For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ரக எண்ணெயை நீங்க சமையலுக்கு யூஸ் பண்ணவே கூடாது என தெரியுமா?

எந்த எண்ணெயை நீங்கள் பயன்படுத்தினால் ஆரோக்கியம் கிடைக்கும். எந்த எண்ணெயை நீங்கள் பயன்படுத்தக் கூடாது என இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

|

வத்தல் மற்றும் காரக் குழம்புக்கு நல்லெண்ணெயும், பாசிப்பருப்பு துவையலுல்க்கு தேங்காய் எண்ணெயும், கடலெண்ணெயில் செய்த முறுக்கும் எப்படி ருசியை தருகின்றன என அவற்றை சாப்பிட்டிருந்தால் உனர்ந்திருப்பீர்கள்.

இப்போது கொழுப்பு, தீங்கு என்று எண்ணெய் முற்றிலும் தவிர்ப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஆனால் நாம் கட்டாய தேவைப்படும் அளவு எண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல் விளம்பரங்களில் வருவது போல் அந்த எண்ணெய் இதயத்திற்கு நல்லது என எந்த வித சத்துக்களும் இல்லாடஹ் எண்ணெயைப் பற்றியும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எண்ணெய் ஏன் அவசியம் வேண்டும்?

எண்ணெய் ஏன் அவசியம் வேண்டும்?

உணவில் அன்றாடம் 20-25% கொழுப்புச் சத்து அவசியம் தேவை மூட்டுகள், இரைப்பை, குடல் இலகுவாக இயங்கவும் நரம்புகள், இரத்த நாளங்களின் போஷாக்கிற்கும், தோலின் மிருதுவான வளையும் தன்மைக்கும், உடலின் அத்தியாவசிய நொதிகள் உற்பத்தி செய்யவும் இன்றியமையாதது.

எண்ணெய் பயன்படுத்தும் அளவில் கவனம் தேவை. ஏனெனில், சர்க்கரைச் சத்து உடலில் வெளியிடும் சக்தியை (கலோரி) விட, இரு மடங்கு சக்தியை கொழுப்புச் சத்து வெளியிடுகிறது.

எந்த எண்ணெய் நல்லது?

எந்த எண்ணெய் நல்லது?

ஒரு மரபில், மண், விவசாயம், உணவு உற்பத்தி, சமையல், ஆரோக்கியம் முதலிய ஐந்தும் முக்கியமாக இருக்கின்றன.

இந்தியாவின் வடக்கு, கிழக்கில் கடுகு எண்ணெயும்; தெற்குப் பகுதிகளில், கடலை/நல்லெண்ணெயும், கேரளத்தில் தேங்காய் எண்ணெயும் பாரம்பரியமாய் பயன்படுத்தப்பட்டு வந்தன. சீதோஷ்ண நிலை, சமையல் முறை அடிப்படையில், நம் உடலின் ஜீன்கள் ஆயிரம் வருடங்களாய் இந்த எண்ணெய்களுக்குப் பழக்கப்பட்டு விட்டன.

விளம்பர யுக்தி :

விளம்பர யுக்தி :

உலகமே வியாபார மயமாக்கப்பட்டபின் கடந்த 25 வருடங்களில் லாப மதிப்பு மட்டுமே நோக்கமாய்க் கொண்ட பன்னாட்டு சக்திகளின் திட்டமிட்ட அரங்கேற்றம் மூலம்தான், சன் பிளவர் ஆயில், சோயா ஆயில், பாமாயில், ஆலிவ் ஆயில் என பல வந்தேறி எண்ணெய்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதயத்திற்கு நல்லது என பல எண்ணெய்கள் விளம்பரத்தப்படன. இதனால் நமது பல்லாயிரம் வருட எண்ணெய் பாரம்பரியத்தை இன்று குற்றுயிரும், குலையுயிருமாய் கிடத்தியிருக்கின்றன.

அறிவியல் பூர்வமான விஷயம் :

அறிவியல் பூர்வமான விஷயம் :

25 வருடங்களில், இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்கள் 60% நம் வீடுகளை ஆக்கிரமித்த பின்பும், ஏன் இந்தியர்களின் இதயங்கள் காக்கப்படவில்லை? முன்பு எப்போதும் இருந்ததைவிட இதயநோயும், சர்க்கரையும், உடற்பருமனும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என உலக சுகாதார மையம் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிரூபிக்கப்பட்ட முக்கிய உண்மைகள் :

நிரூபிக்கப்பட்ட முக்கிய உண்மைகள் :

PUFAக்களில், நல்ல கொழுப்பை அதிகரித்து நன்மைதரும் N-3 PUFA மற்றும் இதய நோய் புற்று நோயை தரும் உடலுக்கு வேண்டாத N-6 PUFA என இருவகையுண்டு. நம் நாட்டு எண்ணெய்களில் N-3 PUFA அதிகம் எனவும், சன் பிளவர், பாமாயிலில் N-6 PUFA அதிகம் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக எண்ணெயை ஒருமுறை உபயோகித்து மறுமுறை உபயோகிக்கக் கூடாது என கெள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நம்ம ஊர் எண்ணெய்களுக்கோ இயற்கையிலேயே அதிக கொதிநிலையைத் தாங்கும் தன்மை உண்டு என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் :

தாய்ப்பாலில் கிடைக்கும் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் லாரிக் அமிலம், தேங்காய் எண்ணெயில் இருக்கிறது. உண்மை தெரிந்துதான், மேற்கில் தற்போது ‘விர்ஜின்' தேங்காய் எண்ணெயின் ஏற்றுமதி வணிகமாகத் தலைதூக்கியுள்ளது.

செக்கு எண்ணெயா? ரீஃபைண்ட் எண்ணெயா?

செக்கு எண்ணெயா? ரீஃபைண்ட் எண்ணெயா?

செக்கு எண்ணெய்:

வித்துக்களை வெறுமனே நசுக்கி, அரைத்து, குறைந்த வெப்பத்தில் பிழியப்படும்போது, நிறம், நறுமணம், ஊட்டச்சத்தும் முழுமையாக காக்கப்படுகிறது. நம்ம ஊர் கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவைகள்தான்

செக்கு எண்ணெயா? ரீஃபைண்ட் எண்ணெயா

செக்கு எண்ணெயா? ரீஃபைண்ட் எண்ணெயா

ரீஃபைண்ட் எண்ணெய்:

வணிக லாபமும், வெள்ளை மோகமும், கூடிக் குலாவிப் பெற்றது ரீஃபைண்ட் ஆயில். அதிக லாபத்திற்காக அதிக வெப்பத்தினாலும், பள பள நிறத்திற்காக கெமிக்கல் பயன்பாட்டினாலும், ரீஃபைண்ட் எண்ணெய்களில் நாம் மணத்தையும், நிறத்தையும் இழக்கிறோம். சன்ஃப்ளவர் எண்ணெய், பாமாயில், சோயா என்ணெய் போன்றவை உடலுக்கு தீங்கு தரக் கூடியவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These types of oil you should not use for cooking.

These types of oil you should not use for cooking.
Desktop Bottom Promotion