For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிலோ லட்சம் மதிப்புள்ள கடவுள் மரம் பற்றி தெரியுமா உங்களுக்கு? அதன் மருத்துவ நன்மைகள்!!

அற்புத நன்மைகளைத் தரும் அரிய வகை மரங்களான அகர் மரத்தின் நன்மைகளை இந்த ஆயுர்வேத கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

By Gnaana
|

நமது தேசத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மரம், தற்போது அழிந்து வரும் மரங்களின் பட்டியலில் உள்ள மரம், மரங்களின் கடவுளாகக் கொண்டாடப்படுவது நீங்கள் அறிவீர்களா?

அகர் மரம். இதுவே மரங்களின் கடவுளாகவும், பசுமைத்தங்கம் எனவும் போற்றப்படுகிறது. சித்த மருத்துவத்தில் மற்றும் அரோமா எனும் வாசனை மருத்துவத்தில், உயரிய இடத்தில் உள்ள அகர் மரத்தின் மதிப்பு, உலகிலேயே, செயற்கை முறையில் தயாரிக்க இயலாத, அதன் இயல்பான வாசனைத் தன்மையால் வந்தது.

Reasons why Agar wood tree is called as God of the trees and its health benefits

Image source

தேவைகள் அதிகமுள்ள அகர் மரத்தின் வாசனை திரவியங்கள், தேவைகளின் பத்து சதவீத அளவே ஆகும் குறைந்த உற்பத்தியால், விலை அதிகரித்து, அகர் மரக் கட்டைகளில் இருந்து சேகரிக்கப்படும் ஒரு லிட்டர் அகர் ஆயில், இன்று ஒரு இலட்சம் ரூபாய் வரையிலும், ஒரு கிலோ அகர் மரக்கட்டைகள் முப்பதாயிரம் ரூபாய் முதல் விற்பனையாகின்றன.

அகர் மரங்கள், ஓரளவு ஈரப்பதம் மிக்க இடங்களில் வளரக் கூடியவை, இந்தியாவில் அதிக மழைப்பொழிவை சந்திக்கும் மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாம் மாநிலத்தில் அதிக அளவில் அகர் மரங்கள் வளர்கின்றன. நம்முடைய அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் அகர் மரங்கள் வளர்கின்றன. நமது மாநிலத்தில் கோவை உள்ளிட்ட சில பகுதிகளிலேயே, அகர் மரங்கள் விளைய வாய்ப்புகள் உள்ளன. வறண்ட பகுதிகளில் இம்மரம் வளராது.

தற்போதைய ஒட்டுவகை மரக்கன்றுகளின் மூலம், முறையான பராமரிப்பில், ஏழு வருடங்களில், அகர் மரத்தின் மூலம், அகர் உற்பத்தி ஆரம்பமாகும்.

அகர் மரத்தின் பிசின்கள், மிக அதிக விலை மதிப்பு கொண்டவை. அவையே, வாசனை திரவியங்களாக சுத்திகரிக்கப்பட்டு, மேற்கத்திய நாடுகளில், வளைகுடா நாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

அரபு நாடுகளில், அகர் வாசனைக்கு சிறந்த இடம் உண்டு, வீடுகளில் நாம் சாம்பிராணி போடுவது போல, பெரிய அதிகாரிகள், பெரும் செல்வந்தர்கள் இவர்கள் வசிக்கும் இடங்களில், நிறுவனங்களில் முக்கியமான பேச்சுவார்த்தைகளின் போது, அகர் கட்டைகளைக் கொண்டு, புகை மூட்டம் போட்டு, அந்த இடங்களை அற்புத நறுமணத்தால் நிறைய வைப்பது, அங்கே, வழக்கமான ஒரு நிகழ்வாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிருமி நாசினி :

கிருமி நாசினி :

சித்த மருத்துவத்தில், அகர் மரப்பட்டைகள், சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகின்றன. அகர் மரக்கட்டைகளின் தூளை, மையாக அரைத்து, உடலில் தடவிவர, உடல் தளர்ச்சியை சரிசெய்து, உடலை வலுவாக்கும். அரோமாதெரபி எனும் வாசனை வைத்தியத்தில், அகர் முக்கிய இடம் வகிக்கிறது.

மன நலக் குறைபாடு :

மன நலக் குறைபாடு :

மன நலம் சார்ந்த குறைபாடுகளைப் போக்க, உடல் சோர்வு நீக்கி, உற்சாக மனநிலையை அடைய வைக்க, அகர் எண்ணைகள் வாசனை மருத்துவத்தில், மிக அதிக அளவில் பயன்படுகின்றன.

முகச்சுருக்கங்கள் மறையும் :

முகச்சுருக்கங்கள் மறையும் :

அகரை பக்குவம் செய்து சாப்பிடுவர, முதுமையில் ஏற்படும் உடல் மற்றும் முகச் சுருக்கங்களை குணப்படுத்தி, உடலை மென்மையாகவும், பொலிவாகவும், புத்துணர்வுடன் ஆக்கிவிடும். இது முறையாக, சித்த வைத்தியர் மூலம் மட்டுமே, மேற்கொள்ள வேண்டிய வைத்திய முறை ஆகையால், வைத்தியர்களிடம் செய்முறைகள் கேட்டு, அல்லது அவர்களிடம் செய்து வாங்கி, பயன்படுத்தி பலன்களை முழுமையாக அடையலாம்.

