இந்த குளத்தில் குளித்து வந்தால் ஆண்மை பெருகுமாம்...! அட, இது எங்க?

Posted By: Gnana
Subscribe to Boldsky

பல ஆண்டுகளுக்கு முன்னர், நம்தேசத்தின் உயிர்நாடியாக, கிராமங்கள் திகழ்ந்தன. நகரங்களில், தொழில், அலுவல்ரீதியாக உள்ளவர்கள் மட்டுமே, வசித்துவந்தார்கள்.

நகரங்களில் மக்கள் வசித்தாலும், அவர்களின் வேர் கிராமங்களிலேயே இருந்தது, நவீனமயமான தற்காலத்தில், கிராமங்கள், அவற்றின் தன்மைகளை இழப்பதன் விளைவுகளால், கிராமங்களின் இயற்கை எழில்கொஞ்சும் வயல்கள், தோட்டங்கள், குளங்கள், வாய்க்கால்கள் போன்றவை பொலிவிழந்து வருகின்றன.

முற்காலத்தில், நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் காத்ததில், கிராமங்களில் உள்ள குளங்களுக்கு பெரும்பங்குண்டு, மழைநீரை சேமிக்கும் தொட்டிகளாக, குளங்கள் விளங்கின.

மிகையாக வரும் ஆற்றுநீரும் குளத்தில் சேர, வழி இருந்தது. வற்றாத நீர்நிலைகளால், பருவமழை தவறாமல் பொழிந்து, மண்வளம், விவசாயம் செழிப்பாக இருந்தன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனிதர்களின் உடல் ஆரோக்கியம் காக்கும் குளங்கள்

மனிதர்களின் உடல் ஆரோக்கியம் காக்கும் குளங்கள்

குளங்கள் நிலத்தடி நீர்மட்ட உயர்வில் மட்டும் பங்கு வகிக்கவில்லை, அவை கிராமங்களில் உள்ள மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், அவர்களின் மனநிலைகளை சீராக்குவதிலும் பெரும்பங்கு வகித்தன. முன்னோர்கள், குளத்துநீரில் குளிப்பதன் நன்மைகளுக்காகவே, எல்லா கோவில்களிலும், குளங்களை ஏற்படுத்தி, அந்த குளங்களில் குளிக்க, வியாதிகள் தீரும் மனநலம் வலுவாகும், குழந்தைப்பேறு உண்டாகும் என்று குளத்தில் நீராடுவதன் பலன்களை, மக்களுக்கு அறிவுறுத்தி வைத்தனர். மகாகவி பாரதியார், தீமைகளை விலக்கி, வாழ்நாளில் இனி, நன்மைகளை செய்யவேண்டும் எனும் சபதம் மேற்கொள்ளவே, மகாமகம் போன்ற தீர்த்த யாத்திரைகள் யாவும் என்கிறார்.

குளத்து நீரில் நீராடுவதால் என்ன நன்மை?

குளத்து நீரில் நீராடுவதால் என்ன நன்மை?

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் எனும் பழந்தமிழ்சொல் போல, குளங்கள் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் எனும் வழக்கும், முற்காலங்களில் இருந்திருக்கவேண்டும் என்பதுபோல, குளங்கள் இல்லாத ஊரைக் காணமுடியாத நிலை, நம் தமிழகத்தில் முன்னர் இருந்தது.

ஆறுகள் பாயும் இடங்களில் உள்ள நிலங்களை வலுப்படுத்தினாலும், அவை மழைக்காலங்களில் பெருவெள்ளமாகப் பாய்ந்து, நிலங்களையும் பயிர்களையும் பாதிக்காமல் காக்கவே, ஆறுகள் பாயும் இடங்களில், கிராமங்களில் ஆங்காங்கே, குளங்களை, ஏரிகளை வெட்டி வைத்தனர். இதன் மூலம், உபரி நீர், வெள்ள நீர், மக்களை பாதிக்காமல், குளங்களில் சென்று சேரும் நிலை இருந்தது. ஆறுகள் இல்லாத இடங்களில், நிலத்தடி நீரும் மழைநீரும் சேர்ந்து நிரம்பும் வகையில், மக்களின் குளியலுக்காகவும், விலங்குகளின் தாகம் தீர்க்கவும், குளங்களை வெட்டி வைத்திருப்பர்.

இறைவழிபாட்டின் ஒரு அங்கமாக, குளத்தில் நீராடுவது, மக்களின் நம்பிக்கை சார்ந்த ஒன்றானது. விஷேச தினங்களில் குளங்களில் நீராடுவது, புனிதமாகக் கருதப்படுகிறது, கும்பகோணம் மகாமகக்குளத்தில், பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக தீர்த்தவாரியில் நீராடுவது, பாவங்களைப் போக்கி, உடல்நலனை, மனநலனை காக்கும் விழாவாக, இலட்சக்கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிறது.

