Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
இதய கோளாறுகளை தடுக்கணுமா...? அப்போ தினமும் இந்த நட்ஸ்(பருப்பு)களை சாப்பிட்டு வாருங்கள்...
நம் உடல் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்றாகும். இன்றைய நவீன உலகில், உடல் நலத்தை பற்றி கொஞ்சம் கூட அக்கறையே இல்லாமல் நாம் ஒரு இயந்திரம் போல பணத்தை மட்டுமே சம்பாதித்து கொண்டிருக்கின்றோம். இது நிச்சயம் ஆரோக்கியமான சூழலையும், நலமான உடல் அமைப்பையும் தராது. உடல் உறுப்புகளில் முக்கியமானதாக கருதப்படுவது இந்த இதயம் தான்.

இதன் துடிப்பு நின்று விட்டால் நாம் எல்லோரும் அவ்வளவுதான். இதயத்தை நம்மில் பலர் கண்டுகொள்வதே இல்லை. இது பல்வேறு வகையான பின்விளைவுகளை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எவ்வாறு நாம் இதயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதையும், எந்தெந்த பருப்பு வகைகள் இதயத்தை நலமாக பார்த்து கொள்ளும் என்பதை பற்றறியும் இந்த பதிவில் அறிவோம்.

முதன்மையான உறுப்பு..!
நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதில் மிக முக்கிய ஒன்றாக இதயம் சார்ந்த நோய்களும் அடங்கும். நம்மில் அதிகமானோர் விபரீதத்தின் விளிம்பில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதய நோய்களில் இந்த பருப்பு வகைகள் காக்கும் என மருத்துவர்கள் சொல்கின்றனர்.

ஆரோக்கியமான உணவுகள்...
பல வகையான உணவுகள் இங்கு இருந்தாலும், ஒரு சில உணவுகளே நம் உடல் நலத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் உதவுகிறது. அந்த வகையில் இந்த நட்ஸ்களும் அடங்கும். இவற்றில் எண்ணற்ற நலன்கள் இருக்கின்றன. குறிப்பாக, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்
பொட்டாசியம்
மெக்னீசியம்
ஃபோலேட்
வைட்டமின் பி,ஈ
செலினியம்
பாஸ்பரஸ்
போன்றவை நிறைந்துள்ளன.

வால்நட்ஸ்
ஏராளமான நன்மைகள் இந்த வால்நட்ஸில் உள்ளதாம். தினமும் வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் இதயத்தில் எந்த வித பாதிப்பும் வராமல் பார்த்து கொள்ளலாம். மேலும், இதில் அதிக ளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. எனவே, இரத்தம் உறைவதை இது தடுக்கும் ஆற்றல் கொண்டது.

பிஸ்தா
சாப்பிடுவதற்கு மிகவும் சுவையான பருப்பு வகைகளில் இந்த பிஸ்தாவும் ஒன்று. தினமும் பிஸ்தா சிறிதளவு சாப்பிட்டு வந்தால் உடலின் ஆரோக்கியம் மேம்படும். இதில், குறைந்த அளவே கிளைசெமிக் இன்டெஸ் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் கூட இதனை சாப்பிடலாம் என ஆராய்ச்சிகள் சொல்கிறது.

பாதாம்
கெட்ட கொலஸ்டரோலை குறைக்கும் தன்மை இந்த பாதாமிற்கு இருக்கிறதாம். அத்துடன் நார்சத்து, மெக்னீசியம், காப்பர், கால்சியம், பொட்டாசியம் போன்ற இதயத்தை பத்திரமாக பார்த்து கொள்ளும் முக்கிய ஊட்டசத்துக்கள் இதில் உள்ளது. அர்ஜினைன் என்ற முக்கிய அமினோ அமிலம் இதில் இருப்பதால், ரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்பை தடுத்து, ரத்தம் செல்லும் பாதையை சீராக வைத்து கொள்ளும்.எனவே, ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வரமால் இருக்கும்.

முந்திரி
சமையலுக்கு அதிகம் சேர்க்க்கப்டும் இந்த முந்திரியில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஈ அதிகம் இதில் நிறைந்துள்ளது. இது ரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய தொற்றுக்களை அடியோடு தடுத்து விடுமாம். மேலும், ஆரோக்கியமான உடல் அமைப்பையும் இது தரும்.

ஹஸில்நுட்ஸ்
ரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள இந்த ஹஸில்நுட்ஸ் உதவும். இவற்றில் ஒலிக் ஆசிட் என்ற முக்கிய அமிலம் இருக்கிறது. இவை உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்டரோலை குறைக்க நன்கு பயன்படும். மேலும், இதில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் மாரடைப்பு போன்றவை வராமல் காக்கும்.

வேர்க்கடலை
ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் ஏராளமாக நிறைந்துள்ளது. இதில் சோடியம் அதிக அளவில் இருப்பதால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் பார்த்து கொள்ளும். மேலும், இதயத்தின் செயல்பாட்டை சீராக நடத்த இவை வழி செய்யும். வேக வைத்த வேர்க்கடலை, பீனட் பட்டர் போன்றவை நல்ல உணவு பொருட்களாகும்.

ப்ரசிலியன் நட்ஸ்
அதிக சத்துக்கள் இந்த வகை நட்ஸ்களில் உள்ளதாம். இவை உடலின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஆரோக்கியமான உடல் நலனை பெற இந்த பிரேசிலின் நட்ஸ்கள் பயன்படும். மேலும், இதய கோளாறுகள் ஏற்படாமலும் இவை தடுக்குமாம்.
இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications