இனிப்புகளில் ஏன் பச்சைக்கற்பூரம் சேர்க்கப்படுகிறது தெரியுமா?

Posted By: Gnaana
Subscribe to Boldsky

இலவங்கப் பட்டை, வீடுகள் மற்றும் உணவகங்களில், காரசாரமான மசாலா உணவுகள் செய்யும் போது, தவறாமல் சேர்க்கும் ஒரு வாசனைப் பொருள். பச்சைக் கற்பூரம் என்ற தலைப்பிற்கும், இந்த இலவங்கப் பட்டைக்கும் என்ன சம்பந்தம், என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

இருக்கிறது, இவை இரண்டும் உணவுகளில் மற்றும் இனிப்புகளில் சேர்க்கப்படும் இருவேறு வகையான நறுமண சுவையூட்டிகள் மட்டுமல்ல, உணவுகளில் பூஞ்சைத் தொற்றை தடுக்கவும், இவை பயனாகின்றன.

Medicinal benefits of Cinnamomum camphora

இலவங்கமும், பச்சைக் கற்பூரமும், ஒரே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த வெவ்வேறு வகை மரங்களிலிருந்து, கிடைப்பவை ஆகும்.

ஆங்கிலத்தில் சின்னமான் கேம்போரா என அழைக்கப்படும் மரத்திலிருந்தே, நாம் கோவில் பிரசாதங்களில், வீடுகளில் செய்யப்படும் இனிப்புகளில் சேர்க்கும், பச்சைக் கற்பூரம் தயாரிக்கப்படுகிறது.

கற்பூர மரங்கள் சீனா, கம்போடியா, தைவான், ஜப்பான் போன்ற கீழை நாடுகளின் கடலோரங்களிலும், பின்னர் உலகெங்கும் பரவி, இன்று பரவலாக அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளிலும், இதன் மருத்துவ சிறப்புகளுக்காக, வளர்க்கப்படுகின்றன.

நன்கு உயர்ந்து வளரும் தன்மை கொண்ட கற்பூர மரங்கள், பூக்களையும் கனிகளையும் கொண்ட முழு வளர்ச்சி நிலையை அடைய, கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் வரை ஆகும் என்பதே, பச்சைக் கற்பூரத்தின் பயன்பாடுகள் குறைந்து, செயற்கை கற்பூரம், இன்று அனைத்து இடங்களிலும் ஆக்ரமிக்க, ஒரு காரணமாகும்.

கற்பூர மரம், என்றும் பசுமையான ஒரு மரமாகும், ஆண்டுகள் பல ஆனாலும், மரத்தின் பசுமைத் தன்மை மாறாது, என்பது இந்த மரத்தின் தனிச் சிறப்பாகும். கற்பூர மரத்தின் இலைகள் சற்றே பருமனான அமைப்பில், மெழுகுத் தன்மையுடன் காணப்படும், இந்த இலைகளை கசக்கி நுகர்ந்தால், அதில் கற்பூர மணத்தை அறியலாம்.

நமது தேசத்தில், இந்த மரத்தின் வெண்ணிற மலர்களுக்காகவும், அதன் சிவந்த நிற பழங்களுக்காகவும் தோட்டங்களில் மற்றும் வீடுகளில் அழகு மரமாக வளர்க்கப்பட்ட மரமே, பின்னர் கற்பூர மரம் என்று அழைக்கப் பட்டது.

கற்பூர மரத்தின் இலைகளும், மரப் பட்டைகளும் பச்சைக் கற்பூரம் தயாரிக்க பயன் படுகின்றன. பச்சைக் கற்பூரம் என்பது, அதன் தன்மையைக் குறிப்பதாகும், நாம் பச்சை அரிசி என்று அழைப்பது, நெல்லை காய வைத்து அரிசியாக்கி, உணவுக்கு பயன்படுத்துவது ஆகும்.

மாறாக, நெல்லை அவித்து எடுத்தால், அது புழுங்கல் அரிசி என்று அறிவோம் தானே, அதுபோல, கற்பூர மரத்திலிருந்து, எந்த வித கலப்பும் செய்யாமல், இயற்கையாக தயாரிக்கப் படுவதே, பச்சைக் கற்பூரம் என்று அழைக்கப் படுகிறது.

மேலும், சில மரங்களில் இருந்து எடுக்கப்படும் இயற்கை டர்பன்டைன் எண்ணைகள் மூலமும், பச்சைக் கற்பூரம் தயாரிக்கப்படுகிறது. கற்பூர எண்ணை என்று கற்பூர மரங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணை, பல்வேறு உடல் நலம் சார்ந்த மருந்துகள் தயாரிப்பிலும், குளிர் பானங்கள் மற்றும் ஐஸ்க்ரீம் தயாரிப்பில், பயன்படுத்தப் படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மூட்டு வலி :

மூட்டு வலி :

பச்சைக் கற்பூரம், சிறந்த வியாதி எதிர்ப்பு, வலி நிவாரணி, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினி ஆகும். மூச்சுப் பிடிப்பு, தசைப் பிடிப்பு போன்ற வலிகளுக்கு, பச்சைக் கற்பூரத்தை, தேங்காய் எண்ணையில் கலந்து, தடவி வர, பாதிப்புகள் ஏற்பட்ட இடத்தை ஊடுருவிச் சென்று, பச்சைக் கற்பூரம் தசைப் பிடிப்புகளை சரியாக்கி, வலிகளை போக்கும்.

பச்சைக் கற்பூரம், இருமல் சளி நிவாரண மருந்துகளில் பயன்படுகிறது. மூட்டு வலி, தலை வலி தைலங்களில் வலி நிவாரணத்திற்காகவும், மருந்தை உடலில் தடவிய இடங்களில் உள்ளிழுத்துக் கொண்டு, வலிகளைப் போக்கும் தன்மைக்காகவும், சேர்க்கப்படுகிறது.

அக்காலங்களில் இனிப்புகளை, சற்று நாட்கள் வைத்து சாப்பிடும் அளவில் அதிகமாகவே செய்வர், இதனால், அந்த இனிப்புகளில் பூஞ்சை உள்ளிட்ட தொற்றுகள் ஏற்படாமல் மனிதரைக் காக்கவே, பச்சைக் கற்பூரம் சேர்க்கப்பட்டது. மேலும் அதன் இயற்கையான நறுமணம், இனிப்புகளில் தனித் தன்மைமிக்க சுவையை அளித்து, இனிப்பின் சுவையைக் கூட்டியது.

சுவைமிக்க திருப்பதி லட்டு சாப்பிட்டவர்கள், பச்சைக் கற்பூரத்தின் மணத்தை அதில் கண்டிருப்பர். இது போல, பெருமாள் கோவில்களில் செய்யப்படும் அக்கார வடிசல் [சர்க்கரைப் பொங்கல் - தண்ணீருக்கு பதில் பாலை ஊற்றிச் செய்வது], இனிப்பில், அதன் அமிர்தம் போன்ற சுவைக்கு, அக்கார வடிசலில் சேர்த்த, பச்சைக் கற்பூரத்தின் நறுமணமும் ஒரு காரணமாக இருக்கலாம் அன்றோ. மேலும், பெருமாள் கோவில்களில் பிரசாதமாக வழங்கும் துளசி தீர்த்தத்திலும், பச்சைக்கற்பூரம் இடம் பெறுகிறது.

பச்சைக் கற்பூரம் குடிநீர்:

பச்சைக் கற்பூரம் குடிநீர்:

தற்காலங்களில், தட்ப வெப்ப நிலை மாறுபாடுகளால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும், சளி, ஜலதோஷம் உள்ளிட்ட சுவாச பாதிப்புகளால், அவ்வப்போது அவதிப் பட்டு வருவர். இந்த பாதிப்புகள் நீங்கி, உடல் நிலையை சரிசெய்ய, ஒரு அரு மருந்தாக விளங்குகிறது, இந்த பச்சைக் கற்பூர குடிநீர்.

 செம்பு பாத்திரம் :

செம்பு பாத்திரம் :

ஒரு செம்புப் பாத்திரத்தில் துளசி, ஏலக்காய் மற்றும் பச்சைக் கற்பூரம் சேர்த்து, இரவில் மூடி வைத்து விட்டு, காலையில் அந்த நீரைப் பருகி வர, சளி பாதிப்புகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு ஒரு புத்துணர்வை அளித்து, உற்சாகத்தையும் அளிக்கும். வீடுகளில் செம்புப் பாத்திரங்கள் இல்லா விட்டால், மண் பானைகளில் இந்த மூலிகை நீரை தயாரிப்பது, சிறப்பாகும்.