 கொழுப்பு குறையும் :

கொழுப்பு குறையும் :

அகர் கட்டைகளை பொடியாக்கி, பாலில் கலந்து அரைத்து, உடலில் தொடர்ந்து தடவி வர, உடல் சுருக்கங்கள், ஊளைச்சதை எனும் உடல் கொழுப்பு நீங்கி, உடல் இருகி, பொலிவுடன் திகழும். அகிலை பொடியாக்கி, உடலில் அடிபட்ட வீக்கங்கள் மீது வைத்து கட்டி வர, வீக்கங்கள் வடிந்து விடும்.

 சுவாசப் பாதிப்புகள் :

சுவாசப் பாதிப்புகள் :

அகர் தைலம் - அகர் மரக்கட்டைகளை, தூளாக்கி, தண்ணீரில் ஊற வைத்து, அதில் நல்லெண்ணை, பால், அதிமதுரம் மற்றும் தான்றிக்காய் சேர்த்து அரைத்து, அந்த நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் தைலப் பதத்தில் உண்டான எண்ணையை சேகரித்து, தலையில் தடவி வர, சுவாச பாதிப்பினால் உண்டாகும், மூக்கடைப்பு மற்றும் தலை பாரம் போன்றவை நீங்கி விடும்.

அகர் மரம் உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் புத்துணர்வு தரும், மிகவும் வேகமாகவும், உயரமாகவும் வளரும் தன்மையுள்ள அகர் மரம், குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகளில் இருந்து, பலன்களைத் தர வல்லது.

அத்தர் தயாரிக்க :

அத்தர் தயாரிக்க :

அகர் மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைகள், மிக அதிக மதிப்புள்ளது ஆகும். அகர் மரத்தை வியாதிகள் அணுகாமல் காக்கும் பூஞ்சைப் படர்தலில் இருந்து, மிக உயரிய வாசனையைத் தரும் அகர் ரெசின் எனும், கரு நிற பிசின் எடுக்கப்படுகிறது. அகர் பிசினும், அகர் ஆயிலும் சேர்த்தே, உலகில் தனி வித நறுமணமுள்ள அகர் அத்தர் எனும் விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

அதிக விலை மதிப்புள்ள இந்த அத்தர், மேலை நாடுகளிலும், அரபு தேசங்களிலும், மிக அதிக விலைக்கு விற்பனையாகின்றன. இந்த அத்தரை செயற்கை முறையில் தயாரிக்க முடியாது என்பதே, தேவைக்கு ஏற்ற உற்பத்தி இல்லாத இந்த அத்தர்களின் அதிக விலைக்கு, காரணமாகிறது.

மனநிலை ஒருமைப் படுத்த :

மனநிலை ஒருமைப் படுத்த :

அகர் மரக்கட்டைகள் மற்றும் அத்தர் மூலம் உருவாக்கப்படும் நறுமணப் புகை, தியானங்கள், யோகா போன்ற உடல் வளக் கலைகள் செய்யுமிடங்களில், மனதிற்கு அமைதியை அளித்து, மனதை ஒருநிலைப் படுத்துவதில், முக்கிய இடம் வகிக்கிறது. சர்வ சமய பிரார்த்தனைகளிலும் அகிற்புகை பயன்படுத்தப்படுவதே, அதன் தன்னிகரற்ற தனித்த தூய நறுமணத்திற்கு, சிறந்த சான்றாகும்.

வியாதிகளை தடுக்க :

வியாதிகளை தடுக்க :

விட்டில் பூச்சிகள் போல, அந்த கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, கைப்பொருளை இழக்கவேண்டாம். அகர் மரம் சீராக வளர, நல்ல மண் வளமும் மழை வளமும் மிக அவசியம் தேவை, மேலும், அதிக அளவில் பராமரிப்பு தேவைப்படும், முறையான இடைவிடாத செயல்பாடுகளில் மட்டுமே, அகர் மரத்தை வைரம் பாய்ந்த கட்டையாக, வியாதிகள் அணுகாத பூஞ்சை வளர்ச்சிகளை உண்டாக்க முடியும், கவனம் தேவை.

அகர் எண்ணெய் :

அகர் எண்ணெய் :

அகர் மரத்தின் கட்டைகளை நன்கு எரிக்கும்போது, அந்தப்புகையை நீரில் குளிர்வித்து உண்டாகும் எண்ணையே, அகர் ஆயில் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு லிட்டர் அளவில் அகர் ஆயில் செய்ய சுமார் நூற்றைம்பது கிலோ நல்ல தரமான அகர் மரக்கட்டைகள் தேவை. எனவேதான், பத்து மில்லி அளவுள்ள அகர் அத்தரின் விலை, பல நூறு டாலர்கள் விலை மதிப்பில், விற்பனை ஆகிறது.

ஷாம்புக்கள் தயாரிக்க :

ஷாம்புக்கள் தயாரிக்க :

அகர் ஆயிலில் இருந்து, விலை உயர்ந்த சோப்கள், வாசனை சாம்பிராணி, வாசனை பத்திகள், ஷாம்பூ, உடல் பூச்சு க்ரீம், முகப்பூச்சு பவுடர் மற்றும் வாசனை மருத்துவத்திற்கு எண்ணை செய்வதில் பயனாகின்றன.

அகர் மரங்கள் மூலம் கிடைக்கும் அளவுகடந்த வருமானத்தை விளம்பரமாக்கி, தமிழ்நாட்டிலும் அகர் மரக்கன்றுகளை வளர்த்து, குபேரன் போல பணம் சம்பாதித்து, வசதியுடன் வாழலாம் என்று மக்களை ஏமாற்ற பல கூட்டங்கள் சுற்றி வருகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons why Agar wood tree is called as God of the trees and its health benefits

Reasons that why Agar wood tree is called as God of the trees and its health benefits
Story first published: Saturday, October 14, 2017, 14:44 [IST]
Desktop Bottom Promotion