For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் நீங்க 'இத' சாப்பிட்டா உங்களுக்கு கொலஸ்ட்ரால் & இதய நோய் ஏற்படாமல் இருக்குமாம் தெரியுமா?

தினமும் ஒரு சில அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு எளிய வழியாகும்.

|

நீங்கள் அடிக்கடி நட்ஸ்கள் சாப்பிடுவதை விரும்புவீர்களானால், உங்கள் முதல் பட்டியலில் அக்ரூட் பருப்புகளை வைத்திருங்கள். ஏனெனில், அக்ரூட் பருப்புகள் உங்கள் உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ள கூடிய மிகவும் சத்தான உணவுகளில் ஒன்றாகும். இதில் ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அக்ரூட் பருப்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஆகையால், இது ஒமேகா -3 கொழுப்பின் ஓர் வளமான ஆதாரமாகும். இது இருதய ஆரோக்கியத்தில் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

How walnuts can improve your heart health in tamil

ஒரு புதிய ஆராய்ச்சியின் படி, ஆரோக்கியமான முதியவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு சில அக்ரூட் பருப்புகள் (சுமார் 1/2 கப்) சாப்பிட்டால், குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அல்லது எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைத்தனர். ஆய்வின் கண்டுபிடிப்புகள் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் முதன்மை இதழான 'சுழற்சி' யில் வெளியிடப்பட்டன. தினமும் அக்ரூட் பருப்புகளை உட்கொள்வது இதய நோய் அபாயத்தை முன்னறிவிக்கும் எல்டிஎல் துகள்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. தினமும் அக்ரூட் பருப்புகள் சாப்பிடுவதால் உங்கள் கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் அபாயம் குறையுமா என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How walnuts can improve your heart health in tamil

Here we are talking about the eating walnuts daily can lower your cholesterol and risk of heart disease: Study.
Desktop Bottom Promotion