இதயப் படபடப்பு மற்றும் இரத்த அழுத்த வியாதிகள் போக்கும் அற்புத மூலிகைகள்!

Written By: Gnaana
Subscribe to Boldsky

கண்ணுக்கு நேரே ஏதேனும் அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவங்களோ அல்லது பண நெருக்கடி காரணமாக அதிக மன உளைச்சலில் இருந்தாலோ, நமது இதயம் அதிகத் துடிப்புடன் காணப்படும், இதன் காரணமாக, இரத்த ஓட்டம் அதிகரித்து, இதயப் படபடப்பு அதிகமாகிறது.

மனச்சோர்வு, அதீத மன எழுச்சி காரணமாக இதயம் சுருங்கி விரியும் தன்மையில், பாதிப்பு ஏற்பட்டு, அதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இறைவன் இந்த உலகில் எல்லோருக்கும் பொதுவாக, எந்த செலவுகளுமின்றி,எல்லா நோய்களிலிருந்தும் குணமாக, நிறைய இயற்கை வளங்களைப் படைத்திருக்கிறான், அவற்றில் முதன்மையானது, மூலிகைகள்.

Herbs that cure heart diseases and blood pressures

தெய்வீகத்தன்மைகள் கொண்ட மூலிகைகளின் மூலம் நாம், இன்றைய நவீன கால நோய்களிடமிருந்துகூட, தப்பிக்கலாம், சில மூலிகைகள் நம் கண் எதிரிலேயே இருக்கும், அதன் அருமை தெரியாமல், நாம் கடந்து செல்வோம், சில மூலிகைகள் அடர்ந்த காடுகளில் தானாக வளர்ந்திருக்கும், அவை கொடியோர் கைகளில் சிக்கக்கூடாது என எண்ணியே, இயற்கையே அவற்றை யாருமறியாமல், காடுகளில் வளர வைத்திருக்கும்.

நல்லவேளையாக, இதய நோய் மற்றும் இரத்த அழுத்த நோய்களுக்குத் தேவையான மூலிகை மருந்துகளை இயற்கை, நமக்கு மிக அருகிலேயே, வைத்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெண்தாமரை மலர் :

வெண்தாமரை மலர் :

மலர்களிலே தெய்வீக மலர் என்றால், அது கல்விக்கடவுளாக வணங்கும் சரசுவதி தேவி வசிக்கும் தாமரை மலர்கள் என்று அனைவரும் அறிவர்.

செந்தாமரை மற்றும் வெண்தாமரை என இரண்டு வகை தாமரை மலர்கள் இருந்தாலும், வைத்தியத்திற்கு வெண்தாமரையே உகந்தது.

வெண்தாமரை மலர்களின் மடல்களை சேகரித்து அவற்றைப் பொடியாக்கி, அத்துடன் தேன் அல்லது சர்க்கரை கலந்து அதிகாலையில் சாப்பிட்டுவர, இதய நோய் மற்றும் இரத்த அழுத்தம் எல்லாம் படிப்படியாக, குணமடைந்து வரும்.

மேலும், வெண்தாமரைப் பொடியுடன் மருதம்பட்டைப் போட்டியும் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தாலும், இதய நோய் பாதிப்புகள் நீங்கும்.

செம்பருத்தி மலர் :

செம்பருத்தி மலர் :

மேலும், ஒரு அற்புத மலர், செம்பருத்தி, இதன் மடல்களையும் வெண்தாமரை மலர்களைப்போல காலையில் சாப்பிட, இதய நோய் பாதிப்புகள் தீரும்.

மேலும் இதய நோய் பாதிப்பு இல்லாதோரும் இந்த அரிய மலர்களை சாப்பிட்டுவர, இதய நோய் வராமல் தடுக்கலாம்.

ஒரு வேளை, இவை உங்களுக்குக் கிடைப்பதில் தாமதம் என்றால், இந்த மலர்களைப் போலவே அல்லது மேலாகவே, இதய நோயை சரிசெய்யும் ஒரு அற்புத மூலிகையைக் கொண்டும், இதய நோயை விரட்டலாம். என்ன அது?

 சிறிய வெங்காயம் :

சிறிய வெங்காயம் :

சிறிய வெங்காயம் தான் அது. மிக அரிய பலன்களை தன்னகத்தே கொண்டு, காண்பவர்க்கு எல்லாம், தன்னிடத்தில் உரிக்க உரிக்க வேறு ஒன்றுமில்லை, என அடக்கமாக இருக்கும்.

மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிதான சிறிய வெங்காயம் ஆற்றும் அரும் பெரும் நற்செயல்களைப் பார்க்கலாமா? காலை வேளைகளில், அய்ந்தாறு சிறிய வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, இதய நோய்கள் மற்றும் இரத்த அழுத்தமும் சரியாகும்.

 இஞ்சி சாறுடன் தேன் :

இஞ்சி சாறுடன் தேன் :

இதய நோயை போக்க, .தேன் கலந்த இஞ்சி சாறும் அருந்தி வரலாம், ஆயினும், வயிற்றுப் புண் உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும். மேலும், சுட்ட அல்லது வேக வைத்த பூண்டையும் சாப்பிட்டு வர, இதயப் பாதிப்புகள் விலகிடும்.

நிரந்தரமாக நோய்களை தடுக்க:

நிரந்தரமாக நோய்களை தடுக்க:

மன இறுக்கம், மனச் சோர்வை நீக்கி, எப்போதும் நல்ல சிந்தனையுடன் இருக்கணும். இரவில் நீண்ட நேரம் கண்விழிக்காது, அமைதியாக உறங்க வேண்டும்.

மதுவும் புகையும் வேண்டாமே!

உடற்பயிற்சி அல்லது யோகாசனம் மிக நல்லது, அதிலும் நல்லது மூச்சுப்பயிற்சி! கீரை, காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் சாப்பிடலாம்.

நடுத்தர வயது என்று இல்லாமல், அனைவரும், உணவுக் கட்டுப்பாட்டினை பின்பற்றி, குறைந்த அளவு சர்க்கரையை உபயோகித்து, பொரித்த உணவுகளை தவிர்த்து, அதிக குளிர்ச்சி மற்றும் அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை விலக்கி, முடிந்தவரை இயற்கை உணவு வகைகளையே அதிகம் உண்பது என்ற முறையில் உணவுப் பழக்க வழக்கத்தை, மாற்றி அமைத்துக் கொண்டால், இறுதிவரை நோய் நொடிகளின்றி, நம் முன்னோரைப்போல, நாமும் தோற்றப்பொலிவுடன் கம்பீரமாக கடைசிவரை, நலமுடன் வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Herbs that cure heart diseases and blood pressures

Herbs that cure heart diseases and blood pressures
Story first published: Tuesday, June 20, 2017, 9:00 [IST]
Subscribe Newsletter