உங்கள் இதயத்துடிப்பை பாதிக்கும் காரணிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

இதயம் நன்றாக இயங்குகிறது என்பதன் முதல் அறிகுறி இதயத்துடிப்புதான். உடல் நலம் பரிசோதிகப்படும்போது முதலில் நாம் பரிசோதிப்பது இதயத்துடிப்பைதான்.

சாதரண நிலையில் ஒரு மனிதனின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 60-75 வரை துடிக்கும். இது இயல்பானது. பிறந்த குழந்தைகளுக்கு 70-190 என இருமடங்கு அதிகமாக இதய துடிப்பின் விகிதம் இருக்கும். பிறகு வளர வளர படிப்படியாக குறைந்து பிள்ளைகளுக்கு 80- 120 வரை இருக்கும். வயதானவர்களுக்கு மிகவும் குறைவாக இருக்கும்.

உங்களுக்கு காய்ச்சல் இருந்தாலும் இதயத்துடிப்பின் வேகம் அதிகரிக்கும். இவ்வகையில் இதயத்துடிப்பின் வேகம் அதிகரிக்க வெளிப்புற காரணன்ங்கள் எவை என பார்க்கலாமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலின் வெப்ப நிலை :

உடலின் வெப்ப நிலை :

கோடை காலத்தில் அல்லது வெப்பமான பகுதிகளில் இதயத்துடிப்பு அதிகரிக்கும். சாதரணமாக உடலின் வெப்ப நிலை 98டிகிரிதான். உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது இதய துடிப்பும் மாறுபடும். சாதரண இதயத்துடிப்பை விட அதிகம் துடிக்கும்

 உணவு சாப்பிட்ட பின் :

உணவு சாப்பிட்ட பின் :

உணவு சாப்பிட்ட பின் இதயம் ரத்தத்தை சிறுகுடல் மற்றும் இரைப்பை நோக்கி செலுத்துவதால் இதயத்துடிப்பு அதிகரிக்கும். அதிய உணவு சாப்பிட்டதும் வேகமான இதயத்துடிப்பின் நேரமும் அதிகரிக்கும்.

உடற்பயிற்சியின்போது :

உடற்பயிற்சியின்போது :

உடற்பயிற்சியின்போது இதயம் அதிக ஆக்ஸிஜனை உட்கிரகிப்பதற்காககவும் கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றவும் தனது துடிப்பை அதிக்கரிக்கச் செய்கின்றது. நீர்சத்து குறைந்தாலும் இதயத் துடிப்பு அதிகரிக்கும்.

வயது :

வயது :

குழந்தைகளுக்கு இருமடங்கு இதயத்துடிப்பு உண்டாகும். வயது அதிகரிக்கும்போது, முதுமைஅடையும் போது இதயத் துடிப்பு குறைந்துவிடும்.

பாலினம் :

பாலினம் :

பெண்களுக்கு ஆண்களை விட அதிக இதயத்துடிப்பு இருக்கும். ஹார்மோன் சம நிலை செய்வதற்காகவும், வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தவும் இதயத் துடிப்பு ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கும்.

காஃபி, தேநீர் :

காஃபி, தேநீர் :

காஃபி மற்றும் தே நீர் நரம்பு மண்டல்த்தை தூண்டுவதால் இதயத்துடிப்பின் வேகமும் அதிக்கரிக்கின்றது. இவையோடு கோகோ கலந்த உணவுப் பொருட்களும் அட்ரினல் சுரப்பியை தூண்டுகிரது. இந்த சுரப்பியே இதயத் துடிப்பு அதிகரிக்க காரணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Factors that influence your heart rate

Factors that influence your heart rate
Story first published: Tuesday, January 17, 2017, 12:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter