நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதற்கும், இதய நோய்க்கும் என்ன சம்பந்தம்?

Posted By:
Subscribe to Boldsky

அலுவலகத்தில் கொடுக்கப்படும் அதிகப்படியான வேலைப்பளுவால், நிறைய பேர் கண்களுக்கு கூட ஓய்வு கொடுக்காமல் எந்நேரமும் கம்ப்யூட்டர் திரையை பார்த்த படியும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தவாறும் இருக்கின்றனர்.

இப்படி உடலுழைப்பு இல்லாமல் அமர்ந்தவாறு ஓரே இடத்தில் அமர்ந்திருப்பதால், பல்வேறு நோய்களால் அவஸ்தைப்பட நேரிடும் என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அதில் ஒன்று இதய நோயால் பாதிக்கப்படக்கூடும் என்பது. இங்கு நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது எப்படி இதய நோய்க்கு வழிவகுக்கிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, இனிமேல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆழமான நரம்பு இரத்த உறைவு (DVT)

ஆழமான நரம்பு இரத்த உறைவு (DVT)

நீண்ட நேரம் உடலுழைப்பு இல்லாமல், ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால், அதன் காரணமாக ஆழமான நரம்பு இரத்த உறைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. இது அப்படியே முற்றினால், அது திடீர் மாரடைப்பை உண்டாக்கி மரணத்திற்கு வழிவகுக்கும்.

உடல் பருமன்

உடல் பருமன்

ஒருவர் 6-8 மணிநேரம் உடலுழைப்பு ஏதும் இல்லாமல், ஒரே இடத்தில் அமர்ந்தவாறு இருந்தால், அதன் காரணமாக உடல் பருமனால் கஷ்டப்படக்கூடும். ஏனெனில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால், உண்ட உணவுகளில் இருந்த கொழுப்புக்கள் அப்படியே அடிவயிற்றில் தங்கி, இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் இடையூறை உண்டாக்கும்

கரோனரி இதய நோய்

கரோனரி இதய நோய்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால், அதனால் கரோனரி இதய கால்சியமேற்றலுக்கு வழிவகுத்து, கரோனரி இதய நோயை உண்டாக்கும். எப்படியென்றால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் போது, தமனி சுவர்களில் கால்சியத்தைப் படிய வைக்கும் ஹார்மோன்கள் மற்றும் நொதிகளின் உற்பத்தி தூண்டிவிடப்பட்டு, இதய நோயின் அபாயம் அதிகரிக்கும்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வதால், உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் ஒருவருக்கு வந்தால், அதனால் இதய நோய் வரும் அபாயம் இரட்டிப்பாக இருக்கும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

ஒருவர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தவாறே இருந்தால், அதனால் டைப்-2 சர்க்கரை நோயால் அவஸ்தைப்படும் அபாயம் அதிகரிக்கும். மேலும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருந்தால், குளுக்கோஸின் தேக்கம் அதிகரித்து, உடலின் ஆற்றல் குறைந்து, உடல் பருமன், சர்க்கரை நோய் போன்றவை ஏற்பட்டு, அதன் காரணமாக இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Ways Sitting For Long Can KILL The Heart

Here are some ways sitting for long can kill the heart. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter