For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி ஸ்கின் அழற்சி வந்தா இந்த காட்டு வெங்காய சாறை தேய்ங்க... உடனே சரியாகிடும்...

Urgenia Indica எனும் தாவரவியல் பெயர்கொண்ட காட்டு வெங்காயம், ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் காடுகளில் காணப்படும், அரிய தாவர இனமாகும்.

By Gnaana
|

பெரியவர்கள் சொன்ன எளிய விஷயங்களை நாம் புரிந்துகொள்ளாமல், அவற்றைக் கிண்டல் செய்வதால், இழப்பு யாருக்கு?.

health

வாழ்ந்து மறைந்தவர்கள் சொன்னதைக் கேலி செய்வதால், முன்னோருக்கு என்ன இழப்பு இருக்கப்போகிறது? வெங்காயச் சருகை எவ்வளவு உரித்தாலும், கடைசிவரை ஒன்றும் கிடைக்காது. உரிக்க உரிக்க ஒன்றுமில்லை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெங்காயம் இட்ட உணவில், சந்தேகமில்லை!

வெங்காயம் இட்ட உணவில், சந்தேகமில்லை!

இதுபோன்ற, பழமொழிகள், நம் முன்னோரின் அறிவு வளத்தை மட்டுமல்ல, அவர்கள் கடைபிடித்த எளிய வாழ்க்கைத் தத்துவத்தையும் நமக்கு உணர்த்தும் தன்மையுள்ளதாக இருப்பதை, நாம் அறிய முடியும்.

தோற்றத்தில் எளிமையாக இருப்பவர்களை, ஒன்றுமில்லாதவர்கள் என்று ஒதுக்கி, நாம் அலட்சியம் செய்பவர்களிடம்தான், நாம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கும், அதுபோல, அட, வெங்காயம் தானே! என்று அலட்சியம் செய்தால், இழப்பு நமக்குதானே தவிர, வெங்காயத்துக்கில்லை!

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம்

ஆயிரம் கைகளை வைத்து மறைத்தாலும், சூரிய ஒளி மறையாததுபோல, சிலர் வெங்காயத்தை அலட்சியப்படுத்தினாலும், அதனால் வெங்காயத்தின் மதிப்பு, குறைவதில்லை! ஒன்றிரண்டு சின்ன வெங்காயத்தை மேல் தோலை உறித்து, அதை மென்று சாப்பிட, இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். உடல் உறுப்புகளின் இயக்கம் சீராகும். இரத்த ஓட்டம் சீராகி, உடல் நலமாகும்.

இதுபோல, அநேக நன்மைகள் நிறைந்த வெங்காயக் குடும்பத்தில், பெரிய வெங்காயம் என்ற மற்றொரு வகை இருந்தாலும், வேறு ஒரு வகையும் உண்டு என்பதும், அது காடுகளில் மட்டும் அரிதாகக் கிடைக்கும் என்பதும், நம்மில் பலருக்கும் அறியாத ஒன்றாகவே இருந்திருக்கும்.

காட்டு வெங்காயம் அல்லது விரல் கலாங்கிழங்கு.

காட்டு வெங்காயம்

காட்டு வெங்காயம்

Urgenia Indica எனும் தாவரவியல் பெயர்கொண்ட காட்டு வெங்காயம், ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் காடுகளில் காணப்படும், அரிய தாவர இனமாகும்.

பசுமை நிற வெங்காயத் தாள்கள் எனும் மடல்களைப் போன்ற இலைகளைக் கொண்ட காட்டு வெங்காயச் செடிகள், வெண்ணிற மலர்கள் மற்றும் விதைகளுடன் காணப்படும். இந்த செடிகளின் வேர்க்கிழங்கையே, காட்டு வெங்காயம் என்கிறார்கள்.

விளையுமிடங்கள்

விளையுமிடங்கள்

தமிழகத்தில், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளான நாமக்கல், சேலம் மற்றும் ஹோசூர் தர்மபுரி பகுதிகளின் மலைகள் மற்றும் அங்குள்ள பயன்படா நிலப்பகுதிகளில், தானே வளரும் தன்மைகொண்டது, காட்டு வெங்காயச் செடிகள்.