உண்மையிலேயே, குளத்து நீரில் என்ன இருக்கிறது?

உண்மையிலேயே, குளத்து நீரில் என்ன இருக்கிறது?

குளத்துநீர், உடல் வியாதி எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. குளத்தில் உள்ள உயிரினங்கள், தாவரங்களின் வேர்கள் மற்றும் அவற்றின் உதிர்ந்த தழைகள், நீரில் கலந்திருப்பதால், உடலுக்கு நலம்தரும் தாதுக்கள் என்சைம்கள் மற்றும் வேதிச்சத்துக்கள், குளத்துநீரில் நிறைந்துள்ளன. வளமிக்க களிமண் நிலத்திலேயே, பெரும்பாலான குளங்கள் அமைந்திருக்கின்றன.

குளத்தில் தினமும் குளிப்பது, பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாகிறது. குளிர்ந்த குளத்துநீரில் குளித்துவருவதன் மூலம், உடல் சூடு குறைகிறது, மலச்சிக்கல் நீங்கி, இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தி அதிகரித்து, உடலில் வியாதி எதிர்ப்பு ஆற்றல் மேம்படுகிறது.

உடலுக்கு புத்துணர்ச்சியும், மனதுக்கு உற்சாகமும் தரும் குளத்து நீர் குளியல்!

உடலுக்கு புத்துணர்ச்சியும், மனதுக்கு உற்சாகமும் தரும் குளத்து நீர் குளியல்!

என்டார்பின் எனும் உடலில் உள்ள அமினோ அமிலமே, மகிழ்ச்சி, திருப்தி, நிம்மதி போன்ற நல்ல மனநிலை எண்ணங்களை உண்டாக்குவதாகும். குளிர்ச்சியான நீர் நிரம்பிய குளத்தில் குளிப்பதன் மூலம், மனஅழுத்தம், மனஇறுக்கம் போன்றவை விலகி, உடல் செல்களில் என்டார்பின் அதிக அளவில் தானே சுரந்து, மனதை உற்சாகமடைய வைக்கிறது என்கின்றன, குளியல் தொடர்பான ஆய்வுகள்.

மனஅழுத்தம் போக்கும் குளத்து நீர் குளியல்!

மனஅழுத்தம் போக்கும் குளத்து நீர் குளியல்!

குளக்கரைகளில் உள்ள மரங்கள் மற்றும் சுவர்களின் மேலிருந்து, குளத்துநீரில் பாய்ந்து, நீந்திக் குளிக்கும்போது, உடலில் இரத்த ஓட்டம் சீராகிறது என்கின்றன, ஆய்வுகள்.

குளங்கள் போன்ற பொதுநீர்நிலைகளில் இளவயது முதல் குளித்துவரும் சிறுவர் சிறுமியர், பிற்காலத்தில் மனஅழுத்தம், மனவேதனை போன்ற பிரச்னைகளால் அதிகம் பாதிப்படைவதில்லை என்கின்றனர் மனநல ஆய்வாளர்கள்.

உடல் வியாதிகளைப் போக்கும் குளத்துநீர்!

உடல் வியாதிகளைப் போக்கும் குளத்துநீர்!

உடலில் தோன்றும் பல்வேறு வியாதிகளுக்கு, உடலில் சேர்ந்த வெப்பமே, காரணமாகிறது, குளிர்ச்சியான குளத்துநீரில் குளிப்பதன்மூலம், உடல் வெப்பம், சோர்வு விலகி, உடலும் மனமும் புத்துணர்வடைகின்றன. தினமும் இரண்டுவேளை குளங்களில் குளித்துவந்த மக்கள், வியாதிகளின்றி நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

ஆற்று குளியல், கிணற்று குளியல் மற்றும் கடல் குளியல் போன்றவைகளில், குளத்துநீரில் குளிப்பது, உடல்சூட்டைப்போக்கும் குளியலாகக் கருதப்படுகிறது. குளங்களில் உள்ள பாசிகள் மற்றும் தாமரை அல்லி போன்ற கொடிவகைகளின் தண்டுகள், குளத்துநீச்சலை தடுமாற வைத்தாலும், அவை உடலுக்கு நன்மைகள் தரவல்லவை. குளத்தில், நன்கு மூழ்கிக்குளிப்பது, சிறப்பாகும்.