இது போலவே, அக்காலத்தில் சமையலில் கார வகை உணவுகளிலும் மணம் கூட்ட, பச்சைக் கற்பூரம் பயன் பட்டது. தற்காலங்களில், ஜூஸ், ஐஸ்க்ரீம், பேக் செய்யப்படும் இனிப்பு வகைகள் மற்றும் குளிர் பானங்களிலும், பச்சைக் கற்பூரம் சேர்க்கப்படுகின்றன.

ஜலதோஷம் :

ஜலதோஷம் :

பச்சைக் கற்பூரம், சித்த மருத்துவத்தில், இருமல் சளி, போன்ற சுவாச பாதிப்புகளுக்கும், சரும வியாதிகளுக்கும் தயாரிக்கும் மருந்தில், துணைப் பொருளாகவும், வயிற்றின் பூச்சிகளை அழித்து, குழந்தைகளை பசியெடுத்து சாப்பிட வைக்கும் வயிறு சம்பந்தமான மருந்துகளிலு, பயன்படுகிறது.

சாம்பல் இல்லாமல் முற்றிலும் காற்றில் எரிந்து கரைவதே, பச்சைக் கற்பூரத்தின் சிறப்பாக, சமய சடங்குகளில் அதிக அளவில் பயன் தருகிறது. கருவறை எனும் தெய்வ சன்னதிகளில் வீசும் சுகந்த நறுமணத்திற்கு, இந்த பச்சைக் கற்பூரமும் ஒரு பங்களிப்பாக, திகழ்கிறது.

மணமூட்டி :

மணமூட்டி :

இந்தியர்கள் மட்டுமல்லாமல், அரபு தேசத்தவர் மற்றும் ஐரோப்பியரும் பண்டைக் காலங்களில் பச்சைக் கற்பூரத்தை அவர்களின் தனித் தன்மைமிக்க உணவு, பழ ரசங்கள், ஜூஸ், கேக் போன்ற இனிப்பு வகைகளில் இயற்கை மணமூட்டியாக, பயன்படுத்தி வந்தனர். அக்காலத்தில், மன நலம் சார்ந்த பாதிப்புகளுக்கு, சிறந்த நிவாரணியாக மேலை மருத்துவர்களால், பச்சைக் கற்பூரம் பயன்படுத்தப்பட்டன.

தற்காலங்களில், பச்சைக் கற்பூரம் உற்பத்தி குறைவால், வேறு மரங்களில் இருந்து கிடைக்கும் டர்பன்டைனில் இருந்தும், பெட்ரோலிய கழிவுகளிலிருந்து கிடைக்கும் டர்பன்டைன் எனும் எண்ணையிலிருந்தும், செயற்கை கற்பூரம் தயாரிக்கப்படுகிறது. இதுவே, வழிபாட்டுத் தலங்கள் எங்கும் தற்காலம் அதிக அளவில் மக்களால் ஏற்றப்பட்டு, எங்கும் கரிப்புகை படிய காரணமாகிறது. அதோடு மட்டுமல்லாமல், காற்றும் மாசு படுகிறது.

மேலும், செயற்கை கற்பூரத்துடன் பூச்சிகளை விரட்டும் நாப்தா உருண்டை, மற்றும் டாய்லெட் சுத்தம் செய்யும் திரவம் போன்றவையும் உருவாகின்றன.

தற்காலத்தில் அதிகமாக உபயோகிக்கும் செயற்கை கற்பூரத்தை விடுத்து, பச்சை கற்பூரத்தை வழிபாடுகளில் பயன்படுத்தி, சுற்றுச் சூழலை பாதிக்கும், காற்று மாசு படுதலை போக்குவோம்! காற்றை தூய்மை செய்வோம்!

தேவை எனில், அகல் விளக்கேற்றி, பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். இனி வரும் காலத்தில், வசிக்கப்போகும் நம் வருங்கால சந்ததியினரும், தங்கள் வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை நிறைவேற்ற, அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் அல்லவா, அதனால்!

புகை நச்சு இல்லாத காற்றே, நல்ல காற்று!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Medicinal benefits of Cinnamomum camphora

Medicinal benefits of Cinnamomum camphora
Story first published: Saturday, September 30, 2017, 14:00 [IST]