அரிதான இந்த காட்டு வெங்காயம், தோற்றத்தில் சிறிய வெங்காயம் போலவே காணப்பட்டாலும், தன்மையில் வேறுபட்டது, இதன் வீரியமிக்க நச்சு வேதித்தன்மைகள் காரணமாக, கைகளில் கொஞ்ச நேரம் வைத்திருந்தாலே, அரிக்கும் தன்மைமிக்கது.

சித்த மருத்துவம்

சித்த மருத்துவம்

காட்டு வெங்காயம், நமது பழமையான மூலிகை சித்த மருத்துவத்திலும், வடநாட்டு ஆயுர்வேத மருத்துவத்திலும் பல வியாதிகளைத் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது. மேலை மருத்துவத்திலும், காட்டு வெங்காயத்தின் வேதித்தன்மைகள், நோய் தீர்க்கும் ஆயின்மென்ட், மாத்திரை மருந்தாகப் பயன்படுகின்றன.

காட்டு ஈருள்ளி மற்றும் நரி வெங்காயம் என்ற வேறு பெயர்களும், காட்டு வெங்காயத்துக்கு உண்டு.

காட்டு வெங்காயப் பயன்கள்.

இதய பாதிப்புகள், சுவாசக் கோளாறுகள்

இதய பாதிப்புகள், சுவாசக் கோளாறுகள்

சுவாச பாதிப்புகள் வந்தால், சுவாசக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, தவிப்பார்கள். சளி நெஞ்சில் சேர்வதாலும், மூச்சு விடுவதில் பாதிப்பு ஏற்படும். இதனால், இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, இதயக்கோளாறுகள் ஏற்படக்கூடும்.

சளி மற்றும் இளைப்பு போன்ற சுவாச பாதிப்புகளை அகற்ற, காட்டு வெங்காயம், சிறந்த நிவாரணமாக விளங்குகிறது.

காட்டு வெங்காய எக்ஸ்பெக்டாரன்ட் டானிக், இதய பாதிப்புகளைக் குணப்படுத்தும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. இதை சிறிதளவே பருகிவர, பாதிப்புகள் நீங்கிவிடும்.

காட்டு வெங்காயத்தை வெயிலில் நன்கு காய வைத்து, அதை இடித்து தூளாக்கி, அந்தத் தூளை மிகச் சிறிதளவு சாப்பிட்டு வர, சுவாச பாதிப்புகள் குணமாகி, மூச்சு விடுவதில் இருந்த சிரமங்கள் மற்றும் சளி பாதிப்புகள் நீங்கிவிடும்.

விஷக்கடி

விஷக்கடி

முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் எனும் பழஞ்சொல்லுக்கேற்ப, விஷத்தை விஷத்தால் முறிக்க உதவும் மூலிகை, காட்டு வெங்காயம். வீரியமிக்க நச்சுத்தன்மை கொண்ட காட்டு வெங்காயத்தின் சாறு, விஷ ஜந்துக்களின் விஷத்தை முறிக்கும் ஆற்றல் மிக்கது.

சரும பாதிப்புகள்

சரும பாதிப்புகள்

சிலருக்கு உடலில் பித்தம் எனும் சூடு அதிகரிப்பதால், தோலில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற சரும பாதிப்புகள் ஏற்படும்..

காட்டு வெங்காயத்தின் சாறு கலந்த கலவை மருந்து, உடலின் சூட்டு எரிச்சலை குணப்படுத்தும். உடல் எரிச்சல் மற்றும் வீக்கம் போன்ற பாதிப்பு உள்ள இடங்களில் மருந்தைத் தடவி வர, பாதிப்புகள் மறையும். உடல் சூட்டால் ஏற்படும் பைல்ஸ் எனும் மூல நோய்களுக்கும் மருந்தாகிறது.