குளத்தில் குளிப்பது, உடல் நலத்திற்கு சிறப்பானது ஏன்?

குளத்தில் குளிப்பது, உடல் நலத்திற்கு சிறப்பானது ஏன்?

குளங்களில் குளிப்பதால், உடலில் உள்ள வெப்பம், அசதி அகன்று உடல் புத்துணர்வாகிறது அத்துடன், வேறுபல நன்மைகளும் இருக்கின்றன.

குளத்தில் குளிப்பதால், உடல் மூட்டு வலிகள், கண் பார்வைக்குறைபாடு மன அழுத்தம் இதய பாதிப்புகள் போன்றவையும் தோலில் ஏற்படும் அரிப்பு, சொறி, சிரங்கு போன்ற சரும பாதிப்புகளும் விலகி விடுகின்றன.

குளங்களில் குளிப்பது, மலச்சிக்கலைப் போக்கி, உடலுக்கு புத்துணர்ச்சி தரும் ஒன்றாக அமைகிறது. சில குளங்களில், தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் குளித்துவர, பல உடல்வியாதிகள் விலகும் என்கின்றனர் பெரியோர்கள்.

சர்க்கரை பாதிப்புகள், மூட்டுவலிகள் போக்கும் நாவல்குளத்து குளியல்!

சர்க்கரை பாதிப்புகள், மூட்டுவலிகள் போக்கும் நாவல்குளத்து குளியல்!

நாவல் மரங்கள் சூழ்ந்த இடங்களில் உள்ள குளத்தில் தொடர்ந்து நீராடிவர, சர்க்கரை பாதிப்புகள் மற்றும் கால் மூட்டுவலி பாதிப்புகள் விலகி, உடல் நலமாகும்.

நெல்லி மரங்கள் நிறைந்த சோலையில் உள்ள குளத்தில் தினமும் குளித்துவர, கண் பார்வைக்குறைபாடுகள் நீங்கி, உடலும் மனமும் புத்துணர்வடையும். நெல்லிக்கனிகள், நெல்லிமரக்கிளைகள் விழுந்துகிடக்கும் குளத்து நீர், மனதுக்கு உற்சாகத்தையும், உடலுக்கு வலுவையும் தரக்கூடியது.

மற்றும் சில...

மற்றும் சில...

கீழாநெல்லிச்செடிகள், வல்லாரை, பொன்னாங்கன்னி கீரைகள் செழித்து வளரும் பகுதிகளில் உள்ள குளத்தில் குளித்துவர, கண்பார்வை கோளாறு, இதய இரத்த அழுத்த பாதிப்புகள் விலகும்.

குளக்கரைகளில் அரசமரங்கள் உள்ள குளத்தில் குளித்துவர, பெண்களின் குழந்தையின்மை பாதிப்புகள் அகன்று, குழந்தைப்பேறடைய வாய்ப்பாகும்.

ஆலமரத்தடியில் உள்ள குளத்தில் குளிக்க, ஆண்மை பாதிப்புகள் விலகி, மகப்பேறு வாய்ப்புகள் ஏற்படும்.

எலுமிச்சை மற்றும் அத்தி மரங்கள் சூழ்ந்த குளங்களில் குளிக்க, உடல் புத்துணர்வாகி, இரத்தம் தூய்மையாகி, இரத்த ஓட்டம் சீராகும்.

இவை யாவும் முன்னோர்களின் மூடநம்பிக்கைகள் அல்ல, இவை இன்றைய அறிவியல் ஒப்புக்கொள்ளும் உண்மைகள். நீரில் கரைந்த மரங்களின் இலைகள், வேர்கள்,பழங்கள்,காய்கள் போன்றவற்றினால், குளத்துநீரில் ஏற்படும் வேதிமாற்றம், மனிதர் உடல்நலத்திற்கு நலம் தருகிறது. குளக்கரை மரங்களின் தூயஆக்சிஜன் காற்றை சுவாசிப்பதன் மூலம், பெண்களின் கருவள பாதிப்புகள் அகன்று, மழலைப்பேறு அடைய வாய்ப்பு உண்டாகிறது.

குளங்கள் என்பது, நிலத்தடி நீரைக்காத்து, உடல் ஆரோக்கியத்தை, மன உற்சாகத்தை, உலகோருக்கு தங்கு தடையின்றி அளிக்கும் இயற்கை ஹாட்ஸ்பாட்!

என்ன ஹாட்ஸ்பாட்டை தேடுகிறீர்களா?!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bath in Different Types of Ponds And Its Health Benefits

Bath in Different Types of Ponds And Its Health Benefits
Story first published: Wednesday, February 21, 2018, 9:00 [IST]