக்கும் ஆற்றல்மிக்கது. முதுகுவலி, வாதவலிகளைப் போக்கும்.

முகத்தில் ஏற்படும் முகப்பருவை குறைக்கும், தன்மைமிக்கது. ஆஸ்பிரின் மாத்திரையில் அலர்ஜி உள்ளவர்கள், வில்லோ மரப்பட்டை தேநீரைப்பருகி பலன்பெறலாம். ஆயினும், அடிக்கடி சாப்பிடுவதைத்தவிர்ப்பது, நன்மை தரும்.

போஸ்வில்லியா ரெசின் எனும் வாசனைக் குங்கிலியம்.

போஸ்வில்லியா ரெசின் எனும் வாசனைக் குங்கிலியம்.

வாசனை மரமான போஸ்வில்லியா மரத்தின் ரெசின் எனும் பிசின்கள், பல நூற்றாண்டுகளாக, வலி நிவாரணத்தில், சிறப்பாகப் பயன்படுகின்றன. பிசின், உடலின் நோயெதிர்ப்பு சக்தி பாதிப்பால் வரும் முடக்குவாத வலியைப் போக்குவதில், பயன்படுகின்றன.

போஸ்வில்லியா மரத்திலிருந்து எடுக்கப்படும் அடர்த்திகுறைந்த வாசனை எண்ணை, உடல் தோலில் ஏற்படும் காயம், வலி போன்றவற்றிக்கு மருந்தாகிறது.

மனச்சோர்வில் தவிப்பவர்கள், வாசனை மிகுந்த இதன் புகையை சுவாசிக்க, மனச்சோர்வில் இருந்து விடுபடுவார்கள்.

டெவில்ஸ் கிலா செடி.

டெவில்ஸ் கிலா செடி.

ஆப்பிரிக்க தேசங்களில் பரவலாகக் காணப்படும் களைச்செடியான டெவில்'ஸ் கிலாவின் வேர்க்கிழங்குகள், உடல் வலிகளைப் போக்குவதில், பயன்படுகின்றன.

வேர்க்கிழங்குகளை, நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி பருகிவர, நாட்பட்ட தசைவலிகள், ஆர்த்தரைடிஸ் மூட்டுவலிகள் குணமாகும்.

நாட்பட்ட வலிகளுடன் வாழ்வது மனச்சோர்வை மட்டுமல்ல, உடல்நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதைப் போக்க மூலிகைகளை தீர்வாக்கும்போது, நாம் மாத்திரைகள் அல்லது மருந்துகளை வேறு காரணங்களுக்காக உட்கொள்கிறோமா, என்பதையும் கவனிக்க வேண்டும், ஒரே நிலையிலுள்ள மேலைமருந்தும், மூலிகையும் உடலில் சேரும்போது, அதனால் மோசமான விளைவுகள் ஏற்படலாம்.

கவனமாக மூலிகைகளை, கால இடைவெளிவிட்டு உபயோகிப்பதன் மூலம், நல்ல பலன்களை நிரந்தரமாகப் பெறமுடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

natural herbs for pain relief

Many herbs and spices can treat inflammation and other related conditions
Story first published: Wednesday, May 23, 2018, 18:45 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more