கால் ஆணி

கால் ஆணி

கால்களில் சிறிய வெள்ளை வடுக்களாக இருக்கும் கால் ஆணிகள், நடக்கும் போது, சில நேரங்களில் அந்த இடத்தை ஊன்றுவதால், சுரீரென்ற வலி ஏற்படும். சர்க்கரை பாதிப்புள்ள சிலருக்கு கால் ஆணியுள்ள இடங்களில் புண்கள் ஏற்படலாம்.

கால்களை தேய்த்துக்கொண்டே நடப்பது போன்ற பாதிப்பு தரும் முறைகளில் நடப்பதாலும், கால்களை முறையாகப் பராமரிக்காமல் இருப்பதாலும், கால்களை நெடுநேரம் நீரில் வைத்திருக்க நேர்ந்தாலும், சரியான அளவுகளுள்ள காலணிகள் அணியாததாலும், கால் ஆணிகள், ஏற்படுகின்றன. அசுத்தமான இடங்களில் வெறுங்காலுடன் நடப்பதாலும், கால் ஆணிகள் ஏற்படுகின்றன.

ஹீல்ஸ் அதிகமுள்ள குதிகால் உயர்ந்த காலணிகள் அணிந்தாலும், காலில் ஆணி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கால் ஆணியைப் போக்க, காட்டு வெங்காயத்தை தீயில் வாட்டி, கால் பொறுக்கும் சூட்டில், கால் ஆணியுள்ள இடத்தில் அழுத்தித் தேய்த்து வரவேண்டும். இதுபோல, சில தடவைகள் செய்துவந்தாலே, கால் ஆணிகள் மறைந்து, நடப்பதில் ஏற்பட்ட சிரமங்கள் விலகி விடும்..

மாதவிடாய் வலி

மாதவிடாய் வலி

சில பெண்களுக்கு மாதவிலக்கின் சமயத்தில், அளவுகடந்த வயிற்றுவலி ஏற்பட்டு, வலியால் துடித்துவிடுவார்கள். காட்டு வெங்காயத்தை நீரில் சுண்டக் காய்ச்சி, நான்கில் ஒரு பங்கு ஆனபின் அந்தத் தீநீரை வடிகட்டி, அதில் 20 முதல் 30 மிலியை மட்டும் பருகிவர, பெண்களின் வயிற்றுவலி படிப்படியாக குணமாகிவிடும்.

குடல் புழுக்கள்

குடல் புழுக்கள்

பெண்களின் பாதிப்புகளை குணமாக்கிய தீநீரே, குடலில் புழுக்கள் இருப்பதால் ஏற்படும் பசியின்மை, செரிமான பாதிப்புகள், உடல் வெளுத்தல் போன்ற பாதிப்புகளை சரிசெய்து, குடல் புழுக்களை அழிக்கும் ஆற்றல்மிக்கது. .

புற்றுநோய்

புற்றுநோய்

காட்டு வெங்காயத்தில் இருக்கும் அபரிமித வேதிச்சத்துக்கள், புற்றுநோயை எதிர்க்கும் ஆயுர்வேத மூலிகை மருந்துகளில் சேர்க்கப்பட்டு, பயன் தருகிறது. கிருமிகளைப் பரப்பும் விஷக்கொசுக்களைக் கொல்லும்.

காட்டு வெங்காயத்தின் வேதிச்சத்துக்கள், நச்சுத்தன்மை மிக்க பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மிக்கவை.

காட்டு வெங்காயத்தை நீரில் நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை கொசுகள் அடைந்திருக்கும் இடங்கள் மற்றும் வீட்டின் உட்பகுதிகளில் ஸ்பிரே செய்துவர, கொசுக்கள் அழிந்துவிடும்.

கழிவறை மற்றும் கிருமிகள் பரவும் இடங்களில், காட்டு வெங்காய நீரைத் தெளித்து வர, தொற்றுநோய்களைப் பரப்பும் கிருமிகள் அழிந்து, சுகாதாரம் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

health benefits of Indian Squill Sea Onion

Squill is a cardiotonic similar to digitalis. It also has been used in hair tonics to treat seborrhea and dandruff, as a cancer remedy, and as a rodenticide.
Story first published: Friday, June 15, 2018, 14:33 [IST]
Desktop Bottom Promotion